Mar 2, 2012

பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்


blogger-redirecting-country-wise-url-2ஜனவரி மாதத்தில் கூகிளின் இலவச சேவையான பிளாக்கரில் இலவச பிளாக்ஸ்பாட் தளங்கள் வைத்திருப்போரின் இணைய முகவரி பார்ப்பவரின் நாட்டுக்கு ( .in, .com.au) ஏற்ப மாறுமாறு( Redirection) செய்தது. செய்திகளின் தணிக்கை விசயத்திற்காக செய்யப்பட்ட இந்த முறையில் பிளாக்கர்கள் குழப்பமடைந்தனர். தேடுபொறிகளில் வலைத்தளத்தின் தரம் பின்னடையலாம் என்பதே அதற்குக் காரணம். இந்த நாடு வாரியாக இணைய முகவரியை மாற்றும் செயலால் திரட்டிகளில் பதிவைச் சேர்ப்பதிலும் அலெக்சா ரேங்க் போன்றவற்றிலும் பிரச்சினை ஏற்பட்டது.


தற்பொழுது இந்த இணையமுகவரி மாறாமலிருக்க ஒரு ட்ரிக் கண்டுபிடித்து உள்ளார்கள். வாசகர்கள் எந்த நாட்டிலிருந்து பார்த்தாலும் ஒரிஜினல் முகவரியான .com க்குச் செல்லும்படி செய்யலாம். வந்தே மாதரம் தளத்தில் இதற்கான நிரல்வரிகளை நண்பர் குறிப்பிட்டிருந்தார். இதில் நான் ஒன்றைக் கவனித்தேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் முகவரிக்கு Redirect ஆகும் போது மட்டுமே .com க்கு மறுபடியும் மாற்றும் படி அந்த நிரல் இருக்கிறது. கூகிள் இந்த முறையை மேலும் சில நாடுகளுக்கு அப்டேட் செய்யும் போது, அதாவது .uk, .us போன்ற மற்ற நாடுகளிலும் இந்த முறையைக் கொண்டு வரும் போது அந்த நிரல் வேலை செய்யாது.
blogger-redirecting-country-wise-url-1எனவே அந்த நிரலில் மாற்றம் செய்து எந்த நாட்டிலிருந்து பார்த்தாலும் .com/ncr முறையைப் பயன்படுத்தி நமது வலைப்பூவின் ஒரிஜினல் முகவரிக்கேப் போகும்படி செய்யுமாறு மாற்றினேன்.

<link expr:href="data:blog.canonicalUrl" rel="canonical"/>
<script type="text/javascript">
var str= window.location.href.toString();
if ((str.indexOf('.com/'))=='-1') {
var str1=str.substring(str.lastIndexOf(".blogspot."));
if (str1.indexOf('/')=='-1') {
var str2=str1;
}
else {
var str2=str1.substring(0,str1.indexOf('/')+1);
}
window.location.href =window.location.href.toString().replace(str2,'.blogspot.com/ncr/');
}
</script>

இந்த நிரல்வரிகளை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் டாஷ்போர்டில் Design-> Edit Html செல்லவும்.
<b:include data='blog' name='all-head-content'/>
என்ற வரியைத் தேடி அதற்கு கீழே பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த நிரலின் மூலம் பிளாக்கர் தளம் வேறு நாட்டின் முகவரிக்கு ஏற்ப மாறுவது நிறுத்தப்படும்.

கூகிளின் விளக்கத்தின் படி .com/ncr பயன்படுத்துவது வாசகரின் கணிணியில் குக்கீ ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலமாக தற்காலிகமாக .காம் முகவரி செயல்படும். இந்த நாடு வாரியாக பிளாக்கர் தளங்களை Redirect செய்யும் கூகிளின் அடுத்த கட்ட அப்டேட் ஏதும் வரவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

See Also :
பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்

30 comments:

  1. blank

    மேடம் இதற்கு கீழே சேர்த்தால் தளம் திறக்கும் முன்னே அந்த ஸ்கிரிப்ட் வேலை செய்யும் ..

