Dec 19, 2012

ப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag செய்ய

கூகிள் தனது சமூக வலைத்தளமான கூகிள்+ ஐ ப்ளாக்கர் சேவையோடு தொடர்பு படுத்தி புதிய வசதிகளைக் கொண்டு வருகிறது. ஏற்கனவே உங்கள் பிளாக்கர் புரோபைலை (Author Profile) கூகிள்+ புரோபைலாக மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொடுத்திருந்தது. இன்றைக்கு நீங்கள் பிளாக்கில் பதிவுகளை எழுதும் போதே உங்களின் நண்பர்களை அல்லது பிற கூகிள்+ பக்கங்களையோ (Google+ Pages) Mention / Tag செய்யும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது.


கூகிள் பிளஸில் உங்கள் நண்பர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல அல்லது அழைக்க, அவர்களின் பெயர்களுக்கு முன் ”+” குறியீடு கொடுத்து Tag / Mention செய்வோம். அதைப் போலவே பிளாக்கரில் பதிவெழுதும் போது உங்கள் நண்பர்களைக் குறிப்பிட “+” குறியீடை அடித்து விட்டு அவர்களின் பெயரின் முதல் சில எழுத்துகளை அடித்தால் நண்பர்களின்/பக்கங்களின் பட்டியல் பதிவிற்குள்ளேயே தெரியும்.

உதாரணத்திற்கு +Subadhra R
 mention-google-plus-friends-in-blog-posts-2

பதிவினைப் போஸ்ட் செய்த பிறகு பார்த்தால் பதிவில் அவர்களின் பெயர் சுட்டியாக (Link) தெரியும். அந்த இணைப்பின் மீது மவுசைக் கொண்டு சென்றால் மற்றவர்கள் அவரை இணைத்துக் கொள்ள Add to Circles என்று தெரியும். அதனை நேரடியாக கிளிக் செய்தால் அவர்களின் கூகிள்+ புரோபைலுக்குச் சென்று விடலாம்.

மேலும் நீங்கள் பதிவிட்ட பின்னர் அதனை கூகிள்+ இல் Share செய்யுமாறு ஒரு பெட்டி தோன்றும். அதில் பதிவில் நீங்கள் Tag செய்த நண்பரின் பெயரும் வந்து விடும். இதன் மூலம் அவருக்கும் Tag Notification சென்று விடும். 
mention-google-plus-friends-in-blog-posts-3

Connect to Google+

இந்த வசதியைப் பெற நீங்கள் உங்களின் ப்ளாக்கர் புரோபைலை கூகிள்+ புரோபைலுக்கு மாற்ற வேண்டும். இதற்கு பிளாக்கர் தளத்தில் சென்று வலதுபுறம் உள்ள Settings பட்டனைக் கிளிக் செய்து Connect to Google+ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் கூகிள்+ புரோபைல் தோன்றியவுடன் Switch to Google+ என்பதைக் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளவும்.

mention-google-plus-friends-in-blog-posts-1


14 comments:

  1. goutham

    Good Post Ponmalar Keep it writing

    ReplyDelete
  2. .com/img/b/R29vZ2xl/AVvXsEgUTng0Ves30qMaAxm6CJSd8-gealEXWpyuWclAe2SL2-AWMx5TOSgiuYrIrbNiPhwLHCwPmY5O_9vUBLdZry_D7h9yqywLux-bZNsBTKkPy9wE9fmQ8zTbTw1f99E8xQ/s45-c/

    பகிர்வுக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி .

    ReplyDelete
  3. blank

    நல்ல செய்திகளை பகிர்கிறீர்கள்.நன்றி.உங்கள் உதவி எனக்கு தேவை. என் பிளாக்கையும் மேம்படுத்த.உதவுங்கள்.நன்றி.

    ReplyDelete
  4. Soundar+1
  5. nijam+page

    பதிவுக்கு நன்றி !

    கூகிள் பிளஸின் மூலம் நண்பர்களுக்கு நாம் எழுதிய பதிவுகளை ஷேர் செய்யும் முன் மின்னஞ்சலில் அவற்றை அனுபவதற்காக Also send email to your circles என்பதை கிளிக் செய்தால் 'You can't send email to that many people.' என்பதாகச் சொல்கிறது !? காரணமா என்ன ? மாற்று வழிமுறைகள் ஏதேனும் உண்டா ?

    அறிந்தவர்கள் - அறியத்தரலாம்

    ReplyDelete
  6. .com/img/b/R29vZ2xl/AVvXsEh8R-jEOZ8Nk7NcVKrYUrJQdA7pXBAovyQ9QyVCaJpXKZZtfL9fTByAfkaDk8-DpiBLpu7eJA7tIwxyt_kiOFBvY5lOcWKYaPDI5Qqllo9A0uorn2yeobnSOdbWGEvP0Q/s45-c/

    நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவிட்டிருக்கிரீர்கள்.கூகிள் + அதிகமாககப் பயன்படுத்துவதில்லை.இனிமேல் முயற்சி செய்யவேண்டும் நல்ல பதிவு.

    ReplyDelete
  7. 249916_1391729571378_1776307322_640276_5824585_n

    பதிவுக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. blogger_logo_round_35
  9. alagu

    அருமை.. பதிவர்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவு...

    பகிர்வுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  10. blogger_logo_round_35
  11. 010-Passikudah

    பகிர்வுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  12. blogger_logo_round_35

    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  13. blogger_logo_round_35
  14. blank

    Thanks for share . Nice Info

    ReplyDelete