Aug 17, 2009

ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...

Start மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமான
செயலாக இருக்கிறதா ? நீங்கள் விரும்பினால் ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும் குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா ? இதை நீங்கள் இயக்கியவுடன் உங்களின் அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே மூடிவிட்டு Restart செய்கிறது. அனால் எல்லாவற்றையும் முன்பே நீங்கள் சேமித்து கொள்ள வேண்டும்.இந்த வேலையை செய்யுமாறு ஒரு Shortcut icon உருவாக்குவது எப்படி மட்டும் பார்ப்போம்.


1.உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து வரும் பட்டியில்
New -> Shortcut Icon என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. அடுத்தது குறுக்கு விசைக்கான இடத்தை கேட்கும். ( Location ). அதில் கீழ்க்கண்ட வரியை அடிக்கவும்.
shutdown -r -t 30
(இதில் 30 என்பது விநாடிகளை குறிக்கிறது. உங்களுக்கு ஒரு நிமிடம் கழித்து ஆக
வேண்டும் எனில் 60 என்று கொடுக்கவும். )

3. அடுத்து குறுக்கு விசைக்கான ( Shortcut icon ) பெயரை தரவும். உதாரணமாக
Restart என்று கொடுத்துவிட்டு முடித்து விடுங்கள்.

4. இப்போது நீங்கள் இந்த Shortcut icon ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு
விண்டோஸ் உதவிப்பெட்டி தோன்றி அனைத்தையும் சேமியுங்கள் என்று எச்சரிக்கை செய்தியை அளிக்கும். நீங்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானாக Restart ஆகிவிடும்.

5. சரி நீங்கள் தவறாக Restart கொடுத்துவிட்டீர்கள். இதை எப்படி தடுப்பது என்று நினைத்தால்,
Start -> Run சென்று shutdown -a என்று அடித்தால் போதும். உங்கள் கணினி Restart ஆவது தடுக்கப்படும். நன்றி!

16 comments:

  1. நல்ல தகவல்

    சைனா மொபைலில்[M.REN] தமிழ் எழுத்துகளை படிக்க opera min யை எவ்வாறு Data Cable install செய்வது விளக்கி உதவுங்கள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி. ஆனால் நான் சைனா மொபைல்களை பற்றி அறியவில்லை.

    ReplyDelete
  3. பயனுள்ள தகவலுக்கு நன்றி!!!மேலும் பல பயனுள்ள தகவலை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....மேலும் தமிழ் கம்ப்யூட்டரில் வரும் பயனுள்ள தகவல்களையும் நான் தவறாமல் படிக்கிறேன். என்னால் இயன்ற கட்டுரைகளையும் எழுதிகொண்டு இருக்கிறேன்.

    நித்தியானந்தம்...

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள தகவல்...செய்து பார்க்கிறேன். நன்றி

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி கீதா மற்றும் நித்தியானந்தம்

    ReplyDelete
  6. நன்றிங்கோ...!!

    ReplyDelete
  7. Very good post with clear screen shots. Thank you Ponmalar.

    ReplyDelete
  8. Thanks to Aruna and vigneshwari

    ReplyDelete
  9. சோனி எரிக்ஸன் மொபைலில் தமிழ் ரீடரை எப்படி நிறுவுவது மற்றும் தமிழ் யூனிக்கோட் மூலமாக எப்படி தமிழ் குறுஙஞ்செய்தி அனுப்புவது ?

    ReplyDelete
  10. very useful site...
    then can u give any computer ebooks in tamil language plzzzzzz...
    i need immediately plz help for me.
    continue your work.

    Thank You...

    ReplyDelete
  11. really working good... nic keep it u[p

    ReplyDelete
  12. சூப்பர் தகவல் தலைவா...

    ReplyDelete
  13. பயனுள்ள தகவலுக்கு நன்றி.

    ReplyDelete