Nov 22, 2010

வலைத்தள உத்திகள் : பதிவுகளுக்கு ஏற்ப Permalinks அமைப்பது எப்படி?


webaddresslogoPermalinks என்பது Permanent Links என்று பொருள்படும். அதாவது நீங்கள் எழுதும் பதிவுகளின் நிரந்தர முகவரி ஆகும். உங்கள் கட்டுரைக்கு வைத்த தலைப்பிலிருந்து blogger தானாகவே permalinks ஐ அமைத்து விடும்.நீங்கள் எதைப்பற்றி எழுதியுள்ளீர்கள் என்று இதை வைத்து படிப்பவர்களும் தெரிந்து கொள்ள முடியும். இதை வைத்து தான் கூகிள் போன்ற தேடுபொறிகளும் (Search engines) உங்கள் வலைப்பக்கத்தை புதுப்பித்துக்கொள்கின்றன. பதிவுகளையும் வகைப்படுத்திக்கொள்கின்றன. வலை உலாவிகள் இந்த முகவரியைக்கொண்டு தான் அந்தப்பக்கத்திற்கு கொண்டு செல்கின்றன. எனவே உங்கள் வலைப்பதிவு பிரபலமாக இதுவும் மிக அவசியமான ஒன்று ஆகும்.

தலைப்பில் ஆங்கில வார்த்தைகள் இருந்தால் அதை வைத்தும்
இல்லாவிட்டால் எண்களையே நிரந்தர முகவரி ஆக்கிவிடும். உதாரணமாக :
http://ponmalars.blogspot.com/2010/11/monitor-and-control-your-internet-usage.html
ஆங்கில வார்த்தைகள் இல்லாவிட்டால்
http://ponmalars.blogspot.com/2010/04/5.html இந்த மாதிரி அமையும்.

அதனால் நாம் பதிவுகளுக்கு தலைப்பு வைக்கும் போது கவனம் கொள்ள வேண்டும். wordpress சேவைகளில் இந்த நிரந்தர முகவரியை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. இந்த வசதி பிளாகரில் இல்லை. ஒரு முறை நிரந்தர முகவரி வைக்கப்பட்டு விட்டால் மீண்டும் மாற்றும் வழியில்லை. எத்தனை முறை தலைப்பை மாற்றினாலும் நிரந்தர முகவரி மாறாது. draft இல் இருக்கும் போது வேண்டுமெனில் மாற்றி விளையாட முடியும்.

seotips
மேலும் இன்னொரு சிக்கல் என்னவென்றால் நமது தலைப்பில் உள்ள 40 எழுத்துக்குள் மட்டுமே நிரந்தர முகவரி அமைக்கப்படும். அதனால் நாம் வைத்த தலைப்பின் பாதி கூட முகவரியாக அமையலாம். அதனால் நமது பதிவின் முக்கிய கருத்தும் சுருங்கிவிடலாம். உதாரணமாக நான் வைத்த தலைப்பும் அதன் நிரந்தர முகவரியும் கீழே

How to backup and restore blogs in blogger
http://ponmalars.blogspot.com/2010/07/how-to-backup-and-restore-blogs-in.html
கடைசியில் blogger என்பது முகவரியில் வராமல் போய்விட்டது.

இந்த பிரச்சனைகளை எப்படி சரி செய்யலாம்?

1 . உங்கள் தலைப்பு 40 எழுத்துக்குள் அமையுமாறு சுருக்கமாக கட்டுரையின் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கிற மாதிரி அமைக்கவும். அப்போது தான் தேடுபொறியில் நல்ல இடம் பெற முடியும்.

2 . நீங்கள் தமிழ் மொழியில் பதிவுகள் எழுதுபவராக இருந்தால் உங்கள் கட்டுரையின் தலைப்பை ஆங்கிலத்தில் அடித்து பதிவிட்டு அடுத்த நொடியில் Edit posts சென்று திரும்பவும் தமிழில் மாற்றி பதிவிடவும். அப்போது தான் பார்ப்பவர்களுக்கு தமிழில் தலைப்பு தெரியும். உங்கள் நிரந்தர முகவரியோ ஆங்கிலத்தில் தேடுபொறிகளுக்கு ஏற்றவாறு அமையும்.

இந்தப்பதிவின் permalink : http://ponmalars.blogspot.com/2010/11/create-suitable-permalinks-for-blogger.html
நன்றி!

10 comments:

  1. blank

    எனக்கு இந்த டவுட் இருந்துச்சு... இப்ப ஓகே...

    ReplyDelete
  2. blogger_logo_round_35

    ப யனுள்ள் பதிவு.
    நியு போஸ்ட் தலைப்பை தமிழுடன் ஆங்கிலம் அடித்தால் முன்பெல்லாம் வரும், ஆனால் இப்ப தலைப்பு ஆங்கிலத்தில் அடித்தால் தங்கிலிஷில் மாறுகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்

    ReplyDelete
  3. blogger_logo_round_35

    //Jaleela Kamal said...

    பயனுள்ள் பதிவு.
    நியு போஸ்ட் தலைப்பை தமிழுடன் ஆங்கிலம் அடித்தால் முன்பெல்லாம் வரும், ஆனால் இப்ப தலைப்பு ஆங்கிலத்தில் அடித்தால் தங்கிலிஷில் மாறுகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும் //

    default language தமிழில் இருக்கலாம். அதனால் ஒவ்வொரு முறை மொழி மாற வேண்டுமெனில்
    ctrl+G கொடுங்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி அடிக்கலாம் . நன்றி

    ReplyDelete
  4. IMG_5463

    சூப்பர்ப் பதிவு...நானும் இப்படி தான் செய்கிறேன்...நன்றி பொன்மலர்...

    ReplyDelete
  5. n1
  6. blank

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  7. SASI+KUMAR2

    //நீங்கள் தமிழ் மொழியில் பதிவுகள் எழுதுபவராக இருந்தால் உங்கள் கட்டுரையின் தலைப்பை ஆங்கிலத்தில் அடித்து பதிவிட்டு அடுத்த நொடியில் Edit posts சென்று திரும்பவும் தமிழில் மாற்றி பதிவிடவும். அப்போது தான் பார்ப்பவர்களுக்கு தமிழில் தலைப்பு தெரியும்.//

    thanks for this tip

    ReplyDelete
  8. alagu

    பயனுள்ள பதிவு..!

    வேண்டுகோள்:தாங்கள் இன்னும் அதிக பதிவுகளை எழுதலாமே?

    நன்றி! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  9. 40768654_2299775236716239_6505113035084922880_n
  10. blogger_logo_round_35