Jan 11, 2011

ஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்வு, Domain Name பெறுதல்


adsensemoneymakingஇணையத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) மட்டுமே பணத்தை அள்ளித்தருகிறது. அதனால் ஆட்சென்ஸில் கணக்கு பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. முதலிலிலேயே சொல்லி விடுகிறேன். தமிழில் எழுதி ஆட்சென்ஸ் கணக்கு பெற முடியாது. அதனால் ஆங்கிலத்துக்கு மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் இன்ட்லி, தமிழ்மணம் போன்ற தளங்களுக்கு எப்படிக்கொடுத்தார்கள் எனக்கேட்கிறிர்களா? இந்த தளங்களுக்கு தினசரி டிராபிக் அதிகமாக இருக்கும். ஆட்சென்ஸ் வாங்குவது தான் சிரமமாக இருக்கும். பின்னர் அதன் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு எளிதாக பயன்படுத்தலாம்.

ஆட்சென்ஸ் வேண்டுமென்றால் உங்களிடம் ஒரு வலைத்தளம் அல்லது வலைப்பதிவு இருக்க வேண்டும்.

1.வலைத்தள நோக்கம் ( Website description)

வலைப்பதிவை ஆரம்பிக்கும் முன்னர் நீங்கள் என்ன மாதிரி எழுதப்போகிறிர்கள்,எதைப்பற்றி எழுதபோகிறிர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.உதாரணமாக தொழில்நுட்பம், விளையாட்டு, மென்பொருள்கள், சினிமா, பாலிவுட் போன்று எதாவது இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஆபாசமான விசயங்களாக இருக்கக்கூடாது. மேலும் வெறும் சினிமாப்படங்கள் அல்லது இயற்கைப்படங்கள் என போட்டோக்களை மட்டும் போட்டு ஆட்சென்ஸ் வாங்கிவிட முடியாது.

2.வலைத்தள இடைமுகம் (Webdesign Interface)

வலைப்பதிவை ஆரம்பிக்க Blogger தளத்திலிருந்து ஆரம்பிப்பது எளிது. இதில் சென்று வலைப்பதிவிற்கான பெயர், தலைப்பு போன்றவற்றைக் கொடுத்தபின்னர் Choose a Template பகுதியில் எதேனும் ஒரு அடைப்பலகையைத் தேர்ந்தெடுங்கள். இப்போது உங்களின் வலைப்பதிவு ரெடியாகிவிட்டது.

3.வலைத்தளத்திற்கான அடைப்பலகை ( Blog Template)

உங்கள் வலைத்தளத்திற்கான டிசைன் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு சரியான நேர்த்தியான அடைப்பலகையைத்தேர்வு செய்ய வேண்டும். இதைத்தான் Blog Template என்று சொல்வார்கள். இவை எளிதாக இலவசமாக இணையதளத்தில் நிறைய கிடைக்கின்றன. தேர்வு செய்யும் போது ஆட்சென்ஸ் விளம்பர சேவைக்குப்பொருத்தமாக உள்ளதா எனக்கவனிக்க வேண்டும். இதற்கு கூகிளில் தேடிப்பெறலாம்.
Adsense enabled templates
Adsense supported templates
Adsense blogger templates

போன்ற குறிச்சொற்களை வைத்து தேடுவதன் மூலம் ஆட்சென்ஸ்க்கு தகுந்த மாதிரி அடைப்பலகைகளை பெற்று பழைய அடைப்பலகையை மாற்றுங்கள்.

4. Domain Name வாங்குதல் (Web Address)

Domain Name என்றால் இணையத்தில் உங்கள் வலைத்தளத்திற்கான தனித்த முகவரியாகும். ஆனால் Blogger இல் வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு ஆட்சென்ஸ் கணக்கு வழங்கிவிடாது. ஆட்சென்ஸின் நிபந்தனைப்படி Top level Domain அதாவது முதல்நிலை வலைத்தளம் வைத்திருக்க வேண்டும். வலைப்பதிவு ஆரம்பிக்கும் போதே Domain Name வாங்கி பதிவு செய்வது அவசியமான ஒன்றாகும்.

எடுத்துக்காட்டாக : www.ponmalar.com இப்படி இருக்க வேண்டும். இது மாதிரி
இருப்பது தான் முதல் நிலை வலைத்தளம்.

Blogger இல் இணைந்து வலைப்பதிவை ஆரம்பித்தபின் நீங்கள் கொடுத்த பெயரோடு பின்னால் blogspot.com என்பது தான் முகவரியாக அமையும்.எடுத்துக்காட்டாக : www.ponmalars.blogspot.com இது Blogger என்ற மெயின் தளத்தில் நாம் வாடகைக்கு வலைப்பதிவை பயன்படுத்துவதைப்போல. இதில் நம்முடைய வலைப்பதிவின் முகவரி முதல்நிலை வலைத்தளமாக அமைந்துவிடாது.

5.Domain Name வாங்குவது எப்படி?

