Mar 31, 2014
ஃபேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
use facebook in excel sheet
நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக் பயன்படுத்தவும் மற்றவர்களுக்குப் பார்த்தாலும் கண்டறிய முடியாத வசதியை Hardlywork.in எனும் தளம் தருகிறது. இது தோற்றத்தில் ஒரு எக்சல் ஷீட்டில் (MS-Excel Sheet) வேலை செய்வது போன்று காட்சியளிக்கும். ஆனால் இதில் உங்கள் Facebook NewsFeed, Wall, Messages, Likes, Comments என அனைத்தையும் எக்சல் ஷீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம்.
use facebook in excel sheet
முதலில் Hardlywork.in தளத்திற்குச் சென்று ” Gimme dem spreadsheets” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் Facebook ஐடி / பாஸ்வேர்டு கொடுத்து Login செய்யவும்.
Also Read:  ப்ளாக்கரில் நீளமான விட்ஜெட்களை Scrolling முறையில் வைக்க
அடுத்து உங்கள் பேஸ்புக் ப்ரோபைலை இந்த தளம் பயன்படுத்த அனுமதி கேட்கும். Okay பட்டனைக் கிளிக் செய்யுங்கள். இப்போது எக்சல் ஷீட் போன்று தளத்தில் தோன்றும். இதனைப் பயன்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்.
use facebook in excel sheet
1. மூன்று வகையான Themes உள்ளன. (Mac,Excel 2003 and Excel 2007)
2. நண்பர்களைத் தேட Excel Functions bar இல் அடித்துத் தேடலாம்.
3. உங்களுக்கு வரும் Notification / செய்திகளைக் கிளிக் செய்து பார்க்கலாம்.
4. Load More பட்டன் மூலம் பழைய செய்திகளைப் பார்க்கலாம்.
5. Hover வசதி - செய்திகளுக்கு அருகில் மவுசை வைத்தால் அதிலிருக்கும் படங்கள் / வீடியோக்களை Preview பார்க்கலாம். Likes and Comments எண்களின் அருகே மவுசைக் கொண்டு சென்றால் யாரெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
6. இது தான் முக்கியமான செயல். யாராவது தீடிரென்று வந்து விட்டால் Space Bar ஐத்தட்டுங்கள். சாதாரண எண்கள், கணக்குகள் நிறைந்த எக்சல் பைலாக தளம் மாறிவிடும்.
7. இந்தத் தளத்திலிருந்து Logout செய்யப் பயன்படும்.
Mar 30, 2014
நமது ப்ளாக்கில் பல வகையான விட்ஜெட்களை (Widgets) வைத்திருப்போம். உதாரணத்திற்கு Blog Archive, Labels, Popular Posts, Recent Posts போன்றவற்றைச் சொல்லலாம். இவைகளை வலது ஒர சைட்பாரில் (Sidebar) வைப்போம். குறைந்த பதிவுகள் உடையவர்களுக்கு Labels மற்றும் Blog Archive பகுதிகள் சரியான அளவில் இருக்கும். இதே அதிக வருடங்கள் எழுதி வரும் பதிவர்களின் ப்ளாக்கில் இவை நீளமாகத் தோன்றும். மேலும் இடத்தையும் அடைத்துக் கொள்ளும். இதனை சரி செய்து அழகாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
சில பதிவர்கள் 500 க்கு மேற்பட்ட பதிவுகளை எழுதியிருப்பார்கள். அதே போல Labels எனப்படும் வகைகள் 100 க்கு மேற்பட்டதை பயன்படுத்தியிருப்பார்கள். இவை ப்ளாக்கில் நீளமாகத் தோன்றி எரிச்சலூட்டும். இதனை List View இல் வைத்து தேவைப்பட்டால் Scrolling இல் வருவது போல செய்து விட்டால் ப்ளாக்கில் இட வசதியும் மிச்சமாகும். வாசகர்களுக்கும் எளிதாக இருக்கும்.
இதற்கு முதலில் உங்களின் விட்ஜெட் என்ன ஐடியில் / பெயரில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். வழக்கமாக பழைய பதிவுகள் #BlogArchive1 என்றும், வகைகள் #Label1 என்றும் இருக்கும். ஒரு சிலர் இரண்டு இடத்தில் Labels வைத்திருப்பார்கள். அல்லது ப்ளாக்கர் டெம்ப்ளேட் மாற்றும் போது அழித்து விட்டு புதிய விட்ஜெட்களை வைத்திருப்பார்கள். சரியான பெயரைக் கண்டுபிடிக்க Blogger Template சென்று Jump to Widget பட்டனைக் கிளிக் செய்தால் ப்ளாக்கின் அனைத்து விட்ஜெட்களின் பெயரும் தோன்றும்.
Also Read: தமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க
அடுத்து CSS நிரல் ஒன்றைச் சேர்க்க வேண்டும். இதில் உயரம் நீங்கள் விரும்பியவாறு வைத்துக்கொள்ளலாம். அந்த உயரத்திற்கு மேல் விட்ஜெட்கள் இருப்பின் Scrolling முறையில் காட்டப்படும். கீழே இருக்கும் நிரல்கள் பொதுவாக அனைத்து ப்ளாக்கிலும் செயல்படும். செயல்படாவிட்டால் விட்ஜெட்டின் சரியான பெயரைக் கண்டுபிடித்து மாற்றவும்.
#BlogArchive1 .widget-content{height:200px; width:auto;overflow:auto;}
#Label1 .widget-content{height:200px; width:auto;overflow:auto;}
இந்த முறையை எந்த விட்ஜெட்க்கும் பயன்படுத்தலாம். அதற்கு  சிவப்பு வண்ணத்திலிருக்கும் விட்ஜெட் பெயரை மாற்றி பயன்படுத்தலாம். மேலும் இதனை பதிவிற்குள்ளும் நீளமான நிரல்வரிகளை குறிப்பிடும் போதும் பயன்படுத்தலாம்.
இந்த நிரல்வரியைச் சேர்க்க Blogger Layout -> Template Designer -> Advanced -> Add Custom CSS சென்று நிரல்வரிகளை பேஸ்ட் செய்து Apply to Blog என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும்.  இதன் விளக்கமான வழிமுறைகளை CSS நிரல்களைச் சேர்க்க எளிய வழி என்ற பதிவில் பார்க்கவும்.
Mar 28, 2014
நாள்தோறும் பல வகையான விளம்பரங்கள் நமக்கு மின்னஞ்சலில் வருகின்றன. அதில் சில தளங்களில் நாமாகவே இணைந்து தினசரி சலுகைகள் மற்றும் விளம்பரங்களை மின்னஞ்சலில் பெறுவோம். உதாரணமாக Ebay, Magazine sites, Domain Hosting, Matrimonial, Shopping deals போன்றவை. இவைகள் Promotion Mails எனப்படும். ஆனால் பல சமயங்களில் நாம் இணையாத சில தளங்களிலிருந்தும் மின்னஞ்சல் வந்து நம்மை தொல்லை செய்யும்.  சிரமப்பட்டு அழித்தாக வேண்டும்.
Gmail promotion mails visual preview
இதற்கு கூகிள் ஜிமெயிலில்  Visual Preview of Promotion mails என்ற புதிய வசதியைக் கொண்டு வந்திருக்கிறது.  இதனால் அனைத்து விளம்பர மின்னஞ்சல்களும் குறும்படங்களாக (Thumbnail) பல கட்டங்களில் ஆன அமைப்பில் (Grid View) காட்டப்படும். இதில் அந்த விளம்பர வெப்சைட் பெயர், படம் மற்றும் முக்கிய செய்தியும் (Subject) மட்டுமே காட்டப்படும்.
இதனால் குறிப்பிட்ட கம்பெனி சலுகைகளை (same brand offers) எளிதாக கண்டுபிடிக்கலாம். தேவையானதை விரைவாக கிளிக் செய்து சலுகைகளின் பக்கங்களுக்குச் செல்லலாம். தேவையில்லாததை இங்கேயே உடனடியாக அழித்து விடலாம். மின்னஞ்சலைத் திறந்து பார்க்க வேண்டிய வேலையே இல்லை.
