Mar 31, 2010

கணினியின் முழு விவரத்தையும் பெற இலவச மென்பொருள்




உங்கள் கணினியில் உள்ள Ram சரியாக உள்ளதா , ப்ரோசெசரின் அமைப்பு போன்றவை உங்களுக்கு புரியாத விசயமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். உங்கள் கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருளின் அனைத்து விவரங்களையும் ஒரு இலவச மென்பொருள் தருகிறது.

LookInMyPC




மேலும் கணினியில் இயங்கும் மென்பொருள்களின் விவரம், இயக்க நிலை சேவைகள், இயங்குதள தகவல், நெட்வொர்க் இணைப்புகள், பயாஸ், மின்கல சக்தி போன்ற அதிகளவு தகவல்களை தருகிறது.

இது அளவில் மிகசிறிய , பயன்படுத்த எளிமையான மென்பொருள் இலவசமாக தரப்படுகிறது. நன்றி!


தரவிறக்கசுட்டி: LookInMyPC
Read More

Mar 30, 2010

பென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...

2 Comments



தற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.

Usb Flash Sequrity




Usb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் எளிதாக நிறுவலாம். பிறகு உங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள். பின்னர் “Autorun.inf”  மற்றும்  “UsbEnter.exe” என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exe கோப்பை தேர்வு செய்து உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்.

தரவிறக்கசுட்டி:Usb Flash Sequrity 

நன்றி!
Read More

Mar 28, 2010

USB டிவைஸ்களை கட்டுப்படுத்த...

உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உள்ள கணிணியில் பென் ட்ரைவ் அல்லது மெமரி கார்டு போன்ற சாதனங்களை முடக்க ( Disable ) கணிணியின் பயாஸ் (Bios)அமைப்பில் ஒரு வசதி உள்ளது.

பயாஸ் செல்ல கணிணி ஆன் செய்தவுடன் Del பட்டனை அழுத்துங்கள். சில கணிணிகளில் ESC அல்லது F1 அல்லது F2 ஆக இருக்கலாம். அதில் Advanced Settings அல்லது Peripheral Settings செல்லுங்கள். கீழ்வரும் USB legacy அல்லது Usb Function என்பதில் Enabled இருந்தால் அதை Disable ஆக மாற்றி சேமித்து விட்டால் பின்னர் USB வழியாக எந்த கருவியும் செயல்படாது.

சில சமயம் USB போர்ட்டில் இயங்கக்கூடிய அச்சடிப்பான் இருந்தால் அதற்கு ஒரு மாற்று வழி உள்ளது. இதற்கு நீங்கள் பயாஸில் எந்த மாற்றமும் செய்யாமல் Start – Run சென்று Regedit என்று தட்டச்சு செய்யுங்கள். Registry திறக்கப்பட்டவுடன் கீழ்வரும் பகுதிக்கு செல்லுங்கள்.

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet001\Services\USBSTOR




Usbstor ஐ கிளிக் செய்தால் வலது பக்க சன்னலில் உள்ள Start என்பதை தெரிவு செய்து அதன் மதிப்பை 4 என்று கொடுத்து விட்டு ரெஜிஸ்ட்ரியில் இருந்து வெளியேறி கணிணியை Restart செய்யவும்.பின்னர் உங்கள் கணிணியில் யாரேனும் பென் ட்ரைவ் போன்றவற்றை செருகி எதையும் நகல் எடுக்க முடியாது. மற்றபடி நீங்கள் Usb பிரிண்டர் இணைத்திருந்தால் அது மட்டும் வேலை செய்யும். மறுபடியும் வேண்டுமானால் அதன் மதிப்பை 3 ஆக மாற்றவும்
Read More

விசுவல் பேசிக் பயன்பாடுகளை புதிய XP ஸ்டைலில் மாற்றுவது எப்படி?

ஒரு விசுவல் பேசிக் பயன்பாட்டை நீங்கள் XP இயங்குதளத்தில் இயக்கும் போது அதன் தலைப்புப்பட்டை ( Title bar ) மட்டுமே எக்ஸ்பி தோற்றத்தில் அமைந்திருக்கும். ஆனால் படிவத்தில் உள்ள மற்ற கண்ட்ரோல்கள் எல்லாமே பழைய விண்டோஸ் வடிவத்திலேயே காட்சியளிக்கும்.




