கூகிளின் இணைய சேவையான பிளாக்கர் தளம் மூலம் பலரும் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார்கள். பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது .Com என்று முடியும். இன்று டொமைனை .in என்று முடியுமாறு மாற்றிவிட்டது. பிளாக்கர்களுக்கு இன்று காலையில் அதிர்ச்சியே எற்பட்டது. முகவரி மாற்றத்தால் முக்கிய பெருமையான (?) அலெக்சா ரேங்க் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது. பலருக்கு Followers Widget ஆன பின் தொடர்பவர்களின் பட்டியல் காணாமல் போனது. தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. இண்ட்லியில் இணைத்தால் பரிந்துரை பட்டியலில் வராமல் சாதாரண பதிவாக வெளியிடப்பட்டது. கூகிள் பிளாக்கரை இவ்வாறு மாற்ற என்ன காரணம்?
Jan 31, 2012
பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
34 Commentsகூகிளின் இணைய சேவையான பிளாக்கர் தளம் மூலம் பலரும் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார்கள். பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது .Com என்று முடியும். இன்று டொமைனை .in என்று முடியுமாறு மாற்றிவிட்டது. பிளாக்கர்களுக்கு இன்று காலையில் அதிர்ச்சியே எற்பட்டது. முகவரி மாற்றத்தால் முக்கிய பெருமையான (?) அலெக்சா ரேங்க் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது. பலருக்கு Followers Widget ஆன பின் தொடர்பவர்களின் பட்டியல் காணாமல் போனது. தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. இண்ட்லியில் இணைத்தால் பரிந்துரை பட்டியலில் வராமல் சாதாரண பதிவாக வெளியிடப்பட்டது. கூகிள் பிளாக்கரை இவ்வாறு மாற்ற என்ன காரணம்?
ஆன்லைனில் ரயில் டிக்கெட் வேகமாக புக் செய்ய உதவும் இணையதளங்கள்
10 Commentsஇந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையான ரயில்வே துறையின் பிரத்யேக இணையதளமான IRCTC மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் டிக்கெட்டுகளைப் புக் செய்து பயணிக்கின்றனர். தட்கல் முறையிலான டிக்கெட்டுகளை எடுக்க இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தின் மிகப்பெரிய குறைபாடுகளான மிக மெதுவாக லோடிங் ஆவது, சர்வர் தொக்கி நின்று விடுவது போன்றவற்றால் இணையதளத்தில் புக் செய்வது சில நேரங்களில் எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் ஒரே நேரத்தில் பல பேர் இதனை அணுகுவதாலே ஆகும். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் Service Unavailabale என்று வந்து விடும். இதற்கு மாற்றாக இருக்கும் சில இணையதளங்களைப் பார்ப்போம்.
Jan 30, 2012
பென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் ChkFlsh
18 CommentsUSB கருவிகளான பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவை இன்றைய கணிணியுலகத்தில் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. பென் டிரைவ்களும் தற்போது போலியாக 32 GB என்றெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென் டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென் டிரைவ் பழுதாயிருக்கிறதா என்றும் கண்டுபிடிக்க முடியாது.
Jan 27, 2012
Way2Sms விளம்பரங்கள் : மொபைலுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்திடலாம்.
13 CommentsWay2Sms இணையதளம் இந்தியாவிற்குள்ளும் உலகளவிலும் இலவசமாக குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுகிறது. இதில் மின்னஞ்சல் சேவையும் தரப்படுகிறது. இங்கேயே ஜிமெயில் மற்றும் யாகூ சாட்டிங் செய்யவும் முடியும். இப்போது புதியதாக விளம்பர சேவை ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு இலவசமாக விநாடியில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் Way2Sms கணக்கு ஒன்றைத் தொடங்கியாக வேண்டும். இது எளிமையான வேலை தான். Register செய்ய கிளிக் செய்யவும்.
Jan 12, 2012
கணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் மறைக்க
9 Commentsகணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை, நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான். அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும். ஏனெனில் வேலைகளுக்கிடையே நம்மவர்கள் பதிவு எழுதுவது, டுவிட்டர் பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது போன்ற வேறு செயல்களைச் செய்வது வழக்கமான ஒன்று. திடிரென்று மேனேஜர் அல்லது வேறு ஆட்கள் வந்து விட்டால் அப்படியே அந்த புரோகிராம்களை சாத்தி மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் இணையத்தில் நாம் செய்து கொண்டிருந்த வேலையும் அப்படியே போய் விடும்.
Jan 8, 2012
இணையத்தில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வீடியோக்களைத் தரவிறக்க
3 Commentsஇணையத்தில் எதாவது ஒரு விசயத்திற்காக யூடியுப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்களை எல்லாரும் பார்ப்பதுண்டு. அந்த நேரத்தில் உங்களிடம் இணையம் வேகமாக இருக்கும் பட்சத்தில் அந்த வீடியோவினை பார்த்து விட்டு மட்டும் போய் விடுவார்கள். அதனை டவுன்லோடு செய்து கணிணியில் வைத்துக் கொள்ள நேரம் இருப்பதில்லை சிலருக்கு. பலர் அலுவலகத்திலேயே இணையத்தில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டே இருப்பதுண்டு. இப்படி நீங்கள் பார்த்து விட்டுப் போன வீடியோக்கள் தேவைப்பட்டால் என்ன செய்வது, எங்கே பார்த்தோம் எங்கெ போய் டவுன்லோடு செய்வது என்ற குழப்பம் வரும்.