Jan 20, 2011

My computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி?

4 Comments

Cd drive not detecting problemகணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது சிடி/டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) எனப்படும். சில நேரங்களில் சிடி டிரைவில் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது சிடி டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதை எப்படி சரி செய்வது?
Read More

Jan 13, 2011

புகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச மென்பொருள் + இணையதளம்.

5 Comments

வண்ணப் புகைப்படங்கள் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது என்றாலும் சில நேரங்களில் அந்தக்கால கருப்பு வெள்ளையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களும் உண்டு. மேலும் சில நேரங்களில் வண்ணப் புகைப்படத்தை கருப்பு வெள்ளையில் மாற்றி பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு. சில படங்களுக்கு வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருளுக்கு போகத்தேவையில்லை.
Read More

Jan 12, 2011

எக்சலில் Conditional Formatting : தகவல்களை குறிப்பிட்ட நிபந்தனைப்படி தனித்துக்காட்ட..

11 Comments

MS Excel இல் அட்டவணையாக அமைந்த தகவல்களை வரிசை மற்றும் நெடுவரிசையாக வைத்து பயன்படுத்தலாம். இதில் ஒரு கோப்பை Spreadsheet என்பர். ஒரு கோப்பில் நிறைய எண்கள் மற்றும் சொற்கள் அடங்கிய தகவல்கள் இருக்கலாம். எதாவது ஒரு வரிசையில் அடங்கிய தகவல்களை அழகுபடுத்த Format சென்று வண்ணங்களை மாற்றுவோம்; எழுத்துகளின் அளவை பெரிதாக்குவோம்; பின்புறத்தில் உள்ள வண்ணத்தை மாற்றுவோம். ஆனால் ஒரு பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட செல்களை (Cell) மட்டும் வண்ணத்திலோ அல்லது வேறு வகையிலோ எப்படி வித்தியாசப்படுத்திக் காட்டுவது? இதற்கு உதவுவது தான் Conditional Formatting ஆகும்.
Read More

Jan 11, 2011

ஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்வு, Domain Name பெறுதல்

13 Comments

Google Adsenseஇணையத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) மட்டுமே பணத்தை அள்ளித்தருகிறது. அதனால் ஆட்சென்ஸில் கணக்கு பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. முதலிலிலேயே சொல்லி விடுகிறேன். தமிழில் எழுதி ஆட்சென்ஸ் கணக்கு பெற முடியாது. அதனால் ஆங்கிலத்துக்கு மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் இன்ட்லி, தமிழ்மணம் போன்ற தளங்களுக்கு எப்படிக்கொடுத்தார்கள் எனக்கேட்கிறிர்களா? இந்த தளங்களுக்கு தினசரி டிராபிக் அதிகமாக இருக்கும். ஆட்சென்ஸ் வாங்குவது தான் சிரமமாக இருக்கும். பின்னர் அதன் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு எளிதாக பயன்படுத்தலாம்.
Read More

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த குறுக்குவிசைகள் (Keyboard shortcuts)

Facebook keyboard shortcutsநாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் சமூக வலைத்தளங்களில் (Social Networking sites) பேஸ்புக் தான் முதலிடத்தில் உள்ளது. பல சமுக வலைத் தளங்களை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலும் முதலிடத்தில் இருந்த ஆர்குட் (Orkut) தளத்தையும் பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிலர் காலையிலிருந்து இரவு வரை பேஸ்புக்கிலேயே தான் அரட்டையடிப்பதும் பொழுதுபோக்குவதுமாய் இருக்கின்றனர். பேஸ்புக்கை வேகமாகவும் சுலபமாகவும் பயன்படுத்த விசைப்பலகையின் குறுக்குவிசைகளைப் (Keyboard shortcuts) பயன்படுத்தலாம்.
Read More

Jan 10, 2011

தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின் கட்டண விபரங்களும்

17 Comments

3G Data cards and internet tarrifsஆரம்பகாலங்களில் இணையம் பயன்படுத்திய போது இது ஒரு பொறுமையை இழக்க வைக்கும் சோதனைக்குரிய விசயமாக இருந்தது. பின்னர் பிராண்ட்பேண்ட் இணைய சேவை வந்தபோது கொஞ்சம் நலமாக இருந்தது.இருந்தாலும் தொழில்நுட்ப உலகில் இதையும் மீறிய அதிவேக இண்டர்நெட் சாத்தியப்பட்ட நிலையில் பல நாடுகளில் 3G சேவை எறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஆனால் நமது நாடு 2G சேவையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. அதோ இதோ என்று இழுத்து இப்போது தான் 3G சேவையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.
Read More

Jan 8, 2011

கூகுளின் புதிய வசதி : Gmail Priority Inbox (மின்னஞ்சல்களின் முக்கியத்துவம்)

2 Comments

கூகிள் இன்றொரு புதிய வசதியை ஜிமெயில் இல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவை gmail priority inbox எனப்படுகிறது. நமக்கு தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வருகின்றன. இன்பாக்ஸில் நிறைந்து விடும் அத்தனை மின்னஞ்சல்களையும் நம்மால் படிக்க இயலாமல் சோர்ந்து போய்விடுவோம். குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்வதும் இதற்கு ஒரு தீர்வாகலாம்.இந்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சலை முக்கியமானது அல்லது முக்கியமற்றது எனக்குறித்து வைக்கலாம். முக்கியமானவற்றை மட்டும் முன்னிறுத்தி priority inbox காட்டுவதால் நமது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
Read More

Jan 5, 2011

Divx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் இலவசமாக

7 Comments

Divx என்றால் என்ன?


Divx என்பது Digital video Express என்பதன் சுருக்கமாகும். இது Divx inc நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ வகைகளுள் ஒன்றாகும் (Video format). இதன் மூலம் நம்மால் பெரிய அளவிலான வீடியோ கோப்புகளை சிறிய அளவில் சுருக்கி வைத்துக்கொள்ள முடியும். முக்கிய விசயம் என்னவென்றால் இதனால் வீடியோவின் தரம் குறைந்து விடாது என்பது தான்.
Read More