Feb 13, 2011

எக்சலில் IF நிபந்தனையைப் பயன்படுத்தி கணக்கீடுகள் செய்வது எப்படி?


அலுவலகப் பயன்பாடுகளுக்கு எக்சல் மிக உபயோகமான மென்பொருளாகும். ஆனால் எக்சலில் உள்ள பலவிதமான பங்சன்கள் அல்லது சூத்திரங்களை நாம் பயன்படுத்துவதில்லை. இன்று நாம் IF நிபந்தனையைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.

IF நிபந்தனையின் அமைப்பு : (Syntax of If condition)

=if(condition, value if true, value if false)

Condition என்பதில் நமக்குத் தேவையான நிபந்தனையைக் கொடுக்கலாம். அடுத்து நமது நிபந்தனை சரியாக இருந்தால் என்ன மதிப்பு வரவேண்டும் என்பதையும் தவறாக இருந்தால் என்ன மதிப்பு வரவேண்டும் என்பதையும் கொடுக்க வேண்டும். மூன்று பகுதிகளுக்கு மிடையில் ஒரு காற்புள்ளி வரவேண்டும். நாம் கொடுத்த நிபந்தனை சரியாக இருந்தால் சரியான மதிப்பும் தவறாக இருந்தால் தவறான மதிப்பும் விடையாக வரும்.

1.ஒரு சிறிய உதாரணம் பார்ப்போம். வயது 18 க்கு மேலிருந்தால் வாக்களிக்கத் தகுதியானவர் என்றும் இல்லையெனில் வாக்களிக்கத் தகுதியில்லை எனக்கொள்வோம்.

=if(age>18,"Eligible to vote","No eligible")
எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>18,"Eligible to vote", "No eligible")

2.இதைப்போல நகை அடகுக்கடையொன்றின் வட்டி பிடிக்கும் விதம் பார்ப்போம். ருபாய் 5000 க்கு மேலிருந்தால் வட்டி விகிதம் இரண்டு எனவும் ருபாய் 5000 க்கு கீழே இருந்தால் வட்டி விகிதம் 2.5 எனவும் உள்ளது. இதை எப்படி IF நிபந்தனையில் அமைப்பது?

=if(amount>5000, amount*2, amount*2.5)
எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>5000,A1*2,A1*2.5)


3.அலுவலகத்தில் பணியாளர்கள் ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் வந்திருந்தால் அவருக்கு கூடுதலாக ஒரு நாள் Earned leave ஆக தரப்படும்.இதைக்கணக்கிட அவரின் வந்த நாட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

=if(Presentdays>20,Earnedleave=1,Earnedleave=0)
எக்சலில் பயன்படுத்தும் முறை : = if(A1>20,1,0)

4.IF நிபந்தனைக்குள்ளும் நாம் பங்சன்களைப் (Using functions in If condition) பயன்படுத்தலாம். உதாரணமாக A1 என்ற செல்லில் சொற்கள் TN என்று ஆரம்பித்து வந்தால் Tamilnadu என்று நமக்கு வரவேண்டும்.

TN 57 E 9999
=IF(LEFT(A1)="TN","Tamilnadu")
இப்போது இதில் Left என்ற பங்சன் If நிபந்தனைக்குள் பயன்படுத்தியிருக்கிறோம். இதுபோல் தேவைப்பட்டால் பங்சன்களையும் பயன்படுத்தலாம். மேலும் இதில் நிபந்தனை தவறாகும் பட்சத்தில் வர வேண்டிய மதிப்பைக் கொடுக்கவில்லை. எனவே “TN” என்று ஆரம்பிக்காவிட்டால் விடை False என்று வரும்.
(எ.கா) AP 45 Q 7777
Answer : False

5.இறுதியாக ஒரு வசூல் செய்யும் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு மாதத்தில் வசூல் செய்த தொகைக்கு ஏற்ப அவர்களின் கமிசன் தொகை (Salary incentive) எவ்வாறு கணக்கிடப்படுகிறது எனப்பார்ப்போம். ருபாய் 8000 க்கு மேல் வசூல் செய்திருப்பார்கள் எனில் அவர்களுக்கு 5 சதவீதம் கமிசன் கொடுக்கலாம் என்று கொள்வோம். குறைவான தொகையெனில் அவர்களுக்கு No bonus என்று வரவேண்டும்.

How to use IF conditions in Microsoft Excel
A1 என்ற நெடுவரிசையில் ஊழியர்களின் பெயர்,A2 வில் அவர்கள் வசூல் செய்த தொகை இருப்பின் A3 வில் அவர்களின் கமிசன் வரவேண்டும்.
இதற்கான சூத்திரம் :
=if(A2> 8000, A2*0.05,"No bonus")

How to use IF conditions in Microsoft Excel
இதைப்போல அன்றாட வாழ்வில் பலவிதமான தேவைகளுக்கு ஏற்ப IF நிபந்தனையைப் பயன்படுத்தலாம். அலுவலகத்தில் வருடமுடிவில் போனஸ் போடுவது, பள்ளி மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண்ணுக்கு ஏற்ப தரநிலை அமைப்பது போன்ற நேரங்களிலும் பயன்படும்.

அடுத்து ஒரே நேரத்தில் பல IF நிபந்தனைகளைப் பயன்படுத்துவது ( Nested IF conditions) எப்படி என்றும் நிபந்தனையில் AND, OR போன்ற Logical Function களை எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

6 comments:

  1. இது வரை இந்த பயன் பாடு செய்ததில்லை,price list invoice, LPO, enquiry இது மட்டும் தான்,
    இருந்தாலும் முன்பு கற்று மறந்து போனதை நினைவூட்டியமைக்கு மிக்க ந்ன்றி பொன்மலர்

    ReplyDelete
  2. நல்ல
    பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல
    பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல
    பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. hello I am Thulasi Nathan (thulasinathang@gmail.com) from Vellore. I have one big doubt in Ms Excel, mam please clear me if you can. I have one excel sheet in that sheet some rows and columns are constant , if you scroll curser means that constant fields did not move, how to create like that, I tried many times to find that and I asked my friends but nobody did not know.please give me your mail id i will send that excel doc,I am waiting for you reply….
    Thank you
    Yours friendly
    G.Thulasinathan

    ReplyDelete
  6. i know this .

    u can set it from file->page setup

    then select sheet tab. in this u can set

    1.rows to repeat top
    2.columns to repeat left

    click the button on right side u go to the sheet and select rows and columns.

    then u scroll anything they do not move like as headers. ok. if u cant understand u may send the file. i do it for u.

    i ll write article about this soon.

    ReplyDelete