Nov 30, 2010

தினமலரில் வெப் டிசைனர் மற்றும் PHP Programmer ஆக பணிபுரிய வேலை வாய்ப்பு

6 Comments

நண்பர்களே! நேற்றைய(29.11.2010) தினமலர் நாளிதழில் மதுரை பதிப்பில் பெட்டிச்செய்தியாக இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள தினமலர் அலுவலகத்திற்கு வெப் டிசைனர் மற்றும் Php programmer தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. கணிப்பொறியியலில் எதாவது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். புதியவராக இருந்தாலும் உங்கள் சுயவிவரத்தை (Resume) அனுப்பிப்பாருங்கள்.
Read More

வலைத்தளத்தை மேம்படுத்த அவசியமான 10 டிப்ஸ்

11 Comments

1. சரியான பிளாக்கர் அடைப்பலகை ( Choose Right Template)

உங்கள் வலைப்பதிவின் அடைப்பலகை படிப்பவர்களின் கண்ணுக்கு உறுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். சிலர் அட்டகாசமாக இருக்க வேண்டும் என நினைத்து மொக்கையான வண்ணத்தில் பயன்படுத்துவர். உதாரணமாக முழுதும் கறுப்பு வண்ணத்தில் இருக்கும். அடர்த்தியான பின்புற வண்ணத்தில் அடர்த்தியான வண்ணத்தில் அமைந்த எழுத்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Read More

Nov 28, 2010

MySql பயன்பாட்டுக்கு உதவும் Workbench மென்பொருள்கள்

6 Comments

இலவச தரவுத்தளமான Mysql ஐ எப்படி கணினியில் நிறுவுவது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். Mysql நிறுவியபின்னர் அதனைப்பயன்படுத்த workbench என்று சொல்லக்கூடிய உதவும் மென்பொருள்கள் அந்நிறுவனத்தால் தனியாக வழங்கப்படுகின்றன. Dos அமைப்பு போலுள்ள Mysql commandline client இல் மட்டுமே mysql பயன்படுத்த முடியும் என்பதில்லை. mysql பயன்பாட்டை எளிமைப்படுத்தும் Workbench மென்பொருள்களை பயன்படுத்துவதனால் நாம் திறம்பட நிர்வகிக்கலாம்.
Read More

Nov 27, 2010

நமது வலைப்பதிவில் தற்போது ஆன்லைனில் இருப்பவர்களின் விவரங்களை அறிய...

3 Comments

வலைப்பதிவு வைத்திருக்கும் ஒவ்வொரு பிளாகருக்கும் தங்களது வாசகர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் நமது வலைப்பக்கத்தில் எந்தெந்த கட்டுரைகளை விரும்பி படிக்கிறார்கள், எந்த விசயத்தை அதிகமாக தேடுகிறார்கள் என்பதை வைத்து தளத்தை முன்னேற்றலாம்.வலைத்தளத்தை பற்றிய தினசரி நிகழ்வுகளை அறிந்துகொள்ள இணையத்தில் நிறைய கருவிகள் உள்ளன.Google Anayltics, Statcounter, Alexa போன்றவைகளின் உதவியோடு தினசரி வாசகர்களின் நிகழ்வுகளை அறிந்தாலும் இந்த நிமிடத்தில் தற்போது ஆன்லைனில் (Online vistors) இருக்கும் வாசகர்களின் நிகழ்வுகளை அறிவது கொஞ்சம் சிரமமான வேலை தான்.
Read More

Nov 24, 2010

பிளாகர் உத்திகள் : HTML/CSS நிரல்வரிகளை பதிவுகளில் காட்டுவது எப்படி?

