Dec 1, 2010

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய


tineyelookஇணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

tineyesearchஇதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதள முகவரி : http://www.tineye.com/

11 comments:

  1. .com/img/b/R29vZ2xl/AVvXsEhFR8Lm48-zLufazGvDHymR1II3zfZwBMOFCGTJ-KRTqSlR3GBFrINViQdwQyfSaaSClOVmWXV0xztX8SUX78phAP9C9Hl1_w05W-T3ELNeRNmXNTg9jwd0M2d2vmMaBPk/s45-c/

    Super di... Idhaiyum thedikitu irundhen.. :)

    ReplyDelete
  2. blogger_logo_round_35
  3. NR

    Thank u so much di... என்ன அவங்க மட்டும்தான் டீ போடுவாங்களா... நாங்களும் போடுவோம் டீ... (சும்மா தமாஷு...)

    ReplyDelete
  4. Education_cap

    பயனுள்ள தகவல்...

    பகிர்வுக்கு நன்றி

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  5. IMG_1524
  6. aa6f9d4f84d9c5fa[1]

    பயனான தகவல்! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    thanks to all friends for coming and commenting.

    ReplyDelete
  8. kTCS4dxF_400x400

    என்னுடைய Photo எந்த தளத்திலும் பிரசுரிக்கவில்லை என Result வந்தது.

    ReplyDelete
  9. blank

    சூப்பருங்க!! நான் தேடிய புகைப்படம்..... http://image1.indiaglitz.com/tamil/gallery/Movies/marudhamalai/marudhamalai200707_37.jpg

    ReplyDelete
  10. 2cie

    தமிழ் வலைப்பதிவர்களே!
    புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைத்துப் பயன் பெறுங்கள்.
    ‍தமிழ்புக்மார்க்
    http://tamilbookmark.co.cc

    ReplyDelete
  11. Copy+of+RSCN0309