கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை நகல் எடுக்க பெரும்பாலும் சிடி அல்லது டிவிடி டிரைவைத்தான் பயன்படுத்துகிறோம். சில நேரம் நாம் டிவிடியில் எழுதும் போது கீழ்க்கண்ட இரண்டு பிழைச்செய்திகள் வந்து விடும்.
1. Power calibration error 2. Medium speed error நமக்கோ என்ன செய்வது என்று புரியாது. ஒரு வேளை நாம் போட்ட டிவிடியின் தரம் சரியில்லையோ என்று நினைத்து குழம்புவோம்.
எனக்கும் இந்த பிழைச்செய்தி ஒரு மாதமாக வந்து எதையும் டிவிடியில் எழுதமுடியவில்லை. இதை எப்படி சரிசெய்வது என்று பார்ப்போம்.
இதற்கு சில காரணங்கள் இருந்தாலும் முதன்மையாக டிவிடி எழுதும் மென்பொருளால் (Dvd burning software) எழுதுவதற்கு பொருத்தமான மின்சக்தி விகிதத்தை ( power calibration rate) தீர்மானிக்க முடியவில்லை என்பதே. நம் டிவிடியை எழுதுவதற்கு முன்பே ஒரு சோதனையை செய்து இந்த பிழைச்செய்தியை தருகிறது.
தீர்வுகள் :
1. கணினியில் இயங்கும் IMAPI சேவையை நிறுத்துவது. இதைச்செய்வதன் மூலம் உடனடியாக பலன் கிடைக்கும். இதுதான் பெரும்பான்மையான
முறையாகும்.
Start Control panel -> Administrative Tools -> Services செல்லவும்.
அதில் IMAPI CD-Burning COM Service என்ற வரியைத்தேடி அதை இரட்டை கிளிக் செய்தால் அதைப்பற்றிய விவரங்கள் திறக்கப்படும். அதில் Startup type இல் Disabled என்பதை தேர்வு செய்து விட்டு கணினியை Restart கொடுத்து பின்னர் சரிபார்க்கவும்.
2. குறைந்த வேகத்தில் எழுதுங்கள் ( Lower write speed )
3. தரமான சிடி/டிவிடி களை பயன்படுத்துதல்
4. டிவிடி எழுதும் மென்பொருளை மாற்றிப்பார்த்தல்(Cdburnerxp, Ashampoo, Nero, Imgburn )
5. டிவிடி எழுதும் மென்பொருளை மேம்படுத்துதல் ( Updating burning sotware )
6. இந்த முறைகளும் பயன்படவில்லையெனில் உங்கள் சிடி/டிவிடி டிரைவின் லென்சு மாசுபட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கு லென்சை சுத்தப்படுத்தக்கூடிய சிடிகள் கடைகளில் விற்கிறார்கள். (Lens cleaner cd) அந்த சிடியைப்போட்டு ஒருமுறை ஓடவிட்டால் போதும். உங்கள் டிவிடி டிரைவ் சுத்தமாகி விடும். எனக்கும் இதனால் தான் பிழைச்செய்தி வந்தது.
7. இவைகளில் சரியாகவில்லை எனில் வன்பொருளில் தான் பிழை இருக்கலாம். அதனால் வேறு டிவிடி டிரைவை பயன்படுத்திப்பாருங்கள்.
Tweet | |||
மீண்டும் ஒரு பயனுள்ள தகவல் அருமை
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ,
தொடருங்கள்....
நன்றி
வாழ்க வளமுடன்
பயனுள்ள தகவல்!
ReplyDelete