Mar 22, 2012

பிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசதிகள்

26 Comments

கூகிள் தனது பிளாக்கர் சேவையில் SEO விசயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. Search Engine Optimization(SEO) என்பது கூகிள் உள்பட தேடுபொறிகளில் நமது இணையதளத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கும் தேடல் மூலம் நமக்கு அதிக வாசகர்கள் வரவும் செய்யப்பட வேண்டிய வேலைகளாகும். இது நமது தளத்தின் முகவரியிலிருந்தே (URL) ஆரம்பிக்கிறது. பிளாக்கின் Title மற்றும் Description, பிளாக் பதிவுகளின் தலைப்பு, ஒளிப்படங்களுக்கு ALT tag, சுட்டிகளின் தலைப்பு (Link Titles) போன்ற இன்னும் பல இடங்களில் பொருத்தமானவற்றைப் பயன்படுத்துவதே நமது பிளாக்கை மேம்படுத்தும் SEO வேலைகளாகும். இதைப் பொறுத்து தான் கூகிள் உட்பட பல தேடுபொறிகள் தேடலின் போது நமது இணையதளத்தை தரவரிசைப் படுத்தி காட்டுகின்றன. இப்போது வரை இந்த மாதிரி விசயங்களை நாமே நிரல்வரிகளில் தேடி மாற்றியமைக்கும் படியே இருந்தன.
Read More

Mar 20, 2012

தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை Rotate செய்வது எப்படி?

11 Comments

How to Rotate and Flip Videosமொபைல் கேமரா வசதியால் எளிதாக பலரும் வீடியோக்களை எடுப்பதுண்டு. வீடியோ எடுக்கும் போது அதன் கோணத்தை(Angle) நேராக வைக்காமல் மாற்றி வைத்து எடுத்து விடுவார்கள். இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை மொபைலில் வேண்டுமானால் அப்படியும் இப்படியும் திருப்பி வைத்து பார்க்கலாம். அதனையே கணிணியில் பார்க்கும் போது கணிணியின் திரையைத் திருப்ப முடியுமா? VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு Rotate செய்து பார்க்க வசதியிருக்கிறது. சரி இந்த வீடியோக்களை நாம் விரும்பும் கோணத்திற்கு நிரந்தரமாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
Read More

Mar 12, 2012

VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்!

15 Comments

விஎல்சி மீடியா பிளேயர் ( Vlc Media Player) கணிணியில் அனைத்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென்பொருளாக இருக்கிறது. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப் பட்டிருக்கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும்.
Read More

Mar 8, 2012

எக்சல் தகவல்களை HTML அட்டவணையாக எளிதில் மாற்ற

12 Comments

எக்சல் (Excel) தகவல்களை வரிசை, நெடுவரிசையாக அட்டவணை வடிவில் சேமித்து வைக்கவும் எளிதாகப் படிக்கவும் உதவும் மென்பொருளாக இருக்கிறது. எக்சலின் Table பார்மேட்டில் இருக்கும் தகவல்களை உங்கள் வலைத்தளத்தில் /பிளாக்கில் சேர்ப்பதற்கு நினைத்தால் அதனை HTML வடிவில் மாற்றியாக வேண்டும். அதற்கு எக்சல் கோப்பை Save as web என்று கொடுத்து சேமிக்க வேண்டும். இதற்குப் பின்னர் அந்த Html கோப்பில் Table ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடிவடையும் வரிகள் வரை கண்டுபிடித்து காப்பி செய்து பிளாக்கரில் போட வேண்டும். இது ஒரு சிக்கலான வேலையாக அமைந்து விடும்.
Read More

Mar 2, 2012

பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்

30 Comments

Stop Blogger Redirecting Country Wise Domainsஜனவரி மாதத்தில் கூகிளின் இலவச சேவையான பிளாக்கரில் இலவச பிளாக்ஸ்பாட் தளங்கள் வைத்திருப்போரின் இணைய முகவரி பார்ப்பவரின் நாட்டுக்கு ( .in, .com.au) ஏற்ப மாறுமாறு( Redirection) செய்தது. செய்திகளின் தணிக்கை விசயத்திற்காக செய்யப்பட்ட இந்த முறையில் பிளாக்கர்கள் குழப்பமடைந்தனர். தேடுபொறிகளில் வலைத்தளத்தின் தரம் பின்னடையலாம் என்பதே அதற்குக் காரணம். இந்த நாடு வாரியாக இணைய முகவரியை மாற்றும் செயலால் திரட்டிகளில் பதிவைச் சேர்ப்பதிலும் அலெக்சா ரேங்க் போன்றவற்றிலும் பிரச்சினை ஏற்பட்டது.
Read More