Oct 14, 2013

விளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்

கூகிள் சமீபத்தில் தனது சேவை விதிமுறைகளில் மூன்று புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கூகிள் விளம்பரத்தில் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துதல், வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்பாடு தவிர்த்தல், கூகிள் கணக்கின் கடவுச்சொல்லைப் பாதுகாத்தல் போன்றவற்றை விதிமுறைகளில் சேர்த்துள்ளது. கடைசி இரண்டும் நமக்கான அறிவுரை மட்டுமே, ஆனால் முதலாவது நமது ப்ரைவசிக்கு வேட்டு வைக்கும் ஒன்றாக வந்துள்ளது.

கூகிளின் சேவைகளான Search, Maps, Places, Google Play, Adsense, YouTube போன்றவற்றில் நமக்குப் பிடித்த தளங்கள் / இடங்கள் / விளம்பரங்களை +1 செய்வோம், பகிர்வோம் அல்லது விமர்சனம் செய்வோம். (Reviews). அதே தயாரிப்புகளைப் பற்றி நமது நண்பர்கள் தேடும் போது அதனைப் பற்றிய கூகிள் விளம்பரங்களின் அருகில் உங்களது புகைப்படமும் பரிந்துரை செய்த கருத்தும் காட்டப்படும். இதனை கூகிள் Shared Endorsement என்ற பெயரில் குறிப்பிடுகிறது.
Google Shared Endorsements
[Reviews in Google Maps]
Google Shared Endorsements
[Reviews in Google Play]
 இது நல்ல விசயம் தான், உங்கள் நண்பர்களின் பரிந்துரைகளைக் கொண்டு குறிப்பிட்ட சேவைகளின் குறை நிறை எளிதாக அறியலாம். எனினும் இணையத்தில் கண்டதைச் செய்யும் நமது தகவல்கள் பொதுவில் வைக்கப்படும் அதுவும் புகைப்படத்துடன் எனும் போது யோசிக்க வேண்டியதாகிறது.

கூகிள் ஏன் இதனைச் செய்கிறது என்று பார்த்தால் பேஸ்புக் ”Sponsored stories” என்ற பெயரில் விளம்பரங்களை பயனர்களுக்குக் காண்பித்து வருகிறது. அதில் நீங்கள் Page, Event, Individual Status என்று எதனையும் விளம்பரமாக காட்டுவார்கள். கூகிள் விளம்பர சேவைக்கு பேஸ்புக்கின் நெருக்கடியை சமாளிக்க தனது கூகிள் ப்ளஸ் பயனர்களின் விவரங்களைப் பயன்படுத்த முடிவெடுத்து விட்டது. பேஸ்புக்கில் இதனை தடுக்க முடியாது. ஆனால் நல்ல வேளையாக கூகிள் விளம்பரங்களில் உங்கள் போட்டோவை தவிர்க்கவும் வழி செய்துள்ளது.
Google Shared Endorsements
[Ads in Google Search]
Google Shared Endorsements இல் உங்கள் விவரங்களைத் தவிர்க்க 

உங்கள் புகைப்படம் கூகிள் விளம்பரங்களில் வராமல் இருக்க கீழே உள்ள சுட்டியில் சென்று “ Based upon my activity, Google may show my name and profile photo in shared endorsements that appear in ads.” என்ற இடத்தில் உள்ள கட்டத்தில் உள்ள டிக்கை எடுத்து விட்டு சேமிக்கவும்.

https://plus.google.com/settings/endorsements?hl=en

Google Shared Endorsements

இந்த நடைமுறை நவம்பர் 11, 2013 லிருந்து வரப்போகிறது. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் தகவல்கள் விளம்பரங்களில் வராது.

5 comments: