Nov 11, 2010

கணினியில் தேவையில்லாத குப்பைகளை அழிக்க

கணிப்பொறி பயன்படுத்துவதில் அவ்வப்போது தேவையில்லாமல் நாம் பயன்படுத்தாத பைல்களும் சேர்ந்து நமது ஹார்ட் டிஸ்கின் இடத்தை அடைத்துக்கொள்ளும். Temp files, backup files, recent files போன்றவை நமக்கு தெரியாமலே கணினியால் நாம் ஒரு வேலையை செய்யும் போது உருவாக்கப்பட்டிருக்கும். அதையெல்லாம் நாம் தேடிக்கண்டுபிடித்து நீக்குவது எளிதான விசயமல்ல. இவற்றையெல்லாம் நீக்கினால் கணினியின் ஹார்ட் டிஸ்க் இடம் மிச்சமாகும். வேறு செயல்களுக்கும் வேகம் கிடைக்கும்.
இதற்காக இந்த குப்பைகளை நீக்க இலவச மென்பொருள் Moo0 Diskcleaner உள்ளது. இதனால் எளிதாக கணினியை சுத்தமாக்கலாம்.ஒரு கிளிக்கில் எல்லாவற்றையும் கணினியிலிருந்து நீக்கிவிடலாம். இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடியது.

இந்த மென்பொருள் மூலம் கீழ்க்கண்டவற்றை நீக்கலாம்.
Recycle bin
temp files
backup files
IE cache
Recent files
cookies
Firefox cache and history
windows log files

தரவிறக்கச்சுட்டி: Download Moo0 DiskCleaner

3 comments:

  1. மிகவும் பயனுள்ள மென்பொருள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு . நன்றி

    ReplyDelete