    < b:include data='blog' name='all-head-content' / >

    இல்லை என்றால் head content அனைத்தும் loading ஆன பின்னர் .காம் -க்கு திருப்பி விடப்படும்

    ReplyDelete
  2. blogger_logo_round_35

    நன்றி ஸ்டாலின்

    ReplyDelete
  3. Earth+is+our+child

    ஆஹா !அருமையாக வேலை செய்கிறது..மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  4. 40768654_2299775236716239_6505113035084922880_n
  5. .com/img/b/R29vZ2xl/AVvXsEizDrv21Y0PJ7UkKf6ePu8V_k_uahoiSeDvuXqchCCc--geLBr2UmLxodt3sawDWlNY-6ENv2k4kePABeEe6JEr-TUFLY8ixdTsuSdlSSeKCJSpQ7V4OSy28rVpSY2HKDY/s45-c/
    Replies
    1. 1700920892739

      thanks for referring this post. implemented in my blog. Many thanks for you and Ponmalar.

      Delete
    2. blogger_logo_round_35
  6. alagu

    குட்வொர்க்.
    இன்றைய வலைப்பதிவைத்தான் சொல்கிறேன்.
    அமர்க்களப் படுத்திட்டீங்க..
    ரெண்டு நாடுகளுக்கு மட்டுமே ரீடைரக்ட் ஆன கோடிங்கை எல்லா நாடுகளுக்கு ஒரே மாதிரியாக .com -ல் திறக்கச் செய்த கோடிங் மாயாஜாலம்.. சூப்பர்..!!!

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. Neechalkaran[1]

    நல்ல முயற்சி. ஆனால் முதல் பக்கம் தவிர மற்றப் பக்கத்திற்கு நேரடியாக வருபவர்களுக்கு இது வழிமாற்றாது.
    உதா) name.blogspot.in/2012/02/test.html
    name.blogspot. உடன் வெட்டி name.blogspot.com ஆகிவிடுகிறது அதனால் name.blogspot.in/ என்று / வரை எடுத்து replace செய்து 2012/02/test.html என்பதையும் இணைத்துக் கொள்ள முயலுங்கள்

    ReplyDelete
  8. Ganesh-2

    இதன்படி செய்து பார்த்தேன். நன்றாக வேலை செய்கிறது, தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  9. blogger_logo_round_35

    //நீச்சல்காரன்,

    நல்ல முயற்சி. ஆனால் முதல் பக்கம் தவிர மற்றப் பக்கத்திற்கு நேரடியாக வருபவர்களுக்கு இது வழிமாற்றாது.
    உதா) name.blogspot.in/2012/02/test.html
    name.blogspot. உடன் வெட்டி name.blogspot.com ஆகிவிடுகிறது அதனால் name.blogspot.in/ என்று / வரை எடுத்து replace செய்து 2012/02/test.html என்பதையும் இணைத்துக் கொள்ள முயலுங்கள் //

    நன்றி நண்பரே தற்போது ஜாவாஸ்கிரிப்டில் மாற்றம் செய்து விட்டேன். சரி பார்க்கவும். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. blogger_logo_round_35

    பகிர்வுக்கு நன்றிங்க

    ReplyDelete
  11. blogger_logo_round_35
  12. -H

    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. blogger_logo_round_35

    நீங்கள் சொன்னபடி மாற்றிவிட்டேன்.நன்றாக உள்ளது. ஆனால் எனக்கு அதில் ஒரு சிறிய பிரச்சினை. google friend connectல் followers gadget தெரியவில்லை.google friend connctல் சென்றால் google + பற்றிய செய்திதான் வருகிறது. பழையபடி followers gadget கொண்டுவர வழி உள்ளதா? நிறைய நண்பர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. நான் follower ஆக add செய்தவர்களின் பதிவும் என்னுடைய dashboardக்கு வரவில்லை.என்னுடைய பதிவு அவர்களின் dashboardலும் தெரியவில்லை.

