Feb 1, 2011

பிளாக்கரில் நாம் எழுதிய பதிவு எத்தனை பேரால் படிக்கப்பட்டது என்பதை அறிய...


postviewsbloggerDisplay page views or post views in Blogger posts
வலைத்தளம் வைத்திருப்பவர்கள் பதிவுகளை போடுவதோடு நிறுத்தி விடாமல் நமது பக்கத்தில் என்னென்ன கட்டுரைகளை அதிகம் படிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நல்லது. ஏனோ தானோ என்று எழுதுவோம். படிப்பவர்களும் நமது பக்கம் என்றால் சலிப்படைவர். அதனால் அவர்களின் படிக்கும் போக்கை கவனிப்பது நமக்கு நலமாகும். ஒரு சிலர் நமது தளத்தின் குறிப்பிட்ட பக்கத்திற்கு வந்து படித்துவிட்டு அதே பக்கத்தோடு வெளியேறுவார்கள். இதைத் தான் bounce என்பார்கள். ஒவ்வொரு பதிவும் எத்தனை பேரால் படிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் எந்த மாதிரி கட்டுரைகளை விரும்புகிறார்கள் என்பதை ஓரளவு அறியமுடியும்.

இன்ட்லி , தமிழ்10 போன்ற திரட்டிகளில் நமது பதிவுகள் எத்தனை ஓட்டுகள் பெறுகின்றன என்பதை நம்மால் சுலபமாக அறியமுடியும். மேலும் வாசகர்களின் வருகையை அறிந்து கொள்ள Hitcounter, Statcounter போன்றவற்றின் மூலம் தினசரி மற்றும் மாத வருகையை அறிய முடியும். ஆனால் இவை ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்பதைத் தான் காட்டுகின்றன. குறிப்பிட்ட பதிவை எத்தனை பேர் படித்தார்கள் என்று தெரியாது.ஒவ்வொரு பதிவின் தலைப்பிலோ அல்லது இறுதியிலோ இத்தனை பேர் படித்தார்கள் என்று போட்டிருந்தால் நமக்கும் வாசகர்க்கும் பயனளிக்கும்.

bloggerpostviews
இதற்கு என்ன செய்வது?

1.கீழே உள்ள நிரல்வரிகளை காப்பி செய்து கொள்ளவும். பின்னர் உங்களின் Blogger கணக்கில் நுழைந்து Design என்பதை கிளிக் செய்யவும்.


<b:if cond='data:blog.pageType == "item"'>
<div id='hit-counter'>
<script src='http://www.amitjain.co.in/pageview.php' type='text/javascript'/>
</div></b:if>


2. Edit Html இல் சென்று Expand widgets என்பதில் டிக் செய்து கொள்ளவும்.

3. <p></data:post.body></p> அல்லது data:post.body என்ற வரிகள் எங்கே இருக்கிறது என்று தேடி அதற்கு முன்பாக காப்பி செய்த நிரல்வரிகளை சேர்த்துக்கொள்ளவும்.இந்த முறை பதிவின் இறுதியில் காட்டுமாறு உள்ளது. நீங்கள் இன்ட்லி ஒட்டுப்பட்டைக்கு அருகில் கூட சேர்க்கலாம்.

உங்களுக்கு பதிவின் தலைப்புக்கு கீழே வேண்டுமானால் post-header-line என்ற வரியை தேடி அதற்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்பாகவோ சேர்த்துக்கொள்ளலாம். இது பதிவின் தேதிக்கு பக்கத்தில் வருமாறு இருக்கும்.

4. நிரல் வரிகளை சேர்த்தபின்னர் Save Template கொடுத்து சேமித்துவிட்டு வலைத்தளத்தை சரிபார்க்கவும். இனிமேல் உங்கள் வலைத்தளத்தில் படிக்கப்படும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் எத்தனை பேர் வந்தார்கள் என்பதை சுலபமாக அறியமுடியும். நன்றி.

மாற்று வழி :

தோழி கீதா ஆச்சல் Html code இல் கை வைக்காமல் செய்ய முடியுமா என்று கேட்டிருந்தார்.அதற்கு Blogger design ->page elements-> Add widget -> Html/Java script என்பதை வரிசையாக கிளிக் செய்து வரும் பெட்டியில் கீழ் உள்ள நிரல் வரிகளை சேர்த்து விட்டு சேமித்தால் ஒவ்வொரு பதிவிற்கும் சைட் பாரில் எண்ணிக்கைதோன்றும்.

<script src='http://www.amitjain.co.in/pageview.php' type='text/javascript'/></script>

14 comments:

  1. blogger_logo_round_35

    பகிர்வுக்கு நன்றி.....

    தேவையான பதிவு நன்றி

    ReplyDelete
  2. ed7a737ed0e87a5053d8b1e77a950e36

    நானும் இதை முயற்சி செய்து பார்த்தேன்.. பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. IMG_5463

    நல்ல பயனுள்ள தகவல்...HTML codeயில் கை வைக்காமல் செய்ய முடியுமா..

    ReplyDelete
  4. Speed+Master

    பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. blogger_logo_round_35

    தோழி கீதா ஆச்சல் Html code இல் கை வைக்காமல் செய்ய முடியுமா என்று கேட்டிருந்தார்.
    அதற்கு Blogger design ->page elements-> Add widget -> Html/Java script என்பதை வரிசையாக கிளிக் செய்து வரும் பெட்டியில் கீழ் உள்ள நிரல் வரிகளை சேர்த்து விட்டு சேமித்தால் ஒவ்வொரு பதிவிற்கும் சைட் பாரில் எண்ணிக்கைதோன்றும்.

    <script src='http://www.amitjain.co.in/pageview.php' type='text/javascript'/></script>

    ReplyDelete
  6. blogger_logo_round_35

    நல்ல பகிர்வு தோழி

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    நல்ல பகிர்வு தோழி

    ReplyDelete
  8. blank

    முயற்சி செய்து பார்க்கிறேன் தோழி :-) நானும் இது போல ராதையின் நெஞ்சமே ப்ளாகில் வைத்துள்ளேன் :-)

    ReplyDelete
  9. Education_cap

    பகிர்வுக்கு நன்றிங்க சகோ

    ReplyDelete
  10. earth-day-earth-in-hands

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. alagu

    மிக்க நன்றி! பயனுள்ள பதிவு..!

    ReplyDelete
  12. blank
  13. blogger_logo_round_35

    ஆனால் இது உங்கள் பதிவு திறக்கும் நேரத்தை அதிகரிக்கிறது :(

    ReplyDelete
  14. Hasim

    என்னை போன்று புதியவருக்கு பயனுள்ள பதிவு நன்றி
    எனது வலை பக்கத்தில் மேலே ஒவ்வொறு சப்ஜெக்ட்க்கும் ஒவ்வொறு tag எப்படி இடுவது பற்றி எனக்கு தெரியபடுத்தவும்

    ReplyDelete