5 Comments

பிளாகர் உதவிகள் பற்றிய பதிவுகள் எழுதும் போது கண்டிப்பாக HTML அல்லது CSS இல் அமைந்த நிரல் வரிகளை (codes) பற்றி குறிப்பிட வேண்டியிருக்கும். ஆனால் பதிவுகள் எழுதும் போது இந்த Html வரிகளை அப்படியே சேர்த்தால் நாம் post செய்யும் போது ஒரு பிழைச்செய்தியும் காட்டப்படும். அதை தவிர்த்தபின்னர் பதிவை பார்த்தால் தெளிவாக காட்டப்படாது அல்லது ஒன்றுமே இருக்காது. இதனால் படிக்கும் வாசகர்கள் குழப்பம் அடைய நேரிடும்.எனவே இவற்றை தனியாக விரும்பிய வண்ணத்தில் பெட்டிச்செய்தியாக(Coloured box) இட்டால் தெளிவாகவும் இருக்கும்.அவர்கள் அந்த நிரல்களை காப்பி (copy)செய்யவும் எளிதாக இருக்கும்.
Read More

Nov 23, 2010

வலைத்தளத்தில் உள்ள இணைப்புகளை(Links) புதிய விண்டோவில் திறக்கச்செய்ய

9 Comments

நமது வலைப்பக்கத்தில் ஏராளமான இணைப்புகள் ( Links ) இருக்கும். நமது நண்பர்களின் பக்கங்களுக்கு அல்லது தளத்திற்கு நமது பதிவில் இருந்து இணைப்பு கொடுத்திருப்போம். மேலும் சைட்பாரில் நமக்குப்பிடித்த வலைத்தளங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்போம். மேலும் நமது பக்கத்தில் விளம்பரங்களும் பட இணைப்புகளும் கொடுத்திருப்போம். இவைகளை கிளிக் செய்தால் நமது வலைப்பக்கத்தை மறைத்துவிட்டு திறக்கப்படும். சிலருக்கு எரிச்சல் கொடுக்கும். கூடவே நமது பக்கத்தை விட்டு படிப்பவர்களின் கவனம் போய்விடும். இவை இன்னொரு டேபில் அல்லது புதிய விண்டோவில் தோன்றினால் சிறப்பாக இருக்கும்
Read More

Nov 22, 2010

வலைத்தள உத்திகள் : பதிவுகளுக்கு ஏற்ப Permalinks அமைப்பது எப்படி?

10 Comments

Permalinks என்பது Permanent Links என்று பொருள்படும். அதாவது நீங்கள் எழுதும் பதிவுகளின் நிரந்தர முகவரி ஆகும். உங்கள் கட்டுரைக்கு வைத்த தலைப்பிலிருந்து blogger தானாகவே permalinks ஐ அமைத்து விடும்.நீங்கள் எதைப்பற்றி எழுதியுள்ளீர்கள் என்று இதை வைத்து படிப்பவர்களும் தெரிந்து கொள்ள முடியும். இதை வைத்து தான் கூகிள் போன்ற தேடுபொறிகளும் (Search engines) உங்கள் வலைப்பக்கத்தை புதுப்பித்துக்கொள்கின்றன. பதிவுகளையும் வகைப்படுத்திக்கொள்கின்றன.
Read More

Nov 20, 2010

இண்டர்நெட்டை பயன்படுத்தும் செயல்பாடுகளை கட்டுப்படுத்த 2 மென்பொருள்கள்

8 Comments

நாம் இணையம் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு பெற்று கணினியின் மூலம் நமக்கு தேவையான செயல்களை செய்கிறோம். நாம் எதாவது ஒரு வலை உலாவியின் (Internet browser )வழியாக வலைப்பக்கத்தை பார்வையிடுகிறோம் அல்லது நமக்கு வேண்டிய மென்பொருளை தரவிறக்குவோம். இந்த வேலையின் போது வலை உலவி மட்டுமே இணையத்தை பயன்படுத்துகிறது என்று நாம் நினைப்போம்.
Read More

Nov 19, 2010

MySQL தரவுத்தளத்தை விண்டோஸ் புரோகிராமிங்கில் பயன்படுத்துவது எப்படி?

