Dec 23, 2010

100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை


Money making with google adsenseநம்மில் பலருக்கும் இப்போது செய்யும் வேலையை விட வேறு ஏதேனும் வழிகளில் சம்பாதிக்க வாய்ப்புண்டா என்று தேடியலைகிறோம். பலருக்கும் இணையம் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று பல கேள்விகள் மனசுக்குள் இருக்கிறது. இணையம் மூலம் சம்பாதிக்க முடியும் என்பது நிச்சயமான உண்மை தான். ஆனால் ஒரிரவில் இணையத்தில் பணம் பார்த்து விடமுடியாது. இதிலும் உழைப்பின்றி நேர்மையின்றி சம்பாதிக்க முடியாது. சில வழிகளைக் கையாளுவதன் மூலம் இணையத்தில் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வோம்.


ஆட்சென்ஸ் (Google Adsense) மட்டுமே இணைய உலகின் முடிசூடா மன்னனாக இருக்கிறது. அதிகளவு பணத்தை அள்ளித்தருவதில் ஆட்சென்ஸ்க்கு தான் முதலிடம். இது புகழ்பெற்ற கூகிள் நிறுவனத்தின் சேவையாகும்.

ஆட்சென்ஸ் என்பது என்னவென்றால் நிறுவனங்கள், வர்த்தகர்கள், விளம்பரதாரர்கள் ( Advertisers) போன்றவர்களின் விளம்பரங்களை குறிப்பிட்ட கமிஷனுக்கு பெறுகிறது. பின்னர் நம்மைப்போன்ற வலைப்பதிவுகள், இணையதளங்கள் (Blogs,Websites are as Publishers) போன்றவற்றுக்கு அந்த விளம்பரங்களை கொடுத்து வலைப்பக்கங்களில் வெளியிட வைக்கின்றன.

இதில் நமது பக்கத்தில் விளம்பரங்களை பார்ப்பவர்கள் அதை கிளிக் செய்து பயனடைந்தால் நமக்கு குறிப்பிட்ட பணம் கிடைக்கும். மேலும் ஒரு நாளைக்கு எத்தனை பேர் நமது தளத்திற்கு வந்தார்கள்(Visiters), எத்தனை பக்கங்களுக்கு சென்றார்கள்(Total pageviews) போன்ற கணக்கும் இருக்கிறது.
Money making with google adsenseஆனால் இந்தியாவிலும் சீனாவிலும் மட்டும் தற்போது ஆட்சென்ஸ் கணக்கு பெறுவதை கடுமையாக்கி விட்டது கூகிள். ஏனெனில் மக்கள்தொகை பெருக்கமுள்ள இரண்டு நாடுகளிலும் அதிகமாக கணக்கு பெறுவர் என்பதால் வரைமுறைகளை கொண்டு வந்தது.

எனக்கு 2007 ல் விண்ணப்பிக்கும் போது என் பிளாகில் ஓரே ஒரு கட்டுரை தான் போட்டேன். இரண்டு நாட்களில் எளிதாக கிடைத்து விட்டது. இப்போது வலைத்தளம் ஆரம்பித்து ஆறு மாதங்கள் வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு பதிவுகள் போட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பார்வையாளர்கள் வந்திருக்க வேண்டும். ஆட்சென்ஸ் ஆல் அங்கிகரிக்கப்பட்ட மொழியில் இருக்க வேண்டும்(Adsense supporting Languages). வலைத்தளத்திற்கு டொமைன் பெயர்(Domain Name) வாங்கியிருக்க வேண்டும்.

இது போன்ற நிபந்தனைகள் பல உள்ளன. இதற்கேற்ப நேர்மையான வழியில் எப்படி ஆட்சென்ஸ் கணக்கு பெறுவதைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

ஆட்சென்ஸ் வலைத்தளம்

*************************************************************

100 வது பதிவை போடுவதற்கு நிறைய யோசித்தாகிவிட்டது. கவிதைகள் பேசும் இனிய தோழி சுபத்ராவிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் கவிதை ஒன்றையும் போடலாம் என நினைத்தேன். இனிமையான கவிதையை அனுப்பிய சுபத்ராவிற்கு நன்றி. இந்த நேரத்தில் என் பதிவுகளை படித்து உற்சாகப்படுத்தும் அன்பு நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும் எனது நன்றிகள்.

அன்பை
அணையிட்டு
அடைக்க முடியுமா?

ஆசையையும்
ஆணவத்தையும்
ஆள முடியுமா?

