Feb 14, 2011

பயர்பாக்சில் இணைய வேகத்தை அதிகரிக்க Firefox Booster


நாம் வலை உலவிகளைக் கொண்டு தான் இணையத்தைப் பயன்படுத்துகிறோம். வலை உலவிகளின் போட்டியில் Firefox மற்றும் Chrome ஆகிய இரண்டுமே முண்ணணியில் உள்ளன. நமது இண்டர்நெட் இணைப்பு நன்றாக இருந்தும் சில நேரம் வலை உலவிகளில் இணையப்பக்கங்கள் மெதுவாக தோன்றச்செய்யும்.ஏன் இப்படி மெதுவாக டவுன்லோடு ஆகின்றன என்று நமக்கும் தெரியாது.

இண்டர்நெட் இணைப்பு நல்லதாக பெற்றிருந்தாலும் இணையதளங்கள் மித வேகத்தில் வருவதற்கு காரணம் இணைப்புக்கேற்றவாறு வலை உலவிகளின் அமைப்புகளை மாற்றாமல் இருப்பதே ஆகும். ஒவ்வொரு வலை உலவிகளுக்கும் தனித்தனியே அமைப்புகள் (Configurations) உள்ளடங்கியிருக்கும். இதை நாம் அறிவதில்லை. உதாரணமாக Firefox ன் அமைப்புகளைப் பார்க்க இணைய முகவரி அடிக்குமிடத்தில் About:config என்று தட்டச்சிட்டால் பயர்பாக்ஸ் வலை உலவியின் முக்கிய அமைப்புகள் நமக்குத்தெரியும்.

இவைகளை நமது இணைப்பிற்கு ஏற்றவாறு மாற்றும் போது வலை உலவியும் புரிந்து கொண்டு வேகத்தை அதிகப்படுத்தும். ஆனால் நாம் தெரியாமல் எதாவது ஒன்றின் மதிப்பை மாற்றிவிட்டால் சிக்கலாகிவிடும். அதனால் இதற்கென இருக்கும் மென்பொருள் தான் Firefox Booster.


இந்த மென்பொருளில் நாம் வைத்திருக்கும் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை குறிப்பிட்டால் போதும். நமது இணைப்பிற்கு ஏற்றவாறு பயர்பாக்ஸ் உலவியை தயார்படுத்தும்.எந்த வகையான இணைப்பு மற்றும் இணைப்பின் வேகம் போன்றவற்றை வைத்து இந்த மென்பொருள் செயல்படுகிறது.

இந்த மென்பொருளை செயல்படுத்தும் போது முக்கியமாக Firefox வலை உலவியை மூடியிருக்க வேண்டும். இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானது.

தரவிறக்க முகவரி : Download Firefox Booster

2 comments:

  1. பயனுள்ள தகவலை அளித்ததற்கு நன்றி. இந்த மென்பொருள் பயர்பாக்ஸின் எல்லா Version -களுக்கும் பொருந்துமா?.
    குரோமிற்கு இது போன்ற மென்பொருள்கள் உள்ளதா?

    ReplyDelete
  2. this software compatible with all versions of firefox. For chrome i will tell the software in next article

    ReplyDelete