Dec 30, 2010

டுவிட்டரிலிருந்து தானாக பேஸ்புக்கில் அப்டேட் செய்ய ஒரு செயலி.

7 Comments

Update facebook status via twitterஇணைய உலகில் டுவிட்டரும் பேஸ்புக்கும் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. இவற்றின் வளர்ச்சி பல நிறுவனங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் பிரபலமாக உதவுகிறது. வலைத்தளம் வைத்திருப்போருக்கும் பதிவுகளை கொண்டு போய் சேர்ப்பதில் இவைகளுக்கும் பங்குள்ளது. பதிவுகளின் சுருக்கத்தையும் இணைப்பையும் மட்டும் டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் போட்டுவிட்டால் நமது நண்பர்கள் மற்றும் பேஸ்புக் பக்கத்தை பார்வையிடுபவர்கள் உடனடியாக நமது தளத்திற்கு வருவார்கள்.
Read More

Dec 28, 2010

Yahoo Mail இல் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தடை செய்வது எப்படி?


Block emails in yahoomailவிளம்பரங்கள் மற்றும் குப்பை மின்னஞ்சல்கள் மற்றும் தொந்தரவு செய்யும் நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களால் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறதா? இவற்றை நிறுத்துவதற்கு சிலர் பாடுபடுவர். ஆனால் நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையிலேயே இத்தகைய வசதிகள் உள்ளன. ஜிமெயிலைப் போலவே யாகூ மெயில் (Yahoo mail) பயன்படுத்துபவர்களும் வேண்டாத / குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்யலாம்.
Read More

Dec 27, 2010

ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி?

12 Comments

Block unwanted mails in gmailதற்போதைய இணைய உலகில் மின்னஞ்சல் சேவை என்பது பலருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கிறார்கள். மின்னஞ்சல் வைத்திருப்போருக்கு இருக்கும் பெரிய தொல்லை தங்களது நண்பர்களிடமிருந்து வருவதை விட விளம்பரங்கள் அடங்கிய மின்னஞ்சல்கள், Spam என்று சொல்லக்கூடிய குப்பை மின்னஞ்சல்களும் வருவதே. இந்த மாதிரி குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பும் நிறுவனங்கள் இணையத்தில் அங்கங்கே வெளியிடப்பட்டிருக்கும் நமது மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து மொத்தமாக அனுப்புகின்றன.
Read More

Dec 23, 2010

100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை

26 Comments

Money making with google adsenseநம்மில் பலருக்கும் இப்போது செய்யும் வேலையை விட வேறு ஏதேனும் வழிகளில் சம்பாதிக்க வாய்ப்புண்டா என்று தேடியலைகிறோம். பலருக்கும் இணையம் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று பல கேள்விகள் மனசுக்குள் இருக்கிறது. இணையம் மூலம் சம்பாதிக்க முடியும் என்பது நிச்சயமான உண்மை தான். ஆனால் ஒரிரவில் இணையத்தில் பணம் பார்த்து விடமுடியாது. இதிலும் உழைப்பின்றி நேர்மையின்றி சம்பாதிக்க முடியாது. சில வழிகளைக் கையாளுவதன் மூலம் இணையத்தில் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வோம்.
Read More

Dec 17, 2010

நம் ஆவணங்களை விரும்பிய வகைக்கு மாற்ற ConvertDoc மென்பொருள்

5 Comments

Convert documents with convertdoc softwareசில நேரம் நம்மிடம் உள்ள பிடிஎப் ( Pdf ) கோப்புகளை வேர்டு டாகுமெண்ட்டாக ( Word document ) மாற்ற வேண்டியிருக்கும். மேலும் வேர்டு கோப்புகளை பிடிஎப் கோப்புகளாக மாற்ற நினைப்போம். இரண்டும் வெவ்வேறு வகைகளாயினும் நமது குறிப்பிட்ட வசதிகளுக்காக மாற்றுவோம். இதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதன் பெயர் ConvertDoc ஆகும்.
Read More

Dec 11, 2010

விண்டோஸ் 7 ல் Default Speaker பிரச்சினைகள்.

5 Comments

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு ஒலிபெருக்கியில் ( Speaker ) எவ்வித பிரச்சினையுமில்லை. லேப்டாப் ஆக இருந்தால் எதாவது ஒரு பாட்டைப் போடும் போது இயல்பாக லேப்டாப்பிலேயே உள்ளிணைந்த ஸ்பீக்கரில் பாடும். மேலும் ஹெட்போன் (Headphones) இணைத்தால் அதை உணர்ந்து ஹெட்போனில் பாடத்துவங்கும். ஆனால் விண்டோஸ் 7 ல் இந்த மாதிரி மாற்றி மாற்றி பயன்படுத்தும் போது சில அமைப்புகளை கையாள வேண்டியிருக்கிறது.
Read More

Dec 7, 2010

எக்சலில் Sumif, Countif பங்சன்களின் பயன்பாடு

6 Comments

excel sumif,countif functionsஅலுவலங்களில் MS Excel தான் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. எக்சலில் நமக்குத் தெரியாத பல பங்சன்கள் உள்ளன. உபயோகப்படும் இரண்டு பங்சன்களை இன்று பார்ப்போம். Sum மற்றும் Count பங்சன்கள் நமக்குத் தெரியும். Sum என்பது எண்களில் அமைந்த தகவல்களை கூட்ட உதவுகிறது. அதே போல count என்பது எத்தனை பேர் அல்லது எத்தனை முறை எனக் கணக்கிட உதவுகிறது. அது என்ன Sumif மற்றும் countif ?
Read More

Dec 6, 2010

டேலி 9 மென்பொருள் முழுவதும் தமிழில் பயன்படுத்த...

7 Comments

Tally 9 in Indian Languagesடேலி பிரபலமான அக்கவுண்டிங் மென்பொருள் என்பது எல்லோருக்கும் தெரியும். நிறுவனமாக இருந்தாலும் தனிநபராக இருந்தாலும் அவரவர்களின் கணக்கு வழக்கு, வரவு செலவு போன்றவற்றை திறம்பட இதில் நிர்வகிக்கலாம். இந்தியாவில் அதிகமாக டேலி மென்பொருளைத் தான் பயன்படுத்துகின்றனர். மேலும் டேலி படிப்பிற்கு அதிக மவுசு உள்ளது. டேலியின் புதிய பதிப்பான 9 ஐ இந்திய மொழிகளிலும் பயன்படுத்தலாம்.
Read More

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...

2 Comments

வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் பதிவுகளை எழுதியதும் வாசகர்களை சென்றடைய திரட்டிகளும் சமூக வலைத்தளங்களும் (Social Networking sites) முக்கிய பஙகாற்றுகின்றன. அதனால் பதிவுகளை எழுதி திரட்டிகளில் சமுக வலைத்தளங்களிலும் பதிவின் விவரத்தை சேர்த்தாக வேண்டும். இதில் டுவிட்டரில் செய்திகளை அளிப்பதன் மூலம் நமது நண்பர்கள் குழு உடனுக்குடன் படித்துவிட வசதியாய் இருக்கிறது. பதிவிட்டதும் டுவிட்டரில் பதிவின் தலைப்பையும் அதன் இணைப்பையும் போடவும் நேரம் வேண்டும்.
Read More

Dec 4, 2010

பென்டிரைவில் கோப்புகள் எல்லாம் ஐகானாக மாறிவிட்டிருந்தால்...

8 Comments

இரண்டு நாட்களுக்கு முன் நண்பரின் பென் டிரைவை (Pen drive) கொண்டுவந்து கொடுத்து வைரஸ்கள் நிறைய நுழைந்துவிட்டன என்றும் சுத்தமாக்கி தருமாறும் கேட்டார்.என்னுடைய கணிணியில் Avast Free Antivirus போட்டிருக்கிறேன். பென் டிரைவைச் செருகி சோதனை செய்த பின்னர் 5 W32.blackworm வைரஸ்கள் இருப்பதாக காட்டியது. அவற்றை அழிப்பதற்கு Action->Delete All என்பதைக் கொடுத்தவுடன் எனது அவாஸ்ட் மென்பொருள் முடங்கியது. “Avast Registration Failed” என்று தகவலும் வந்தது.
Read More

Dec 3, 2010

டிவிடி டிரைவில் எழுதும் போது Power calibration பிழைச்செய்தி வருகிறதா?

2 Comments

Solve Power calibration Error while burningகணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை நகல் எடுக்க பெரும்பாலும் சிடி அல்லது டிவிடி டிரைவைத்தான் பயன்படுத்துகிறோம். சில நேரம் நாம் டிவிடியில் எழுதும் போது கீழ்க்கண்ட இரண்டு பிழைச்செய்திகள் வந்து விடும்.
1. Power calibration error 2. Medium speed error நமக்கோ என்ன செய்வது என்று புரியாது. ஒரு வேளை நாம் போட்ட டிவிடியின் தரம் சரியில்லையோ என்று நினைத்து குழம்புவோம்.
Read More

எந்த மென்பொருளையும் பிறர் பயன்படுத்தாமல் செய்ய AppAdmin


கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம். சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.
Read More

Dec 1, 2010

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய

11 Comments

Search your images online with TinEyeஇணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.
Read More