Apr 16, 2010

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு 5 கணிணி ப்ராஜெக்ட்கள்

கல்லூரியில் Bca, Bsc c.s, Mca, Msc cs, IT மேலும் கணிணியில் இளங்கலை,முதுகலை படிப்பவர்கள் தங்கள் இறுதியாண்டின் போது ஒரு செயல்திட்டம் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.இப்போதெல்லாம் இதற்கெனவே பல பேர் பல செயல்திட்டங்களை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் விற்றுவிடுகின்றனர். அதிகம் இந்த செயல்திட்டங்களை பற்றி அறியாமலே இருப்பதனால் கடைசி நேரத்தில் எதையாவது வாங்கி சமர்ப்பித்து விடுவார்கள்.

நானும் இந்த மாதிரி தான் செய்தேன்.இணையதளங்களில் நிறைய உலவினாலே நிறைய கிடைக்கின்றன. இதை மாதிரியாக வைத்துக்கொண்டு நாமும் புதிதாக செய்து பார்க்கலாம் அல்லவா? programmer2programmer.net என்ற இத்தளத்தில் முற்றிலும் இலவசமாக ஐந்து செயல்திட்டங்கள் கிடைக்கின்றன.


இவர்கள் தரும் முக்கிய வசதி என்னவென்றால்,
அனைத்து ப்ராஜெக்ட் கோப்புகள், ( All project files)
தரவுத்தள வடிவமைப்பு (Database design & layout)
அதைப்பற்றிய விவரங்கள்,படங்கள், வெளியீடுகள் (informations,pictures,output)
அப்படியே கல்லூரியில் சமர்ப்பிக்க தேவைப்படும் அத்தனையும் ஒரு தொகுப்பாக தந்துவிடுகிறார்கள். நீங்கள் இதை செயல்திட்ட புத்தகமாக அச்சடித்து கொடுத்து விட்டால் போதும்.எவ்வளவு எளிமையான விஷயம் இல்லையா?

ஒரு சிறிய அறிமுகம் :
Project #1 - VB6, Access - eBilling and Invoice System
Project #2 - VB.Net, SQL - IMPRO (Industrial Manpower Resource Organizer)
Project #3 - ASP, Access - Online Student Registration System
Project #4 - C#, SQL - Web Based Claims Processing System (WCPS)
Project #5 - VB6, SQL - eProperty - Estate Agent / Property Management சிஸ்டம்

இணையதளம் : programmer2programmer.net

11 comments:

  1. புராஜெக்ட் செய்யவைப்பதின் நோக்கம் மாணவனை ஒரு ஆராய்ச்சி திட்டத்தை வடிவமைத்து அதனை செயல்படுத்தி அதிலிருந்து கிடைக்கும் டேட்டாவினை ஆராய்ந்து அதிலிருந்து ஒரு உபயோகமான முடிவு பெறுவதுதான்.

    யாரோ எழுதிவைத்திருக்கும் புராஜெக்டை காப்பி அடித்து கொடுப்பதால் அந்த மாணவனுக்கு என்ன பயன் கிடைக்கும்?

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள பதிவு..நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் இதனை பற்றி இனி சொல்கிறேன்...நன்றி

    ReplyDelete
  3. nalla arumayana tevayana ondru todarttum ungal pani

    ReplyDelete
  4. //யாரோ எழுதிவைத்திருக்கும் புராஜெக்டை காப்பி அடித்து கொடுப்பதால் அந்த மாணவனுக்கு என்ன பயன் கிடைக்கும்?//
    என்ன சார் பண்ண. நம்ம கல்வி முறை அப்படி இருக்கு. எத்தனை மதிப்பெண் வங்கி இருக்கானுதான் பாக்கறோம். அவனோட செயல் அறிவை நாம பாக்கறது இல்ல

    ReplyDelete
  5. பயனுள்ள குறிப்பு . காலம் மாறிக்கொண்டே செல்கிறது.. மாணாக்கர்களின் தேடல் பரப்பு விரிவடைந்து கொண்டே செல்கிறது. தற்காலக் கல்வி நிலையும் மாறவேண்டும்..

    மாணாக்கனைச் சிந்திக்கச் செய்யவேண்டும்..
    மனப்பாடம் செய்து..
    இருப்பதை எடுத்துக்காட்டும் இயந்திரங்களை உருவாக்குவது கல்வியின் நோக்கமாக இருக்கக்கூடாது.

    கணினியில் தேடவேண்டும் என்று ஒரு மாணாவன் வந்துவிட்டாலே அவன் பாதிக்கிணறு தாண்டிவிட்டான் என்றே நான் கருதுவேன்..

    அவனுக்குள் தேடல் வந்துவிடட்து என்பதே அதன் பொருள். தங்கள் வழிகாட்டுதல் அவர்களைச் சோர்வடையாமல் தேடவைக்கும் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்..

    ReplyDelete
  6. //என்ன சார் பண்ண. நம்ம கல்வி முறை அப்படி இருக்கு. எத்தனை மதிப்பெண் வங்கி இருக்கானுதான் பாக்கறோம். அவனோட செயல் அறிவை நாம பாக்கறது இல்ல//

    ஆம் நீங்கள் சொல்வது சரிதான் LK!யாரும் ஒரு மாணவனுக்குள் இருக்கும் திறமையை பார்ப்பதில்லை அவனுடைய மதிப்பெண்ணையே பார்க்கிறார்கள்.ஏன் பெற்றோர்கள் கூட அதைத்தான் எதிர்ப் பார்க்கிறார்கள்.

    ReplyDelete
  7. Is there is any site to keep record of all phone calls

    ReplyDelete
  8. avar kannil pattathai balar kan bada vaiththar ithil enna thabbunga?

    ReplyDelete
  9. சுயமாக படிப்பவர்களுக்கு நிச்சயம் இது உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  10. Vow..

    //அவனுக்குள் தேடல் வந்துவிடட்து என்பதே அதன் பொருள். தங்கள் வழிகாட்டுதல் அவர்களைச் சோர்வடையாமல் தேடவைக்கும் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்..

    ReplyDelete