Sep 2, 2012

உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா? – சில டிப்ஸ்

how-to-track-adsense-cheque-4கூகிளின் ஆட்சென்ஸ் விளம்பரங்களை வலைப்பூவில் இணைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களின் ஆட்சென்ஸ் கணக்கில் இந்த மாதம் 100 டாலர் சேர்ந்திருந்தால் அதனை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் காசோலையாக (Adsense Cheque) அனுப்புவார்கள். எப்படியும் மாத இறுதியான 23 – 27 ந்தேதிக்குள் அனுப்பி விடுவார்கள். சரி ஆட்சென்ஸ் செக் உங்கள் கைக்கு எப்போது வரும், எப்படி வரும் என்று புதியவர்கள் அறிந்து கொள்ள சில டிப்ஸ்கள் இங்கே.

• முதலில் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைந்தவுடனே மேல்பகுதியில்
Finalized Earnings என்பதில் இந்த மாதம் செக் போடப்பட்டு விட்ட்தா என உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். போடப்பட்டிருந்தால் Most Recent Payment என்றும் கீழே தேதியும் இருக்கும். மேலே சொன்ன மாதிரி பெரும்பாலும் 23 – 27 ந்தேதிக்குள் தான் செக் போடப்படும்.
how-to-track-adsense-cheque-1• அடுத்து Finalized Earnings->Details என்பதைக் கிளிக் செய்யவும். இல்லை இட்துபுறத்தில் Payments என்பது வழியாகவும் செல்ல்லாம். அதில் உங்களுக்கு இதுவரை அனுப்பிய ஆட்சென்ஸ் காசோலைகளின் விவரம் இருக்கும். அதில் கடைசியாகப் பார்த்தால் Payment Issued என்றிருக்கும். அதனருகே Details என்பதைக் கிளிக் செய்தால் அனுப்பப் பட்ட செக்கின் விவரங்கள் இருக்கும். (பட்த்தில் பார்க்க)
how-to-track-adsense-cheque-2• உங்கள் பணம் டாலரில் மற்றும் ருபாயில் Payment Type, Date மற்றும் Payment Number போன்ற விவரங்கள் குறிப்பிட்டிருப்பார்கள்.இந்த Payment Number ஐ காப்பி செய்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

• அட்சென்ஸ் செக் இந்தியாவில் ஹைதராபாத் தலைமையகத்திற்கு வந்து சேர தோராயமாக 10-15 நாள்கள் எடுத்துக் கொள்ளலாம். பின்னர் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு DHL/Bluedart கொரியர் மூலமும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு சாதாரண தபால் மூலம் வழங்கப் படும்.

• நீங்கள் நகர்ப்புறத்தில் வசிப்பவராயின் Bluedart இணையதளத்தில் சென்று Track your Shipment பகுதியில் Ref No வட்டத்தைக் கிளிக் செய்யவும். பின்னர் அந்த கட்டத்தில் உங்களின் Payment Number இல் பூஜ்யத்தை எடுத்துவிட்டு அடித்தால் அவர்கள் உங்கள் செக்கை எடுத்துக் கொண்ட விவரங்கள் கிடைக்கும். அதில் Pickup date, From, To, Status, Date of Delivery போன்றவை இருக்கும்.

how-to-track-adsense-cheque-3• உங்கள் செக் வந்து கொண்டிருந்தால் Status – In Transit என்றும் வந்து சேரும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் WayBill No என்று ஒரு எண் இருக்கும்,அதை மறக்காமல் குறித்துக் கொள்ளுங்கள். அவர்கள் இன்னும் ஹைதராபாத்தில் செக் எடுக்காவிடில் எந்த விவரமும் வராது. அதனால் செக் வரப்போகும் மாதத்தின் 4ம் தேதி முதல் 12 ந்தேதிக்குள் வரை தினமும் இதனை ஒருமுறை வந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

• Bluedart தளத்தில் செக் எடுக்கப்பட்டிருந்தால் Email Alert வசதியிருக்கிறது. அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும் மற்றும் உங்கள் Waybill Status இல் எப்போது யாரிடம் கொடுத்தார்கள் என்று அப்டேட் செய்து விடுவார்கள்.

• சரி வீட்டிற்கு வரும் போது யாரும் வீட்டில் இல்லை அல்லது அவர்களால் உங்கள் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் என்ன ஆகும்? அந்த நிலையை நமது WayBill Status இல் ஏற்றிவிடுவார்கள்.