இதற்காக வெளியிலிருந்து எந்த ActiveX Control ம் இல்லாமல் நிரல்கள் மூலம் விண்டோஸில் உள்ளிருக்கும் XP தோற்றப்பொலிவை விசுவல் பேசிக் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

1. ComCtl32.dll கோப்புகளை பயன்பாட்டில் இணைத்தல்

இவை உங்கள் கணிணியில் உள்ள ComCtl32.dll என்ற கோப்பு முலமாக செயல்படுத்த்ப்படுகின்ற்ன. இந்த கோப்பின் பதிப்பு ( version ) 6 அல்ல்து அதற்கு மேம்பட்டதாக இருக்க வேண்டும்.இந்த dll கோப்பை நீங்கள் உங்கள் புராஜெக்ட்டில் ComCtl InitCommonControls என்ற API பங்சனை அழைப்பதன் மூலம் இணைக்க முடியும்.

முதலில் உங்கள் பயன்பாட்டிலிருந்து ComCtl32.dll கோப்புக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். அதுவும் எந்த படிவமும் காட்டப்படுவதற்கு முன் InitCommonControls என்ற API பங்சனை அழைக்க வேண்டும். உங்கள் புராஜெக்ட்டில் Project – Add Module கொடுங்கள். உருவாக்கப்பட்ட புதிய மாடுலில் கீழ்வரும் கோடிங்கை சேருங்கள்.

Private Type tagInitCommonControlsEx
lngSize As Long
lngICC As Long
End Type

Private Declare Function InitCommonControlsEx Lib "comctl32.dll" _
(iccex As tagInitCommonControlsEx) As Boolean
Private Const ICC_USEREX_CLASSES = &H200

Public Function InitCommonControlsVB() As Boolean
On Error Resume Next
Dim iccex As tagInitCommonControlsEx
' Ensure CC available:
With iccex
.lngSize = LenB(iccex)
.lngICC = ICC_USEREX_CLASSES
End With
InitCommonControlsEx iccex
InitCommonControlsVB = (Err.Number = 0)
On Error Goto 0
End Function

பின் கீழ் உள்ள பகுதியில் இரண்டாவது மற்றும் 3 வது வரியில் உங்கள் பயன்பாட்டில் முதன்முதலில் காட்ட வேண்டிய படிவத்தின் பெயரைக்கொடுங்கள்.

Public Sub Main()
InitCommonControlsVB
load form1
Form1.show
End Sub

இந்த மாடுலை சேமித்த பின்னர் Project – Properties செல்லுங்கள். அதில் Startup என்பதில் Sub Main என்பதை தெரிவு செய்யுங்கள். பிறகு உங்கள் புரோகிராமை இயங்கும் பயன்பாடாக மாற்றவும்.( Executable Application ). இதற்கு File – Make Yourname.exe என்பதை தேர்வு செய்தால் குறைகள் நீக்கப்பட்டு அப்ளிகேசன் கோப்பாக (.exe) மாற்றப்படும்.

2.மணிஃபெஸ்ட் கோப்புகள் ( Manifest )

மணிஃபெஸ்ட் என்ற வகை கோப்புகள் Microsoft நிறுவனத்தால் வழங்கப்ப்ட்ட XML கோப்புகளாகும். இவை Dll கோப்பு பதிப்புகளில் ஏற்படும் முரண்பாடுகளை நீக்க உதவுகிறது.

<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes" ?>


<assembly xmlns="urn:schemas-microsoft-com:asm.v1" manifestVersion="1.0">

<assemblyIdentity

version="1.0.0.0"

processorArchitecture="X86"

name="CompanyName.ProductName.YourAppName"

type="win32" />

<description>Your application description here</description>

<dependency>

<dependentAssembly>

<assemblyIdentity
  type="win32"
name="Microsoft.Windows.Common-Controls"
version="6.0.0.0"

processorArchitecture="X86"

publicKeyToken="6595b64144ccf1df"

language="*" />

</dependentAssembly>

</dependency>

</assembly>

இந்த மணிஃபெஸ்ட் கோப்பை உங்கள் பயன்பாட்டின் (Application) பெயரில் தான் சேமிக்க வேண்டும். உங்கள் பயன்பாட்டின் பெயர் Timeslot.exe என்றால் மணிஃபெஸ்ட் கோப்பை Timeslot.exe.manifest என்று சேமிக்க வேண்டும்.

முக்கிய குறிப்புகள் :
1. இந்த புதிய XP ஸ்டைல் இயக்க நேரத்தில் மட்டுமே செயல்படும். ( Run Time )
2. Option பட்டன்கள் ஒரு பிரேமின் மீது ( Frame ) வைக்கப்படும் போது அவை ஒழுங்காக தெரியாது.அதனை Picture box இல் வைத்துக்கொள்ளவேண்டும்.
3. மணிஃபெஸ்ட் கோப்பின் பெயரை மாற்றிவிட்டால் புதிய XP ஸ்டைல் மறைந்து வழக்கமான தோற்றமே தோன்றும்.
Read More

Mar 27, 2010

கணினியின் வீடியோ கார்டு மற்றும் கிராபிக்ஸ் பற்றி அறிய GPU-Z மென்பொருள்

கணினியில் வீடியோ கார்டு தான் தெளிவான படம் மற்றும் காட்சிகளை பார்க்க உதவுகிறது. இதற்கு உங்கள் கணினியில் வீடியோ கார்டு நிறுவப்பட்டிருக்க வேண்டும். வீடியோ கார்டு என்றால் தெரியாதவர்களுக்கு GPU-Z என்ற இந்த மென்பொருள் உதவும். இது உங்களின் வீடியோ கார்டு மற்றும் கிராபிக்ஸ் ( Graphics Processing Unit ) பற்றி தெளிவான விவரங்களை அறிய உதவுகிறது.




NVIDIA , ATI போன்ற கார்ட்களையும் அறிகிறது.
அடாப்டர், வீடியோ, கிராபிக்ஸ் பற்றி தகவல் தருகிறது.
இதை நிறுவத்தேவையில்லை. எளிய மென்பொருள்.
துல்லியமான முடிவுகளை தருகிறது.

தரவிறக்கசுட்டி: Download GPU-Z


Read More

விண்டோஸ் ஏழிலும் இயக்கலாம் விண்டோஸ் எக்ஸ்பீ !

4 Comments



விண்டோஸ் ஏழு வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டாலும் அதன் மேல் அத்தனை பிரியம் இருப்பதாக தெரியவில்லை பலரிடம். எல்லோரும் விண்டோஸ் எக்ஸ்பீ இயங்குதளத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் விண்டோஸ் எக்ஸ்பீ பெற்ற வரவேற்பு அப்படி. அதன் எளிமையான தோற்றமும் பயன்படுத்த எளிமையான இடைமுகமும் கூட.ஆனால் உங்கள் கணினியில் விண்டோஸ் 7 ஐ போட்டுவிட்டு எக்ஸ்பீக்கு நீங்கள் ஆசைப்பட்டால் ஒரு வழி இருக்கிறது.

விண்டோஸ் ஏழில் 'XP mode on Windows 7 ' என்ற ஒரு வசதி உள்ளது. இதை வைத்து நீங்கள் எக்ஸ்பீயை விண்டோஸ் ஏழில் இயங்கும் போதே இயக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பீயில் இயங்கும் பல மென்பொருள்களும் நிரல்களும் ஏழிலும் இயங்கும் படி உள்ளது. சில மென்பொருள்கள் இயங்க வில்லை என்றால் நீங்கள் அந்நேரம் எக்ஸ்பீ பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால் இவ்வசதி விண்டோஸ் 7 Professional, Enterprise மற்றும் Ultimate பதிப்புகளில் மட்டுமே செயல்படும். நன்றி!

தரவிறக்கசுட்டி : Download Windows XP Mode
Read More

Mar 26, 2010

விண்டோசில் வரும் டூல்டிப்ஸ்களை மறைப்பது எப்படி?

விண்டோஸ் டெஸ்க்டாப்பில் எதாவது ஒரு ஐகானின் மேல் மவுசின் சுட்டியைக் கொண்டு சென்றால் ஒவ்வொரு முறையும் அதைப்பற்றிய தகவல் டூல்டிப் (Tool Tips) மேல் எழும்பி வரும். ஒரு கட்டத்தில் எல்லாம் பழகிய பின்னர் சுட்டியைக்கொண்டு சென்றால் வருவது தேவையில்லாத ஒன்றாக இருக்கும்.இதைத்தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.


இதை மறைக்க ரெஜிஸ்ட்ரியில் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும். அதற்கு முன்பாக ரெஜிஸ்ட்ரியை ஒரு காப்பு நகல் எடுத்துக்கொள்வது மிக நலம்.

