
வண்ணத்தில் அமைந்த புகைப்படங்களை எளிதான முறையில் கருப்பு வெள்ளை புகைப்படமாக நொடியில் மாற்றித்தருகிறது Black and white photo maker என்ற மென்பொருள். இதைத் தரவிறக்கி உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளவும்.

புகைப்படத்தை விட பெரிதாக்கப்பட்ட மற்றும் சிறிதாக்கப்பட்ட அளவுகள் இருக்கும். அல்லது நீங்களே விருப்பமான அளவினைக்கொடுக்கலாம். பின்னர் எந்த பார்மேட்டில் சேமிக்கப்பட வேண்டும் என்பதைக்கொடுத்தால் உங்கள் படம் கருப்பு வெள்ளையில் மாறிவிடும். இது jpg, bmp, gif, ico, tif போன்ற பட வகைகளை ஆதரிக்கிறது. படம் எப்படித் தெரியும் எனவும் காட்டப்படுகிறது.
தரவிறக்கச்சுட்டி: Black And White Photo Maker
இணையத்திலேயே இதற்கு ஒரு தீர்வும் இருக்கின்றது. Pixenate என்ற இணையதளம் புகைப்படங்களை இலவசமாக எடிட் செய்ய உதவுகிறது. இதன் மூலம் படங்களை வெட்டலாம். கோணங்களை மாற்றலாம். மேலும் பல எபெக்ட்களையும் செய்யலாம்.

இந்த தளத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து Show some fun Effects கிளிக் செய்து Black and white கொடுத்தால் உங்கள் படம் கருப்பு வெள்ளையாக மாறிவிடும். பின்னர் Save to disk கொடுத்தால் மாற்றப்பட்ட படம் உங்கள் கணிணியில் சேமிக்கப்படும்.
இணையதள முகவரி: http://www.pixenate.com
Tweet | |||
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபயனுள்ள தளங்களை பகிர்ந்தமைக்கு நன்றிங்க சகோ,
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....
ReplyDeleteபயனுள்ள பகிர்வு தேடிபிடித்து..... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
ReplyDeleteஉங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
தேவையான பயனுள்ள பகிர்வு பகிர்வுக்கு நன்றீ
ReplyDelete