வலைத்தளங்களைத் தரம்படுத்த உதவும் கூகிள்+1 பட்டனை முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது கூகிள் நிறுவனம். இதன் மூலம் நமது பதிவுகளைப் படிக்கும் வாசகர்கள் பட்டனைக் கிளிக் செய்து ஓட்டுப் போடலாம் என்பதை அறிந்திருப்பீர்கள். இதனால் நமது வலைப்பூவின் தரம் கூகிள் தேடல் (Google Search) போன்றவற்றில் அதிகரிக்கும். கூகிள் இந்த வசதிகளை மேலும் மேம்படுத்தி வருகிறது. இன்று வலைத்தளம் வைத்திருப்பவர்கள் கூகிள்+1 பட்டனுக்கான புதிய வசதிகளை முதல் ஆளாக உடனடியாக அறியவும் பெறவும் ஒரு வழி ஏற்படுத்தியிருக்கிறது.
Jul 30, 2011
வலைப்பூவிற்கான கூகிள்+1 பட்டனில் புதிய வசதிகளைப் பெற
10 Commentsவலைத்தளங்களைத் தரம்படுத்த உதவும் கூகிள்+1 பட்டனை முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது கூகிள் நிறுவனம். இதன் மூலம் நமது பதிவுகளைப் படிக்கும் வாசகர்கள் பட்டனைக் கிளிக் செய்து ஓட்டுப் போடலாம் என்பதை அறிந்திருப்பீர்கள். இதனால் நமது வலைப்பூவின் தரம் கூகிள் தேடல் (Google Search) போன்றவற்றில் அதிகரிக்கும். கூகிள் இந்த வசதிகளை மேலும் மேம்படுத்தி வருகிறது. இன்று வலைத்தளம் வைத்திருப்பவர்கள் கூகிள்+1 பட்டனுக்கான புதிய வசதிகளை முதல் ஆளாக உடனடியாக அறியவும் பெறவும் ஒரு வழி ஏற்படுத்தியிருக்கிறது.
Jul 24, 2011
இணையத்தில் வீடியோக்களை பல வடிவங்களில் தரவிறக்க ஒரு தளம் WebVideoFetcher
7 Commentsஇணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய பார்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை. FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற இணையதளங்களில் காணப்படும். தரவிறக்கி முடிந்தவுடன் மறுபடியும் அந்த வீடியோவை நமக்கு வேண்டிய பார்மேட்டில் மாற்ற வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ளும். தரவிறக்கும் போதே வேண்டிய பார்மேட்டில் தரவிறக்கம் செய்ய பல மென்பொருள்களும் கிடைக்கின்றன.
Jul 21, 2011
கணிணியில் வெற்று போல்டர்களை எளிமையாக அழிக்க RED மென்பொருள்
12 Commentsபல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணிணியில் பல வெற்று போல்டர்கள் (Empty Folders) நமக்குத் தெரியாமல் உருவாகி நிறைந்திருக்கும். இவை கணிணியின் ஹார்ட் டிஸ்கில் பல இடங்களில் இருக்கலாம். கணிணியில் மென்பொருள்களை நிறுவும் போதும் அவற்றை நீக்கும் போதும் சில வெற்று போல்டர்கள் அழிக்காமலே விடப்படுகின்றன. சில நேரம் நாமே New Folder உருவாக்கி விட்டு அதனை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டு வைத்திருப்போம். இவைகளைத் தேடிக் கண்டறிந்து அழிப்பது சுலபமான விசயமன்று.
Jul 20, 2011
சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )
7 Comments
புரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங்களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின்றன. இதனை கல்லூரி, அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில்நுடபத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனிலிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை எந்த இடத்திலும் பெரிது படுத்திப் பார்க்க வழிசெய்திருக்கிறார்கள். இதனால் எதேனும் கூட்டங்களில் எளிமையாக நாமும் விளக்கப்படங்களையும் திரைகளில் காட்டி விளக்கம் அளிக்கலாம். போனில் உள்ள படங்களை பெரிதாகப் பார்த்து மகிழலாம்.
Read More
Jul 17, 2011
MP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது – சைபர் கிரைம் சிக்கல்கள்
17 Commentsஇணையத்தில் நடக்கும் குற்றங்களையும் மோசடிகளையும் விசாரிக்கவும் தடுக்கவும் செயல்பட்டு வருவது சைபர் கிரைம் காவல் துறை ஆகும். இணையத்தில் எதைச் செய்தால் குற்றம்/ குற்றமல்ல என்பது சரியாக வரையறுக்கப்படாத இந்த காலகட்டத்தில் Mp3 தளமொன்றை நடத்தி வந்த குஜராத் மாணவரை சைபர் கிரைம் கைது செய்துள்ளது. இணையத்தில் பாடல்களைக் கேட்கவும் அவற்றைக் கணிணிக்குத் தரவிறக்கவும் பல இணையதளங்களும் வலைப்பூக்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சரியான அனுமதியும் உரிமையுமின்றியே பாடல்களை வழங்கிவருகின்றன.
Jul 7, 2011
வலைப்பூவில் கூகிள்+ புரோபைல் பட்டனை இணைப்பது எப்படி? (Google+ Profile Button)
9 Commentsகூகிளின் புதிய சமூக வலைத்தள சேவையான கூகிள் பிளஸ் சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூகிள் இந்த சேவையை மேலும் மெருகேற்றி வரும் நேரத்தில் இணையதளம் மற்றும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்தி இணையவரத்தையும் வலைத்தளத்தின் மதிப்பையும் உயர்த்துவது முக்கியமான ஒன்றாகும். இதற்கு முன்னர் வெளியான கூகிள் +1 பட்டனை வலைத்தளத்தில் இணைத்திருப்பீர்கள். இதில் ஒட்டுப்போட்டால் கூகிளின் பார்வையில் நமது வலைத்தளத்தின் மதிப்பும் உயரும்.இப்போது வந்திருக்கும் கூகிள்+ சமூக வலைத்தள சேவையில் நமது நண்பர்களாக பலரைச் சேர்ப்பதன் மூலம் நமக்கு நிறைய ஓட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதல்லவா?