    ReplyDelete
  14. baba

    மிக்க நன்றி சகோதரி,
    நானும் மாத்திட்டேன் .சூப்பர்
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  15. blogger_logo_round_35

    பிரமாதம். அருமையாக வேலை செய்கிறது.

    ReplyDelete
  16. blogger_logo_round_35
  17. blogger_logo_round_35

    நல்ல முயற்ச்சி இருந்தும் facebook ல் இணைக்கும் போது தோன்றவில்லை..

    ReplyDelete
  18. blogger_logo_round_35
  19. blogger_logo_round_35

    மிக்க நன்றி...

    பயன் மிக்க பதிவு

    ReplyDelete
  20. blogger_logo_round_35
  21. blogger_logo_round_35

    அருமையாக வேலை செய்கிறது.

    ReplyDelete
  22. blank

    எனது வலைதளத்தை .Blogspotலிருந்து .comக்கு மாற்றியுள்ளேன்,.com மாற்றிய பிறகு
    எனது ஹிட்ஸ் குறைந்துள்ளதாக நினைக்கிறேன்.
    ஏதாவது code நான் மாற்றம் செய்ய வேண்டுமா.??



    விகடன் வரவேற்பறைக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  23. blogger_logo_round_35

    அருமையாக வேலை செய்கிறது நண்பே.
    நன்றி.

    ReplyDelete
  24. radhashyamsundar%7E25

    Working fantastic, Thanks. But why your Tamilmanam is not working?

    ReplyDelete
  25. wave

    சலாம் சகோ.பொன்மலர்,

    .fr, .sg போன்றவை... automatic frequent page refreshing problem (once in every 20 seconds..!) பிரச்சினை தருவதாக புகார்கள் எனக்கு வந்தன.

    எனவே, கொஞ்சம் கூகுளில் தேடி...
    link expr:href='data:blog.canonicalUrl' rel='canonical'/
    என்ற கோடை head க்கு பிறகு சேர்த்தேன்.

    அது .in-ஐ மட்டுமே .com-க்கு மாற்றியது. பிறகு ஆங்கிலத்தில் தேடி அலுத்து விட்டு தமிழில் தேடினேன். இறுதியில் உங்கள் சைட் வந்து சேர்ந்தேன்.

    உங்கள் கோட் மிக அருமையாக அனைத்தையும் .com-க்கு மாற்றி விடுகிறது. அபாரமான கோட். மகத்தான உழைப்பு. வாழ்த்துகள் சகோ.பொன்மலர். :-)

    தெளிவான விரிவான பகிர்வுக்கு மிக மிக நன்றி சகோ.

    ReplyDelete
  26. blogger_logo_round_35

    பகிர்வுக்கு நன்றி.மாத்திட்டேன்

    ReplyDelete
  27. %E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%21

    பதிவுலகுக்குப் புதியவனான எனக்கு இஃது இப்பொழுதுதான் புரிந்தது. செய்துவிட்டேன்; சரியாக வருகிறது! உங்கள் தொழில்நுட்ப அறிவு உண்மையிலேயே மெச்சத்தக்கது!

    ஆனால், எனக்கு ஓர் ஐயம்! நாம் இப்படிச் செய்வது பிளாகரின் நெறிமுறைகளுக்குப் புறம்பானதாகாதா? பிளாகரின் சேவையைப் பயன்படுத்தும் நாம், அது கொண்டு வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல், இப்படி நம்முடைய தொழில்நுட்ப அறிவைக் கொண்டு அதன் கட்டுப்பாடுகளை உடைப்பது சட்டப்படிச் சரியா? குறை சொல்வதாக நினைக்காதீர்கள்! ஏன் இப்படியெல்லாம் கேட்கிறேனென்றால், இப்படி நாம் செய்யும் மாற்றங்கள் கூகுளுக்குத் தெரிய வந்தால் நம் வலைப்பூவை முடக்கிவிடுமோ எனும் அச்சத்தில்தான். விளக்கமளித்தீர்களானால் மகிழ்வேன்!

    ReplyDelete
  28. blogger_logo_round_35

    மிக்க நன்றி ,மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    ReplyDelete