பிளாக்கர் தளத்திலிருந்தபடியே இணைய முகவரி வாங்குவதற்கு கூகிள் நிறுவனம் Godaddy இணையதளத்தோடு ஏற்பாடு செய்துள்ளது. இல்லாவிட்டால் நேரடியாக Godaddy, Net4India போன்ற இன்னபிற தளங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இதற்கு உங்களிடம் Credit Card இருக்க வேண்டும். இதற்கு ஒரு வருட செலவாக ருபாய் 400 லிருந்து 600 க்குள் அமையலாம். நீங்கள் விரும்பும் முகவரி காலியாக இருக்கிறதா என www.Instantdomainsearch.com
இல் தேடி உறுதிசெய்துகொள்ளுங்கள். உங்களது இணையமுகவரி சும்மா மொக்கையாக இருக்க வேண்டாம். சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் உங்கள் வலைத்தளத்தின் நோக்கத்திற்கேற்ப இருக்கட்டும். நீண்ட முகவரியெனில் சலிப்படையலாம். இரண்டு சொற்கள் வருமாயின் இடையில் Hyphen (-) குறியீடு கொடுத்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டுகள் :
www.techzone.com
www.karur-textiles.com

முன்பு வலைப்பதிவு எழுதிக்கொண்டிருந்த கார்த்திகேயன் என்ற நண்பர் Domain Name வாங்கித்தருவது, பதிவு செய்வது போன்றவற்றைச் செய்து தருவதாக நண்பர் வடிவேலன் சொன்னார். தேவையான பணத்தை அவரின் வங்கிக்கணக்கில் போட்டுவிட்டால் போதும். அவர் கொடுத்த தொலைபேசி எண்களும் அவரின் மின்னஞ்சல் முகவரியும் நினைவில்லை. வடிவேலனிடம் கேட்டுச்சொல்கிறேன்.

நிறை குறைகளை கண்டிப்பாக பின்னூட்டமிடவும்.
ஆட்சென்ஸ் பற்றிய தொடர்புடைய பதிவு:
100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ்

13 comments:

  1. alagu

    வரவேற்கிறோம் பொன்மலர் அவர்களே..! மிகச்சிறப்பாக கூறியிருக்கிறீர்கள்..! பகிர்வுக்கு நன்றி! இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தங்களது பாணியில் தொடர்ந்தால் நல்லது.. பலரும் பயனடைவார்கள்..!

    ReplyDelete
  2. Copy+of+RSCN0309

    Hi, thanks for the info. I already failed by writing my blog in tamil. can i create new blog with same mail ID & get adsense account..

    ReplyDelete
  3. blank

    நல்ல பதிவு

    ReplyDelete
  4. 40768654_2299775236716239_6505113035084922880_n
  5. 268790_234058363290756_100000597826814_886739_1226303_n

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த வான்காந்த மனோவியல் விஞ்ஞான பயிற்சி மையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி 16.01.11 அன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது .உடல் திடம் , மன வளம் ,அறிவு கூர்மை ,செயல் திறன் , பண்பாடு ஆகியவை பற்றிய பயிற்சியை மலேசிய நாட்டு பயிற்சியாளர்கள் வழங்குகின்றனர்.

    Read more: http://karurkirukkan.blogspot.com/2011/01/blog-post_2902.html#ixzz1AuG0pHhr

    ReplyDelete
  6. imageskyhfgj

    நான் தேடிஅலைந்த தகவலை கொடுத்ததற்கு நன்றி.மற்ற தகவல்களும் பயனுள்ளவைகளாக இருந்தது.என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

    ReplyDelete
  7. imageskyhfgj

    நான் சிலநாள் பல தளங்களில் தேடிய தகவல் இங்கு தான் கிடைத்தது.பயனுள்ள பதிவை தந்ததற்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. blogger_logo_round_35

    வணக்கம்!

    உங்களுக்கு முதல்நிலை வலைப்பக்கமான டொமைன் பதிவு செய்ய வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளலாம். செலவு வெறும் ஆண்டுக்கு 10$ தான் ஆகும். உங்களது டொமைனை கூகுள் ப்ளாக்கிலே இலவசமாக கோஸ்ட் செய்து கொள்ளலாம்.
    விவரமாக என்னை அறிய > www.padukai.com

    =================

    மேலும் உங்களிடம் நான் எதிர்பார்ப்பது... தமிழ் வலைப்பூக்களில் எப்படி கூகுள் விளம்பரத்தை பப்ளிக் சர்வீஸ் இல்லாமல் தொடர்வது?

    உங்களது பதிலை எனது வலைப்பக்கத்தில் பதிந்தால் 100க்க்கும் மேற்பட்டவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்...

    இன்று பலர் என்னிடம் இதை பற்றி கேட்பதால், அந்த தேடலில் உள்ளேன். உங்களது பக்கத்தை பார்த்ததும்... நீங்கள் அறிந்திருக்க கூடும் என்பதனாலே இப்பின்னூட்டம்...

    என் களம் படுகை.காம்

    ==================

    ReplyDelete
  9. blogger_logo_round_35

    Thank miss ponmalar,

    by
    http://tcelebrities.blogspot.com/

    ReplyDelete
  10. blogger_logo_round_35

    This comment has been removed by the author.

    ReplyDelete
  11. blogger_logo_round_35

    This comment has been removed by the author.

    ReplyDelete
  12. DSC00499

    i need ur email id to clear doubts about adsence and msexcell

    ReplyDelete
  13. blogger_logo_round_35

    aama neenga mattum tamil blogger la adsense pottu irukkingale eppadi???????????????

    ReplyDelete