Mar 27, 2010

விண்டோஸ் ஏழிலும் இயக்கலாம் விண்டோஸ் எக்ஸ்பீ !


windows-7-xp


விண்டோஸ் ஏழு வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டாலும் அதன் மேல் அத்தனை பிரியம் இருப்பதாக தெரியவில்லை பலரிடம். எல்லோரும் விண்டோஸ் எக்ஸ்பீ இயங்குதளத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் விண்டோஸ் எக்ஸ்பீ பெற்ற வரவேற்பு அப்படி. அதன் எளிமையான தோற்றமும் பயன்படுத்த எளிமையான இடைமுகமும் கூட.ஆனால் உங்கள் கணினியில் விண்டோஸ் 7 ஐ போட்டுவிட்டு எக்ஸ்பீக்கு நீங்கள் ஆசைப்பட்டால் ஒரு வழி இருக்கிறது.

விண்டோஸ் ஏழில் 'XP mode on Windows 7 ' என்ற ஒரு வசதி உள்ளது. இதை வைத்து நீங்கள் எக்ஸ்பீயை விண்டோஸ் ஏழில் இயங்கும் போதே இயக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பீயில் இயங்கும் பல மென்பொருள்களும் நிரல்களும் ஏழிலும் இயங்கும் படி உள்ளது. சில மென்பொருள்கள் இயங்க வில்லை என்றால் நீங்கள் அந்நேரம் எக்ஸ்பீ பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால் இவ்வசதி விண்டோஸ் 7 Professional, Enterprise மற்றும் Ultimate பதிப்புகளில் மட்டுமே செயல்படும். நன்றி!

தரவிறக்கசுட்டி : Download Windows XP Mode

4 comments:

  1. IMG_5463

    பொன்மலர்,
    எப்படி இருக்கின்றிங்க…நான் இப்பொழுது என்னுடைய குழந்தைக்கு (3 வயது ) Flashயில் ஒரு Learning project (2D) பண்ணுகிறேன்…அதே போல வேறு எதாவது S/wயில் செய்யலாமா…இப்பொழுது flashயினை trail version தான் உபயோகித்து கொண்டு இருக்கிறேன்…வேறு எதாவது இருந்தால் சொல்லுங்க மா…நன்றி

    ReplyDelete
  2. blank

    thakavalukku nanri malar.

    ReplyDelete
  3. blogger_logo_round_35

    வணக்கம் கீதா. நான் நலம் . நீங்கள் கேட்ட பிளாஷ் க்கு மாற்று அறிய இந்த பக்கத்தில் பாருங்கள் http://www.osalt.com/flash
    மேலும் நீங்கள் பிளாஷ் cs4 பயன்படுத்தினால் கீழ் உள்ள சிறிய மென்பொருள் உங்களுடையதை எளிய வழியில் ஒரிஜினல் ஆக மாற்றுகிறது.
    http://www.4shared.com/file/142367941/58f2da2a/Flash_CS4_KG_and_Activation.html?s=1
    நானும் இதைக்கொண்டு தான் பிளாஷ் பயன்படுத்துகிறேன் எந்த தொல்லையும் இல்லாமல். நன்றி.

    ReplyDelete
  4. sakthi

    ohh back to the form again.....

    ReplyDelete