
தகவல்களையும் கணக்குகளையும் நிர்வகிக்கப் பயன்படும் சிறப்பான மென்பொருளான எக்சலில் (MS-Excel) இன்று ஒரு பயனுள்ள Add-in பற்றி அறிந்து கொள்வோம். ஒரே மாதிரியான தகவல்களைக் கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட எக்சல் கோப்புகளை வைத்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட பல எக்சல் வொர்க்ஷீட்களை இணைக்கும் வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு எக்சல் ஃபைலாகத் திறந்து காப்பி செய்து தனியாக வேறொரு எக்சல் ஷீட்டில் பேஸ்ட் செய்வீர்கள். இது பொதுவான நடைமுறையெனினும் குறைவான...