Oct 30, 2013

ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பீட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்


இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட வசதிகளைக் கொண்டும் தனிப்பட்ட இயங்குதளத்திலும் (Operating System) வெளிவருகின்றன.

தற்போது Android, Apple iOS, Windows Phone 8, Blackberry போன்ற இயங்குதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. மேலும் அதிகமான செயல்திறன் கொண்ட Processor, Camera, Network போன்ற பல வகையான சிறப்பம்சங்கள் கொண்ட கருவிகளில் சிறப்பான ஒன்றை வாங்குவது என்பது புதியவர்களுக்கு சிரமமான காரியமே. இதற்காக நமக்கு உதவும் சில இணையதளங்களைப் பார்ப்போம்.

 1.GeekaPhone.com
Compare Smartphone Specifications Online

எளிமையான தோற்றத்தை உடைய இத்தளத்தில் காட்டபடும் போன்களை தேர்வு செய்து ஒப்பிடலாம். இதில் மொபைல்களின் அனைத்து விவரங்களான display, processor, camera, video, battery, music போன்றவற்றை ஒரே பக்கத்தில் ஒப்பிடலாம். ஒரே நேரத்தில் 5 மொபைல்களை ஒப்பீடு செய்ய முடியும். மேலும் Popular Comparison களும் இருக்கின்றன.

2.PhoneRocket.com

இந்த தளத்தில் அனைத்து Specifications களுடன் Difference, Benchmarks, Reviews போன்றவையும் அவற்றிற்கான மதிப்பெண்களும் இடம்பெறுகின்றன. மேலும் ஒவ்வொரு வசதியிலும் சிறப்பான மொபைல்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உதாரணமாக Most Processing Power, Fastest Web Browser, Fastest 3D and 2D Graphics, Longest Battery Life போன்றவற்றில் சிறப்பான மொபைல்களை தனித்தனியாக பார்க்கலாம்.
Compare Smartphone Specifications Online

இத்தளம் தான் எனக்கு சிறப்பாகத் தோன்றுகிறது. மேலும் அடுத்து வரும் தளங்கள் அனைத்தும் இவர்களின் நெட்வொர்க் தான். கண்டிப்பாக ஒரு முறை பார்த்து விடுங்கள்.

3. TabletRocket.com
Compare Tablet Specifications Online

இந்த தளத்தில் அனைத்து வகையான டேப்ளட்களை ஒப்பீட முடியும். மேற்கண்ட மொபைல் ஒப்பிடும் தளம் போல இடைமுகம், வசதிகள் தான் இதிலும். ஆனால் இதில் இயங்குதளங்கள் வாயிலாகவும் குறிப்பிட்ட விலைக்குள் இருக்கும் டேப்ளட்களை Sort செய்து பார்க்கவும் முடியும். ஒவ்வொரு வசதியிலும் Best Tablet களும் பட்டியலிடப்பட்டுள்ளன. நேரடியாக அமேசானில் வாங்கவும் இணைப்பு உள்ளது.

4. CameraRocket.com
Compare Cameras Specifications Online
இதில் எல்லாவகையான புதிய கேமராக்களையும் ஒப்பீட்டுப் பார்க்கலாம். இத்தளத்தில் Best image quality in low light, Highest resolution, Cheapest full frame cameras, Fastest focusing போன்றவற்றில் சிறந்த கேமராக்களை அறிந்து கொள்ள முடியும்.

 5.ReaderRocket.com 
Compare E-readers Specifications Online

புத்தகங்கள் படிக்க, ஆன்லைன் வசதிக்கு உதவும் Amazon Kindle போன்ற பலவகையான Reader Device களை ஒப்பிட இத்தளம் உதவுகின்றது. மேலும் இதில்  The best E-Ink readers,Fastest web browser,The best 5" e-readers, The best 6" e-readers போன்ற சிறந்த ரீடர்களை தெரிந்து கொள்ள முடியும்.

Read: விளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள் 

*****  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் *****

7 comments:

  1. வணக்கம்
    தகவலுக்கு நன்றி.. பதிவு அருமை வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. டேப்ளட்/மொபைல் வாங்குமுன் இத்தளத்தைப் பார்வையிட்டால் நாம் வாங்கும் பொருளைச் சரியாகத் தேர்வு செய்ய முடியும். பதிவு நன்றி.

    தீபாவளி நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. தேவையான தகவல்.பயனுள்ளதாக உள்ளது.
    தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. முதல் மூன்று தளங்கள் தெரிந்தவைதான். புதிய தளங்களையும் அறிய தந்தமைக்கு நன்றி.. பாராட்டுகள்..!!!!

    ReplyDelete
  5. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்...!

    ReplyDelete
  6. நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete