Nov 6, 2011

பிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க


வலைத்தளத்தின் முகவரிக்கு அருகில் சிறிய படத்தினை லோகோவாக வைப்பது Favicon என்று சொல்வார்கள். இதனை பிளாக்கர் செட்டிங்க்ஸ் பகுதியிலேயே சேர்க்கும் வசதியை பிளாக்கர் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக ஒரு சிறிய படத்தினை இதற்குப் பயன்படுத்துவோம். நகரும் தன்மையுடைய அனிமேட்டட் ஃபெவிகான் எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

Favicon.cc என்ற தளம் புதுமையான முறையில் ஃபெவிகான்களை உருவாக்க உதவுகிறது. இதில் நாமே நமக்கு வேண்டியவாறு ஃபெவிகானை வரைந்து கொள்ள முடியும். இந்த தளத்திற்குச் சென்றால் சிறுசிறு கட்டங்களால் வரைவதற்குத் தேவையான பகுதி காணப்படும். இதில் தேவையான வண்ணங்களை வைத்து எழுத்துகளாக அல்லது படங்களாக மவுசை வைத்து இழுத்து உருவாக்கலாம். நாம் வரைய வரைய கீழேயே அதன் முன்னோட்டம் தெரிந்து விடும்.

அனிமேட்டட் பெவிகான் உருவாக்க :

1. முதலில் இந்த தளத்திற்குச் சென்று வரையும் பகுதிக்குக் கீழே இருக்கும் Use Animation என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும். அதில் இப்போது Frame 1 of 1 என்று இருக்கும். அதாவது முதலில் வைக்கப்படும் படமாக எடுத்துக் கொள்ளப்படும். எதாவது உங்களுக்குப் பிடித்தமானவாறு வரைந்து கொள்ளவும். கால இடைவெளி ஒரு விநாடி என்று இருக்கும். அதிகமாக வேண்டுமெனில் மாற்றிக் கொள்ளலாம்.

2. அடுத்து Append New Frame என்பதைக் கிளிக் செய்தால் இரண்டாவது படம் வைப்பதற்காக வரையும் பகுதி காலியாகத் தோன்றும். அதில் இரண்டாவதாக வரக்கூடிய படத்தை அல்லது எழுத்தை வரைந்து கொள்ளவும்.
3. இதே போல இன்னும் வேண்டுமானால் புதிய பிரேம்களை Append new frame கொடுத்து உருவாக்கலாம். தேவையான பிரேம்களை சேர்த்து முடிந்தவுடன் Looping Options என்பதில் Loop forever என்று இருப்பதால் ஒவ்வொரு பிரேமும் தொடர்ந்து ஒடிக்கொண்டே இருக்கும். குறிப்பிட்ட சுழற்சிக்குப் (Iterations) பின் நிறுத்திவிடும் படியும் செய்யலாம்.
பின்னர் உருவாக்கப்பட்ட ஃபெவிகானை தரவிறக்கம் செய்ய கீழேயே Download Link இருக்கும். அதைத் தரவிறக்கி பிளாக்கரில் நுழைந்து Design -> Page Elements செல்லவும். அதில் மேல்பகுதியில் உள்ள Favicon என்ற இடத்தில் Edit கொடுத்து உங்கள் பெவிகான் கோப்பைத் தரவேற்றி சேமியுங்கள்.

இந்த இணையதளத்தில் அனிமேட்டட் ஃபெவிகான் தான் உருவாக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண வகையிலும் உருவாக்கிக் கொள்ளலாம்.
இணையதளம் : http://favicon.cc

12 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவை பகிர்ந்திருக்கிறீர்கள் நன்றி...

    ReplyDelete
  2. இண்ட்லி மற்றும் உடான்ஸ் ஓட்டுப்பட்டைகளையும் இணைத்து விட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. ரொம்ப நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது, பகிர்வுக்கு நன்றி தோழி

    ReplyDelete
  4. பயனுள்ள தகவலுக்கு நன்றி........

    ReplyDelete
  5. ஓட்டுப்பட்டைகள் இணைத்தால் இன்னும் நன்றாக இருக்குமே..!!

    ReplyDelete
  6. வணக்கம்.
    தங்களின் வலைப் பதிவின் மூலம் நகரும் தன்மையுடைய அனிமேட்டட் ஃபெவிகான் எப்படி வைப்பது என்பதை பதிவர்கள் தங்கள் வலைப் பக்கத்தில் பயன் படுத்தும் போது மேலும் அழகுடன் காட்சியளிக்க உதவும்.
    அன்புடன்
    முனி பாரதி
    http://muneespakkam.blogspot.com/

    ReplyDelete
  7. உங்களின் பக்கம் சரியாக லோட் ஆகத்தால் ஓட்டுப்பட்டை தெரியவில்லை.. இப்போது நன்றாக தெரிகிறது.! ஓட்டும் போட்டுவிட்டேன். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. பயனுள்ள பகிர்வு. நன்றிகள் பல .

    ReplyDelete
  9. நம்முடைய தமிழ் தளதிரற்க்கு எப்படி கூகிள் ஆட்சென்ஸ் ஆக்டிவேட் பண்ணுவது என்று கூற முடியுமா?

    ReplyDelete
  10. very super fr, all the best,

    ReplyDelete