File -> Export சென்று எதாவது ஒரு பெயரில் சேமிக்கவும்.



பின்னர் கீழ் உள்ள பகுதிக்கு செல்லவும்.

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced

இதன் வலதுபுறம் உள்ள பேனலில் “ShowInfoTip” என்பதை கிளிக் செய்து அதன் மதிப்பை 0 ஆக மாற்றவும். ரெஜிஸ்ட்ரியை மூடிவிட்டு கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு பார்த்தால் டூல்டிப்ஸ் மறுபடியும் தோன்றாது.

நன்றி!
Read More

Mar 24, 2010

கூகிள் குரோம் புதிய பதிப்பு 4 வெளியீடு!

கூகிள் தனது வலை உலாவியான குரோமின் புதிய பதிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. முன்பை விட அதிக பாதுகாப்புகள் மற்றும்
சில பிழைகளை நீக்கி சரிசெய்து வெளியிட்டுள்ளது. இப்போதைய தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளுமாறு உருவாக்கப்பட்டுள்ளது.


பழைய பதிப்புகளை வைத்து உள்ளோர் புதிய பதிப்பை மேம்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த புதிய பதிப்பில் முன்பை விட வேகம், பாதுகாப்பு, எளிமை போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

தரவிறக்கச்சுட்டி : Chrome official site.
Read More

Mar 23, 2010

சிறுவர்களுக்கான கோடை விடுமுறை விளையாட்டு-Jumping Squirrel

7 Comments
தரவிறக்கச்சுட்டி: http://www.myrealgames.com/files/jumping_squirrel.exe

பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கப்போகிறது. இந்த நேரத்தில் சிறுவர்கள் ஆர்வமாக விளையாடக்கூடிய இந்த விளையாட்டில் ஒரு அணில் தான் கதாநாயகன்.



இந்த விளையாட்டில் சாத்தானால் கடத்தப்பட்ட இளவரசனை மாய உலகிலிருந்து மீட்க வேண்டும். இதில் பல நிலைகள் உள்ளன.ஒவ்வொரு நிலையிலும் ஆபத்துகள், எதிரிகள் ஆகியவற்றை கடந்து செல்ல வேண்டும். குண்டு போடுதல், ஏணியில் செல்தல், லிப்ட் மூலம் மேல் ஏறுதல் போன்றவற்றுடன் மிக சுவாரஸ்யமாக செல்லும்படியாக இந்த விளையாட்டு உள்ளது.

மேலும் இதில் மூன்று வகையான இடங்கள் உள்ளன.

காடுகள், பாறைகள், பாலைவனம்.

ஒவ்வொன்றும் அழகாகவும் குழந்தைகள் மனம் குதூகலம் அடையும்படியும் உள்ளன. விளையாடிப்பாருங்களேன். தினமும் இதை விளையாடாமல் நானும் தூங்குவதில்லை என்ற அளவுக்கு என்னையும் கவர்ந்து விட்டது.

நன்றி!

தரவிறக்கச்சுட்டி: http://www.myrealgames.com/files/jumping_squirrel.exe
Read More

Mar 20, 2010

இணையதள வடிவமைக்கும் மென்பொருள் Dreamweaver portable

11 Comments
இணையதள வடிவமைக்க உதவும் மென்பொருள்களில் பல இலவசமாக கிடைக்கின்றன.ஆனால் எல்லாமே சிறப்பாக கிடைத்து விடுவதில்லைநிரலாளர்களின் கனவு மென்பொருளாக இருக்கும் Dreamweaver அதிக விலையில் கிடைப்பதால் பலர் அதில் வேலை செய்ய முடிவதில்லை.ஆனால் இப்போது கையடக்க வசதியுடன் (Portale Dreamweaver) நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ள இந்த தளம் செல்லுங்கள்.

http://portableappz.blogspot.com/2009/02/portable-dreamweaver-cs4-en-fr.html

இதன் மூலம் எளிதாக இணைய தளம் வடிவமைக்கலாம். மேலும் CSS,Php,Html, Xml,javascript போன்ற வசதிகளுடன் இணையப்பக்கம் வடிமைக்க முடியும்.ஏராளமான வசதிகளை கொண்ட இதை தரவிறக்கி விரித்து அதன் Exe கோப்பை இயக்கினால் போதும். நன்றி

Read More