இருவர் அன்பை
இருவரியில்
இயம்ப முடியுமா?

ஈகையில்லாமல்
ஈசனை
ஈர்க்க முடியுமா?

உண்மையற்று
உழைத்தால்
உயர முடியுமா?

ஊழல்களை
ஊமையாய்
ஊக்குவிக்க முடியுமா?

எண்ணத்தை
எழுத்தால்
எடைபோட முடியுமா?

ஏற்றிவிட்ட
ஏணியை
ஏய்க்க முடியுமா?

ஐயங்களை
ஐவிரலில்
அடக்க முடியுமா?

ஒப்பனையற்ற
ஒற்றுமையை
ஒறுக்க முடியுமா?

ஓடும் வாழ்க்கை
ஓடத்திலே
ஓய முடியுமா?

ஔவை தந்த
ஔடதத்தை
ஒதுக்க முடியுமா?

……….இவையெல்லாம் முடியுமோ முடியாதோ, பாசம் கொண்ட என் தோழி பொன்மலரைப் பாராட்டாமல் இருக்க முடியாது…..:))
நூறாவது பதிவைக்காணும் அவளது வலைத்தளத்திற்கு எனது வாழ்த்துகள்…!!!
நூறு ஆயிரமாகட்டும். தரமுள்ள உன் சேவை தொடரட்டும்…. பதிவுலகின் சார்பாக வாழ்த்துகள் பல……!!!!


சுபத்ராவின் வலைப்பதிவுகள்:
http://subadhraspeaks.blogspot.com/
http://raadhaiyinnenjame.blogspot.com/

26 comments:

  1. 100க்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.. உங்கள் ஒவ்வொரு பதிவையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்..!

    ReplyDelete
  3. இவ்வாறான பதிவுகளை நாம் முக்கியம் எதிர்பார்க்கிறேன். வழங்கியவர் http://jiyathahamed.blogspot.com/

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்.... சுபத்ரா கவிதை எப்பவும் போல நல்லா இருக்கு....

    ReplyDelete
  5. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    இரண்டு மேசெஜும் நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. ஔவை தந்த
    ஔடதத்தை
    ஒதுக்க முடியுமா?//

    இங்க ரெண்டு ஒள தான் இருக்கு.... தப்பு தப்பு :)

    ReplyDelete
  7. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  8. Adsense Information is Great di.. Then Wishes for ur 100th post.. Love u chellam.. :-*

    ReplyDelete
  9. தகவலுக்கு மிக்க நன்றிங்க 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  10. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  11. நூறாவது பதிவா...
    ம்ம் கலக்குங்க..
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. vaalthukkal 100 vathu pativirkku..innum niraiyaa eluthunka.... :)

    ReplyDelete
  13. 100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்!

    ReplyDelete
  14. வாழ்த்துகள்..!! கவிதை சூப்பர்..!!

    ReplyDelete
  15. உங்களின் பதிவுகள் அத்தனையும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள். ஒரு உதவி செய்யுமாறு மிகவும் வேண்டிக்கேட்டு கொள்கிறேன்.வீடியோ படம் போகும் பொழுது கீழே தமிழ் எழுத்துகளை ஓட விட மென்பொருள் இருந்தால் கூறுங்கள்.

    ReplyDelete
  16. Congrats for 100th post. Enjoy the world with full of happiness

    ReplyDelete
  17. thanks அன்பரசன்,தங்கம்பழனி,Jiyath ahamed ,Arun Prasath,Jaleela Kamal ,Thomas Ruban

    ReplyDelete
  18. thanks to Thomas Ruban, மாணவன் ,நீச்சல்காரன், இந்திரா,ம.தி.சுதா,எஸ்.கே,சேலம் தேவா

    ReplyDelete
  19. thanks tamilnenjam sir giving supports for me

    ReplyDelete
  20. http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_28.html

    நேரம் கிடைக்க்கும் போது இங்கு வந்து இந்த விருதை பெற்று கொள்ளுஙக்ள்

    ReplyDelete
  21. ஆட்சென்ஸ் பற்றிய பதிவை தொடர்ந்து எழுதுவதாக சொல்லியிருந்தீர்கள்.. இதுவரைக்கும் எதையும் காணோமோ? எதிர்பார்த்து காத்திருகிறோம்..

    ReplyDelete
  22. ஆட்சென்ஸ் Website க்கு போனால் blog language ல் Tamil இல்லையே?

    ReplyDelete