May 29, 2009

கூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழில் அடிக்கலாம்

நீங்கள் வலைப்பக்கத்தில் உலவும் போது எங்கேயாவது தமிழில்
தட்டச்சு செய்ய வேண்டி இருந்தால் கூகுளின் Indic Translate
அல்லது
வேறு எதாவது தமிழ் உரை மாற்றிகளை கொண்டு
பயன்படுத்துவீர்கள். இப்போது கூகிள் எந்த பக்கத்திலும் தமிழ்
மொழியில் அடிக்குமாறு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. இதனைக்கொண்டு நீங்கள்,

1. தமிழில் மின்னஞ்சல் அடிக்கலாம்.
2. Google Search இல் தேடலாம்.
3. தமிழில் உரையாடலாம் (chat )
4. பிற சமுக வலைத்தளங்களிலும் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
5. இது எந்த வலைப்பக்கத்திலும் இயங்கக்கூடியது.
6. மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், அரபிக் போன்ற
மொழிகளிலும்
செய்யல்படுகிறது.
7. ஆனால் இதை ஏற்கனவே தமிழ் மொழி வசதி உள்ள Orkut, Gmail,
Blogger மற்றும் Knol போன்றவற்றில் பயன்படுத்த தேவையில்லை.

இதை நீங்கள் பயன்படுத்த ஒரு புக்மார்க் செய்ய வேண்டும்.

Internet Explorer பயனர்களுக்கு :

1. [ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Add to Favorites
என்பதை சொடுக்கவும்.


2. பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்று வரும். அதை yes கொடுக்கவும்.
3. பின்னர் Add கொடுத்தால் உங்கள் உலவியின் கருவிப்பட்டைக்கு
கீழே அமர்ந்து விடும்.


இவ்வாறு உட்கார்ந்து இருக்கும்.




Firfox பயனர்களுக்கு :

1. [ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Bookmark this link
என்பதை சொடுக்கவும்.


2. Bookmarks Toolbar இல் சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை :

உங்கள் உலவியில் உள்ள [ Type in தமிழ் ] இணைப்பை
சொடுக்கினால்
கூகுளின் மொழிபெயர்ப்பு வசதி கிடைக்கும்.
வலைப்பக்கத்தில்
உள்ள எந்த உரைப்பெட்டியிலும் என்ற குறியீடு இருக்கும்.நீங்கள் Ctrl+G அழுத்தி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கு மாறிக்கொள்ளலாம்.



மீண்டும் வேண்டாம் என்றால் கருவிப்பட்டையில் உள்ள அதே
இணைப்பை
சொடுக்கினால் வசதி மறைந்துவிடும்.

மேலும் மற்ற உலவிகளில் சேர்ப்பதைப் பற்றியும் மற்ற
மொழிகளின்
இணைப்பு வேண்டுமெனில் இதைப்பார்க்க. நன்றி.

http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html

9 comments:

  1. இதையும் பாருங்கள்.
    கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !

    http://blog.ravidreams.net/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/

    ReplyDelete
  2. சிங்கப்பூர் முத்தையன் மதிஒளி , மிக்க நன்றி !

    ReplyDelete
  3. நல்ல தகவல் அருமையான பதிவு பொன்மலர். தொடரட்டும் உங்கள் பணி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நன்றி. நல்ல விரிவாட இடுகை பொன்மலர். உங்கள் இந்த இடுகைக்கு என் இடுகையில் இருந்து லிங்க் கொடுத்து உள்ளேன். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  5. can you explain how to use this feature for google talk please.

    Nithyan

    Nithyan@gmx.com

    ReplyDelete
  6. நல்லபயனுள்ள தகவல்

    ReplyDelete
  7. Google chrome-ல் எப்படி பயன்படுத்துவது? off line லும் பயன்படுத்த முடியுமா?. முதலில் எ-கலப்பையை நிறுவி பயன்படுத்திக் கொண்டிருந்தேன். ஏனோ தற்போது இயங்கவில்லை. மிண்டும் தரவிறக்கம் செய்தும் பயன் படுத்த முடியவில்லை. முடிந்தால் விளக்கம் கொடுக்கவும்.

    http://aambalmalar.blogspot.com

    ReplyDelete
  8. நன்றி தமிழை இணையத்தில் வளர்க்க உங்கள் பணி சிறக்கட்டும்

    ReplyDelete