Nov 16, 2010

பேஸ்புக் தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் உரையாட (Chatting)

facebook1
பேஸ்புக் தளம் உலகிலயே மிக புகழ் பெற்ற சமுக வலைத்தளமாகும். தற்போது வேறு மின்னஞ்சல் சேவையை ஆரம்பிக்கப்போவதாக இருக்கிறது. ஆனால் இத்தளம் பல அலுவலகங்களில், கல்லூரிகளில் முடக்கப்பட்டிருக்கும். பேஸ்புக் பயனர்களுக்கு பல பேருக்கு அது இல்லாமல் ரொம்பவே சோதனைப்பட வைக்கும்.இந்த நேரத்தில் Google Talk ஐ போல மென்பொருள் இருந்தால் வசதியாக இருக்கும் என எண்ணலாம்.

இதற்கென Facebook Discovery என்ற மென்பொருள் உள்ளது. இதன் மூலம் நாம் பேஸ்புக் தலத்தில் நுழையாமலே நாம் நண்பர்களை கண்டு உரையாட முடியும். இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் போதும்.டெஸ்க் டாப்பில் வைத்து கொண்டு உங்கள் கணக்கில் நுழைந்து எளிதாக உரையாடலாம். இது yahoo messenger, gtalk போன்ற மென்பொருள்களை
போன்றது தான்.
fdiscovery
மேலும் இதில் உங்களுக்கான "What's on your mind" செய்தியையும் அவ்வப்போது இதில் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. இது ஒரு இலவச மென்பொருளாகும். இது அனைத்து விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயல்படும்.

தரவிறக்கச்சுட்டி:
Download FacebookDiscovery

4 comments:

  1. 273057_181216378603682_100001459633617_491462_861690_o

    மிகவும் அத்தியாவசியமான தகவல்

    ReplyDelete
  2. 23092_1275471422_1724_n

    பயனுள்ள பதிவு நன்றி

    ReplyDelete
  3. kTCS4dxF_400x400

    அருமையாக இயங்குகிறது. சூப்பராக உள்ளது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
    jiyathahamed.blogspot.com

    ReplyDelete
  4. 130504833929900168_min

    it is not working it say the remote server returned in erro (403) forbiden

    ReplyDelete