3 Comments

mysql தரவுத்தளம் இலவசமாக வழங்கப்படுகின்ற திறன்வாய்ந்த தரவுத்தளமாகும். இது கட்டற்ற திறந்தநிலை மென்பொருளாகும் ( Open source ). இது ஒரே நேரத்தில் பலர் பயன்படுத்தும் வசதி உடையது( Multi user). இதை விண்டோஸ் சார்ந்த பயன்பாட்டுக்கும் இணைய பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்.கூகிள், பேஸ்புக்,விக்கிபீடியா போன்ற பெரிய நிறுவனங்கள் mysql ஐத்தான் பயன்படுத்துகின்றன.
Read More

Nov 16, 2010

பேஸ்புக் தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் உரையாட (Chatting)

4 Comments

பேஸ்புக் தளம் உலகிலயே மிக புகழ் பெற்ற சமுக வலைத்தளமாகும். தற்போது வேறு மின்னஞ்சல் சேவையை ஆரம்பிக்கப்போவதாக இருக்கிறது. ஆனால் இத்தளம் பல அலுவலகங்களில், கல்லூரிகளில் முடக்கப்பட்டிருக்கும். பேஸ்புக் பயனர்களுக்கு பல பேருக்கு அது இல்லாமல் ரொம்பவே சோதனைப்பட வைக்கும்.இந்த நேரத்தில் Google Talk ஐ போல மென்பொருள் இருந்தால் வசதியாக இருக்கும் என எண்ணலாம்.
Read More

Nov 12, 2010

MS அவுட்லுக்கில் ஜிமெயிலை இணைத்து மின்னஞ்சல் பெறுவது எப்படி?

5 Comments

ஜிமெயில் என்பது இலவச மின்னஞ்சல் சேவை என்பது உங்களுக்குத் தெரியும். குறைவான இணைய வேகத்தில் இணையம் பயன்படுத்தும் பலருக்கு எல்லா மின்னஞ்சல்களையும் முழுதும் படிப்பது சிரமமான வேலை தான். அதனால் நமது கணிணியிலேயே எல்லா மின்னஞ்சல்களும் சேமிக்கப்படுமானில் நமக்கும் வசதியாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் படித்திடலாம்.

Read More

Nov 11, 2010

கணினியில் தேவையில்லாத குப்பைகளை அழிக்க

3 Comments
கணிப்பொறி பயன்படுத்துவதில் அவ்வப்போது தேவையில்லாமல் நாம் பயன்படுத்தாத பைல்களும் சேர்ந்து நமது ஹார்ட் டிஸ்கின் இடத்தை அடைத்துக்கொள்ளும். Temp files, backup files, recent files போன்றவை நமக்கு தெரியாமலே கணினியால் நாம் ஒரு வேலையை செய்யும் போது உருவாக்கப்பட்டிருக்கும். அதையெல்லாம் நாம் தேடிக்கண்டுபிடித்து நீக்குவது எளிதான விசயமல்ல. இவற்றையெல்லாம் நீக்கினால் கணினியின் ஹார்ட் டிஸ்க் இடம் மிச்சமாகும். வேறு செயல்களுக்கும் வேகம் கிடைக்கும்.
Read More

Nov 10, 2010

அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க மென்பொருள் FileASSASSIN

2 Comments

கணிணி பயன்படுத்தும் போது சில கோப்புகளை அழிக்கவரும்போது கோப்பு உபயோகத்தில் உள்ளது அல்லது கீழ்க்கண்ட பிழைச்செய்திகளை காட்டும். அந்த நேரத்தில் என்ன தான் நாம் Delete கொடுத்தாலும் கோப்பு அழியாது.
Read More

Nov 3, 2010

விளையாடலாம் வாங்க! Assaultcube Shooting விளையாட்டு

2 Comments

சிறுவர்களுக்கு தீபாவளி துப்பாக்கி என்றால் பயங்கர ஆசையோடும் விருப்பத்தோடும் சுட்டு மகிழ்வர். அதைப்போலே இந்த விளையாட்டிலும் துப்பாக்கியால் எதிரிகளை சுட்டுத்தள்ளவேண்டும். இந்த மாதிரி ஷூட்டிங் விளையாட்டு என்றாலே இலவசமாக கிடைக்காது. ஆனால்
இந்த விளையாட்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
Read More