Also Read: தமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க
முக்கியமாக இந்த வசதி Promotions Tab பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. நீங்கள் பயன்படுத்தா விட்டால் Settings பட்டனைக் கிளிக் செய்து Configure Inbox என்ற பெட்டியில் Promotions என்பதில் டிக் செய்து கொள்ளவும்.
Gmail promotion mails visual preview
Normal View of Promotion Mails
இந்த Grid View அமைப்பில் வேண்டாம் என்றால் மேலிருக்கும் Switch to List பட்டனைக் கிளிக் செய்து வழக்கமான List View அமைப்பில் மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொள்ளலாம். இந்த வசதி எனக்கு வந்திருக்கிறது. உங்களுக்கு வரவில்லையெனில் இதன் Field Trail இல் இணைத்துக் கொள்ளவும்.
Mar 25, 2014
ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில்  பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (Horizontal) வைத்திருப்பார்கள். இப்போது நாம் பார்க்கப் போவது ப்ளாக்கின் இடது ஓரத்தில் வைப்பதற்கான செங்குத்தான ஓட்டுப்பட்டை (Vertical Sharing Bar) ஆகும்.
floating sharing widget for tamil blogs
இந்த ஓட்டுப்பட்டையில் Facebook Like, Twitter, Google Plus +1, இண்ட்லி திரட்டி, தமிழ்10 திரட்டி போன்றவற்றின் பட்டன்களை சேர்த்திருக்கிறேன். தமிழ்மணம் பட்டை நீளமானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை.
Floating Sharing vote buttons widget for Tamil Blogs:
1. Blogger Dashboard க்குச் சென்று உங்களின் ப்ளாக்கின் மீது கிளிக் செய்து பின்னர் இடதுபுறத்தில் "Layout" மெனுவைக் கிளிக் செய்யவும்.
2. உங்களின் ப்ளாக்கின் லேஅவுட் தோன்றும். அங்கே “Add a Gadget" என்பதில் கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில் கொஞ்சம் கீழே சென்றால் HTML/JavaScript என்ற வசதி இருக்கும். அதில் கிளிக் செய்து கீழ்வரும் நிரல்வரிகளைக் காப்பி செய்து சேமியுங்கள்.
<g:plusone size="tall"></g:plusone>
Widget
பின்னர் லேஅவுட்டில் நீங்கள் இப்போது சேர்த்த விட்ஜெட்டை கீழே படத்தில் காண்பது போல "Blog Posts" பகுதிக்குக் கீழே இழுத்து விட்டுவிடுங்கள். அவ்வளவு தான்.
Also Read: Manager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்
சிவப்பு வண்ணத்தில் உள்ள வரிகளில் இந்த விட்ஜெட்டின் Width, Height, Top, Left போன்றவற்றை உங்கள் ப்ளாக்கிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.  Bottom என்பது கீழிருந்து எவ்வளவு இடம் விட்டு இந்த விட்ஜெட் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
floating sharing widget for tamil blogs
முக்கிய குறிப்பு:
இந்த ஓட்டுப்பட்டை ப்ளாக்கரில் Custom Domain வைத்திருப்பவர்களுக்குப் பிரச்சினையின்றி செயல்படும். மேலும் வழக்கமான .blogspot.com என்று முடியும் ப்ளாக்கிலும் செயல்படும். ஆனால் எந்த நாட்டில் இருந்து வாசகர்கள் பார்க்கிறார்களோ அந்த நாட்டுக்குரிய டொமைனாக Redirect ஆகுவதால் in,au,uk,us போன்ற பல முகவரிகளாக நமது பதிவு பகிர்ந்து வரப்படும்.
அதனால் .Com போன்ற Custom Domain பயன்படுத்தாதவர்கள் எந்த நாட்டிலிருந்து பார்த்தாலும் இணைய முகவரி மாறாமலிருக்க ப்ளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க ட்ரிக் என்ற பதிவைப் பார்த்து குறிப்பிட்டபடி செய்யுங்கள். பின்னர் எப்போதும் உங்கள் வலைப்பூ முகவரி .com இல் தான் முடியும். ஓட்டுப்பட்டைகளிலும் பிரச்சினை வராது. எதேனும் நிரல்களைச் சேர்ப்பதில் பிரச்சினையெனில் பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.
Google+ Followers
Latest Posts in English