• சில நேரம் அவர்கள் மறுபடியும் அடுத்த நாள் வந்து கொடுக்க வாய்ப்பிருக்கிறது. எத்தனை நாள் அவர்கள் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அப்படி நீங்கள் தவறவிட்டு விட்டால் தயங்காமல் உடனடியாக Bluedart இணையதளத்தில் Contact பகுதிக்குச் சென்று உங்கள் ஊரின் Customer Care எண்ணைக் கண்டறிந்து உங்கள் WayBill Number ஐச் சொல்லுங்கள். உங்கள் செக்கினை மறுபடியும் கொண்டுவருவதாகச் சொன்னால் சந்தோசப்படுங்கள். இல்லையெனில் நீங்களே எதேனும் உங்கள் பெயருள்ள அடையாள அட்டையை எடுத்துச் சென்று வாங்கிவிடுங்கள்.

• நீங்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராயின் உங்கள் பகுதியில் DHL/Bluedart வராமல் இருந்தாலும் உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் சாதாரண தபாலில் தான் வரும். அதனால் செக் வந்து சேர Payment Issued தேதியிலிருந்து ஒரு மாதம் கூட ஆகலாம். பொறுமையாக காத்திருங்கள்.

• கண்டிப்பாக ஏற்கனவே பார்த்தபடி செக் வருவதினைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். அதனால் வீட்டில் யாராவது இருக்கும்படி செய்து விடுங்கள். சாதாரண தபாலில் வருவதாக இருப்பின் உங்கள் பகுதி தபால்காரரிடம் சொல்லி வைத்து விடுங்கள். இல்லையெனில் செக்கை மறுபடியும் கூகிளுக்கே அனுப்பி விடுவார்கள். அது மறுபடியும் கணக்கில் ஏற ஒரிரண்டு மாதங்கள் கூட ஆகலாம்.

28 comments:

  1. blogger_logo_round_35

    Hi,
    Adsense informs that it is not available for Tamil/English sites, can u throw some information?
    Regards

    ReplyDelete
  2. blogger_logo_round_35

    அன்புச்சகோதரிக்கு வணக்கங்கள் தமிழுக்கு தங்களைப்போன்ற தொழில்நுட்ப பதிவர்கள் செய்யும் தொண்டு மகத்தானது தொடருட்டும் உங்கள் அரும்பணி. தமிழ் தளங்களுக்கு கூகுள் ஆட்சென்ஸ் தருவதில்லையே தாங்கள் பெற்றது எப்படி ? அதைக்கூறினால் ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்கள் பயனடைய முடியுமே ? கூறுவீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. blogger_logo_round_35

      தமிழ் தளங்களை வைத்து ஆட்சென்ஸ் வாங்க முடியாது. நிராகரித்து விடுவார்கள். முதலில் ஆங்கில தளமொன்றில் சிறப்பாக எழுதி ஆட்சென்ஸ் வாங்குங்கள். பின்னர் தமிழில் பயன்படுத்துங்கள். ஆட்சென்ஸ் விதிகளின் படி தமிழில் பயன்படுத்துவதும் தவறு தான்.

      Delete
    2. blogger_logo_round_35

      niragaritha adsence account-ai thirumba use pana mudiyuma?

      Delete
  3. .com/img/b/R29vZ2xl/AVvXsEh8R-jEOZ8Nk7NcVKrYUrJQdA7pXBAovyQ9QyVCaJpXKZZtfL9fTByAfkaDk8-DpiBLpu7eJA7tIwxyt_kiOFBvY5lOcWKYaPDI5Qqllo9A0uorn2yeobnSOdbWGEvP0Q/s45-c/

    நமக்கு அந்த யோகமெல்லாம் கிடையாது சகோதரி.ஆனாலும் தெரிஞ்சி வச்சுக்கிறோம். நன்றி

    ReplyDelete
    Replies
    1. logo-png-2

      Mr.T.N.MURALIDHARAN அவர்களே முயற்சி செய்தால் நம்மால் முடியும்

      Delete
  4. DSC00674

    நல்ல விளக்கம்...நீங்க நிறைய வாங்கி இருக்கீங்க போல...அப்போ தமிழ்ல எழுதுனா கிடைக்காதா...?

