Apr 8, 2011

IPL4 T20 கிரிக்கெட் மேட்சுகளை இணையத்திலும் மொபைலிலும் லைவ் ஆக பார்க்க…


ipl+4+t20+live+castingகிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றதும் சூட்டோடு சூடாக உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 4 வது சீசன் ஏப்ரல் 8 நாளை முதல் தொடங்குகிறது. கடந்த முறை இணையத்தில் IPL கிரிக்கெட் விளையாட்டுகளை நேரலையாக யூடியுப் நிறுவனம் தனது இணையதளத்தில் Live Streaming செய்து மிகுந்த புகழை அடைந்தது. பல நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் வேலையை மறந்து IPL கிரிக்கெட்டை அலுவலகத்திலேயே திருட்டுத்தனமாக பார்த்து ரசித்தனர். ஆனால் இந்த முறை யூடியுப் இணையதளத்தோடு ஒப்பந்தம் செய்யப் படவில்லை.

சென்ற முறை கலந்து கொண்ட அணிகளோடு புதியதாக கொச்சி அணியும் புனே அணியும் சேர்ந்துள்ளன. இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமையை சோனியின் செட் மேக்ஸ் தொலைக்காட்சி பெற்றுள்ளது.

தொலைக்காட்சியில் பார்க்க முடியாதவர்களுக்கு ஐபிஎல் நிறுவனம் இந்தியா டைம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் லைவ் ஆக இணையதளத்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் பார்க்க முடியும். மொபைலில் 3G போன்று நல்ல இண்டர்நெட் இணைப்பு இருந்தால் தாராளமாக பார்க்க முடியும்

ipl4+t20+all+teams+stills
யூடியுப் சிறப்பான சேவை தான். ஆனால் 5 நிமிடங்கள் தாமதத்தோடு தான் விளையாட்டுகள் இணையத்தில் ஒளிபரப்பப் பட்டன. ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகளாகவும் முதல் போட்டி மாலை 4 மணிக்கும் இரண்டாவது போட்டி இரவு 8 மணிக்கும் நடை பெறுகிறது.

இந்தியா டைம்ஸ் லைவ் கிரிக்கெட் பார்க்க : http://ipl.indiatimes.com/

மற்றபடி எப்போதும் போல ஸ்கோர்களை அறிய Cricinfo.com, iplT20.com போன்ற
இணையதளங்களையும் பார்க்கலாம்.

கிரிக்கெட் போட்டிகளின் முக்கிய காட்சிகள் அல்லது ஹைலைட்ஸ் பார்க்க
யூடியுப் இன் இணையதளத்தில் அறியலாம். IPL Youtube Channel

கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையைப் பார்க்க : http://accreditation.bcci.tv/iplmgr/flash/player.html

முதல் போட்டி நாளைய தினம் சென்னையில் 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இறுதிப் போட்டி மே மாதம் 8 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

3 comments:

  1. blank

    மிகவும் பயனுள்ள தகவல் ..............

    ReplyDelete
  2. head

    நல்ல தகவல் பகிர்வு. நன்றி தல.

    ReplyDelete
  3. daniel_craig

    என் நண்பன் ஸ்கோர் என்ன.. ஸ்கோர் என்ன ... னு உயிரை எடுப்பான் .. இத அவனுக்கு மெயில் பண்ணிட்டேன் .. நான் தப்பிசிடேன்

    ReplyDelete