கணிணி உலகில் தற்போது டேப்ளட் பிசி (Tablet pc) எனப்படும் மினி கம்ப்யூட்டர்கள் பிரபலமாக சந்தையில் உலவிக்கொண்டிருக்கின்றன. இவை ஸ்மார்ட் போன்களுக்கும் கணிணிக்கும் இடைநிலையில் உள்ளதாகவும் இரண்டிலும் உள்ள வசதிகளை கொண்டதாகவும் உள்ளன. இவற்றின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் கையடக்கக் கருவிகள் ஆகும் ( Portable devices ). பிரபல நிறுவனங்களான Dell, Hp போன்றவை சுமார் 16000 விலையில் தங்களது மினி கம்ப்யூட்டர்களை அல்லது நெட்புக்குகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் தனது டேப்ளட் பிசியாக ஐபேட் கருவியை சென்ற வருடத்தில் அறிமுகப்படுத்தியது.
ஆப்பிள் ஐபேடைப் போல Accord நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு டேப்ளட் தான் Accord APad P270.PAD என்பது Mobile Internet Device எனப்படுகிறது. மல்டிமீடியா மற்றும் வயர்லெஸ் இண்டர்நெட் இணைப்பு போன்ற வசதிகள் இவற்றின் மூலம் அடையலாம்.
Hardware :
இது கூகிளின் ஆண்ட்ராய்டு 1.7 இயங்குதளத்தால் இயங்குகிறது. இதன் புராசசர் 8505 400Mhz , மெமரி அளவு 128Mb. இதனுள் 2GB ஹார்ட் டிஸ்க் தரப்பட்டுள்ளது. மேலும் தேவையெனில் 16 GB வரை நீட்டித்துக்கொள்ளலாம். MicroSD வகை மெமரி கார்ட் போட்டுக்கொள்ள இடம் தரப்பட்டுள்ளது. இதில் உள்ளிணைந்த Streo speaker கள் தரப்பட்டுள்ளன. இதன் 7 அங்குல அளவுடைய தொடுதிரை (Touch Screen ) மானிட்டர் 800x480 புள்ளிகளில் படங்களைக்காட்டும் திறனுடையது.
இதில் Mini USB Port உள்ளது. இதன் மூலம் தேவைப்பட்டால் External Hard disk ஒன்றை இணைத்துக்கொள்ளலாம். மேலும் USB யில் அமைந்த மவுஸ் மற்றும் விசைப்பலகையும் இணைத்து பயன்படுத்த முடியும்.
வயர்லெஸ்க்கு wifi மற்றும் 3G வசதி போன்றவை மூலம் இண்டர்நெட் இணைப்பைப் பெறலாம். மேலும் நெட்வொர்க் Ethernet Adapter போட்டும் பயன்படுத்தலாம். வயர்லெஸ் இணைப்பு உள்ள இடங்களில் இதனிலிருந்து இண்டர்நெட் பயன்படுத்தலாம். Skype போன்ற வீடியோ சாட்டிங் மென்பொருள்கள் பயன்படுத்த உள்ளிணைந்த கேமரா தரப்பட்டுள்ளது.
Software :
இதில் வழக்கமாக அனைத்து வசதிகளும் பயன்பாடுகளும் நிறுவப்பட்டே வருகிறது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குவதால் இதற்கு ஏராளமான பயன்பாடுகள் ( Applications ), விளையாட்டுகள் போன்றவை இலவசமாக கிடைக்கின்றன. இவை .apk என்ற எக்ஸ்டென்சன் கொண்ட கோப்புகளாகும். இவற்றை தரவிறக்கி எளிதாக கருவியில் நிறுவிக்கொள்ளலாம்.
ஏராளமான பயன்பாடுகள் கூகிளின் ஆண்ட்ராய்டு மார்க்கெட் தளத்தில் வகைவாரியாக கிடைக்கின்றன. தேவையானவற்றை நீங்கள் பெறலாம்.
இணையதள முகவரி: https://market.android.com/
மேலும் Microsoft word, Excel, Powerpoint போன்ற ஆபிஸ் தொகுப்புகளைப் பயன்படுத்தி கோப்புகளைப் படிக்கலாம். புதிய கோப்புகளை உருவாக்கவும் மாற்றம் செய்யவும் இயலும். PDF இல் அமைந்த புத்தகங்களையும் வாசிக்கலாம்.
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் மலிவு விலையில் இக்கருவி விற்கப்படுவது தான். ஆப்பிள் ஐபேடு இந்தியாவில் சாதாரண மாடல் 22000 மும் , 3G வசதியுடையது 33000 க்கும் விற்கப்படுகிறது. இவற்றை விட குறைந்த விலையில் 10000 ருபாய்க்கு இக்கருவி கிடைக்கிறது. கணிணி வைத்திருப்பவர்களுக்கும் இரண்டாம் பொழுதுபோக்கு கருவியாகவும் பயணத்தின் போது படிக்க, படம் பார்க்க, பாட்டு கேட்க, இண்டர்நெட் பயன்படுத்த போன்றவற்றுக்கும் உதவுகிறது.
மேலும் விவரங்கள் அறிய Accord நிறுவனத்தின் இணையதளத்தில் அறியலாம்.
http://www.accordapad.com/product.html
Tweet | |||
Good post, but android can not display tamil fonts, so we prefer ipad,
ReplyDeleteplease see more detail about android issue below link
http://code.google.com/p/android/issues/detail?id=3029
Can it be compared with APPLE iPAD
ReplyDeleteஅறிமுகபடுத்தியதற்கு நன்றி
ReplyDeleteசரி,இத வச்சி தமிழ்ல ப்ளாக் எழுதமுடியுமா?
ReplyDelete