    ReplyDelete
  5. blogger_logo_round_35

    Hi madam, Recently i have received a cheque from google. But the amount in USD. What should i do, if i want to receive a cheque in INR.

    thanks and regards

    nagu
    www.tngovernmentjobs.in
    (nagaindian@sify.com)

    ReplyDelete
  6. alagu

    புதியவர்களுக்கு இதுபோன்ற சந்தேகங்கள் இருப்பின் தங்களது பதிவிலேயே தெரிந்துகொள்ளும்படி செய்துவிட்டீர்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. Cute+bab

    Dear sister Ponmalar, your posting of tips of adcence is really very useful for bloggers, and your direct reply of a question of Mr.Guru is very sincere. hats off sister. Thank you

    ReplyDelete
  8. blogger_logo_round_35

    தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் சகோ.!

    நானும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.

    :D :D :D

    ReplyDelete
  9. 22

    அன்பின் சகோதரி...

    தகவல்களுக்கு மிக்க நன்றி.இந்த மாதம்தான் நானும் முதல் செக் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

    சரியான நேரத்தில் உதவிய பகிர்வு.

    பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  10. blank

    நல்ல பயனுள்ள தகவல்கள்!

    கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் பகுதியில், Western union மூலம் தொகையை பெற்றுக் கொள்ளும் ஆப்ஷனும் உண்டு.

    சிறு பெரு நகரங்களில் மூலை முடுக்கெல்லாம் வெஸ்டர்ன் யூனியனின் கிளைகள் இருப்பதால், இதன் மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்வது எளிதாக உள்ளது.

    ReplyDelete
  11. blogger_logo_round_35

    எனக்கும் இதுக்கும் ரொம்ப தூரம்.. :-)

    அறிந்து கொண்டேன் நன்றி!!

    ReplyDelete
  12. blogger_logo_round_35

    நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன்..பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  13. .com/img/b/R29vZ2xl/AVvXsEizDrv21Y0PJ7UkKf6ePu8V_k_uahoiSeDvuXqchCCc--geLBr2UmLxodt3sawDWlNY-6ENv2k4kePABeEe6JEr-TUFLY8ixdTsuSdlSSeKCJSpQ7V4OSy28rVpSY2HKDY/s45-c/

    அறிந்து கொண்டேன் சகோதரி... தேவைப்படும்... சேமித்துக் கொண்டேன்...

    ReplyDelete
  14. blogger_logo_round_35

    என்னதிது ஆட்சென்ஸ. கொஞ்சம் விவரமாகக் கூறமுடியுமா?

    ReplyDelete
  15. blogger_logo_round_35
  16. blogger_logo_round_35

    அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  17. Different+tamil

    தரமான பதிவுகளுக்கு எப்போதும்
    மதிப்பு உண்டு !
    உண்மையில் பலருக்கு பயன்படும்
    அருமையான தகவல் .
    தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள் .

    ReplyDelete
  18. blank

    Good to know some slimy information like this. Ponmalar, why don't you write a book on "everything on blogging" including google panda in tamil. You are capable of doing this and useful to budding bloggers.

    ReplyDelete
  19. blogger_logo_round_35

    மிகவும் பயனுள்ள தகவல்...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  20. sun
  21. photo
  22. blogger_logo_round_35

    hi
    ennidam adsense irukkirathu but not show in tamil website
    oru coding serthu poddal adsense show akum endu kelvipadden
    please help me

    ReplyDelete
  23. blogger_logo_round_35

    hi naan oru blogger vachirukiran athula eppidi adsense account approval eadukirathu please help naan enda blogger 25 post pannettan my email harisan1993@hotmail.com my

    ReplyDelete
  24. blank

    Mr Harisan,

    If you have Tamil blog don't try to get adsense account. Try to get it through an English website that should be reached near 7000 pageviews to get adsense account. Levin

    ReplyDelete
  25. 38422_103537716366943_100001321458343_25889_6911858_n

    நண்பர்களே! மாதா மாதம் பரிசுகளை வழங்க ஒரு இணைய தளத்தை உருவாக்கி உள்ளோம். எனவே நீங்கள் வலைப்பூ வெய்த்து இருந்தால் இதனை பகிர்ந்து கொள்ளவும். நீங்களும் இணைந்து பரிசுகளை வெல்லவும். go to : http://www.wwwprize.tk/

    ReplyDelete