பிளாக்கர் தளம் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகளின் தரத்தை மேம்படுத்தும் SEO வசதிகளில் Redirection ம் ஒன்றாகும். பிளாக்கரில் வந்த சில SEO வசதிகளை இந்தப் பதிவில் சுருக்கமாக அறியலாம். இணையத் தேடலில் நமது வலைத்தளம் முக்கிய இடத்தைப் பெற SEO எனப்படும் Search Engine Optimization அவசியம் என நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்தப் பதிவினை பிளாக்கரில் 404 பிழைச்செய்தி உருவாக்க என்ற பதிவின் தொடர்ச்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதனால் அதனைப் படிக்காதவர்கள் படித்துக் கொள்ளுங்கள்.
Redirection என்பது ஒரு வலைப்பக்கத்திலிருந்து மற்றொரு வலைப் பக்கத்திற்குத் தானாகவே போகும்படி செய்வதாகும். இது எப்போதெல்லாம் தேவைப்படுகிறது என்று பார்ப்போம்.
1.உங்கள் வலைத்தளத்தில் உள்ள சில பதிவுகளை அழித்திருக்கலாம். தேடலில் அல்லது இணைப்புகளின் மூலம் வரும் வாசகர்கள் அதனைக் காணாமல் எரிச்சலடையலாம். அழிக்கப்பட்ட பதிவிற்குத் தொடர்புடைய வேறு பதிவிற்குத் வாசகர்களைத் திருப்பி விடலாம்.
2.ஆரம்பத்தில் ஒரு செய்தியை பதிவாக எழுதியிருந்து பின்னர் அதனை மெருகேற்றி புதிய பதிவாக போடும் போது நேரடியாக புதிய பதிவுக்கு வாசகர்களை போகச் செய்யலாம்.
3. கருத்துச்செறிவில்லாத சில பதிவுகளை பயனுள்ள பதிவுகளுக்கு தானாகப் போகும் படி செய்யலாம்.
பதிவுகளை Redirect செய்வது எப்படி?
இதனைச் செயல்படுத்த பிளாக்கரில் New Dashboard க்கு மாறியிருக்க வேண்டும். மாறாதவர்கள் முதலில் பிளாக்கர் டாஷ்போர்டில் Upgrade Now கிளிக் செய்து மாறிக் கொள்ளவும்.
பின்னர் உங்கள் ப்ளாகின் பெயரைக் கிளிக் செய்து Settings->Search Preferences செல்லுங்கள். வலது புறத்தில் Errors and Redirections பகுதியில் Custom Redirects என்பதற்கு நேரே உள்ள Edit என்பதைக் கிளிக் செய்யுங்கள்
From என்பதில் முதல் பதிவின் இணைய முகவரியைக் கொடுக்க வேண்டும். இதில் .com க்கு அடுத்து வரும் / குறியீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
உதாரணமாக http://ponmalars.blogspot.com/2009/06/40-iphone-3g-s.html எனில் "/2009/06/40-iphone-3g-s.html" இதை மட்டும் கொடுத்தாலே போதும்.
To என்ற கட்டத்தில் எந்தப் பதிவுக்கு Redirect ஆக வேண்டுமோ அதன் முகவரியைக் கொடுத்து Save கிளிக் செய்யுங்கள்.

மேலும் சில பதிவுகளைச் சேர்க்க வேண்டுமெனில் New Redirect என்பதைக் கிளிக் செய்து சேர்த்துக் கொள்ளலாம். இந்த Redirection முறை வேண்டாம் எனில் Delete கொடுத்து விடுங்கள்.இறுதியில் Save Changes கொடுத்து விட்டு வெளியேறவும். அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த பதிவுகள் தானாகவே வேறு பக்கத்திற்கு Redirection ஆகிவிடும்.
உதாரணத்திற்கு எனது பழைய ஐபோன் பற்றிய பதிவைக் கிளிக் செய்து பாருங்கள். http://ponmalars.blogspot.com/2009/06/40-iphone-3g-s.html
இதனால் உங்கள் வாசகர்கள் தளத்தில் வந்து எரிச்சலடையாமல் மாற்று பதிவுகளைப் படித்துக் கொள்ளலாம். மேலும் வலைத்தளத்தின் SEO தரமும் மேம்படும்.
Tweet | |||
பலருக்கும் பயன்படும் .
ReplyDelete°o.O பகிர்வுக்கு நன்றி ! O.o°
பயனுள்ள பதிவு.. வாசகர் ஒருவர் என்னிடத்தில் இந்த சந்தேகத்தை கேட்டிருந்தார்.. தங்களுடைய தளத்திலுள்ள பதிவொன்றை பரிந்துரைத்தேன்.. அவர் கேட்டதிற்கு இந்த பதிவில் முழுமையான பதில் கிடைத்துள்ளது. பகிர்வுக்க மிக்க நன்றி சகோதரி..!
ReplyDeleteஇரண்டு நாளுக்கு முன்பு தான் ஒரு பழைய பதிவை edit செய்து update செய்வதற்கு பதில் preview பட்டனை அழுத்தி விட்டேன் போலும். பிறகு முகப்பு பக்கத்தில் பார்த்தால், அந்தப் பதிவு முதலில் வந்து நிற்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் போது நண்பர் தங்கம் பழனி அவர்கள், உங்களின் முந்தைய பதிவான 'seo' லிங்க்யை கொடுத்தார்.
ReplyDeleteஇந்தப் பதிவில் விரிவாக (உதாரணமாக http://ponmalars.blogspot.com/2009/06/40-iphone-3g-s.html எனில் "/2009/06/40-iphone-3g-s.html" இதை மட்டும் கொடுத்தாலே போதும்.) கொடுத்துள்ளீர்கள். நன்றி.
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
எனக்கென்றே எழுதியது போல் தெரிகிறது! மிக்க நன்றி சகோதரி!
ReplyDeleteபயனுள்ள தகவல் சகோ.!
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி .
ReplyDeleteநன்றி சகோ....
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்..நன்றி சகோ..
ReplyDeleteரொம்ப நாளாக பதிவுகள் போடவில்லையே?போன முறை நிகழ்ந்தது போல் எதுவும் நடக்கவில்லையே!
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு.
இதுவரை பயன்படுத்தியது இல்லை...உங்கள் தகவலுக்கு நன்றி..
ReplyDeleteநன்றி!!
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்களேன்..
நானும் இதை செய்துபார்கிறேன்,நன்றி.
ReplyDeletesuper 'O' super
ReplyDeleteNalla muyarchi mahatamil.com
ReplyDeleteரீடைரக்ட் செய்வது எப்படின்னு தெரியாம பழைய பதிவுகளை டெலிட் செய்யாம வைத்திருந்தேன். உங்கள் உதவியால் வழி கிடைத்தது.
ReplyDeleteமிகவும் நன்றிகள்
என்றும் அன்புடன்
தமிழ்த் தேனீ தமிழ்நேசன்
nandri
ReplyDelete