Dec 17, 2013

கூகிள் ப்ளஸின் கிறிஸ்துமஸ் சிறப்பு வசதிகள் - Auto Awesome Effects

5 Comments
google-plus-auto-awesome-twinkle-effect-2
கூகிள் ப்ளஸில் புகைப்படங்களை ஏற்றிப் பகிரும் போது தானாகவே சில புகைப்படங்களுக்கு குறிப்பிட்ட ஸ்பெஷல் எபெக்ட் (Special Effects) சேர்க்கப்படுவதை Auto Awesome Effects என்று சொல்வார்கள். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அதையொட்டிய விடுமுறைகள் வருவதால் இரண்டு அட்டகாசமான வசதிகளை இந்த Auto Awesome இல் சேர்த்துள்ளார்கள். 1. Twinkle Effect – நீங்கள் சேர்க்கும் புகைப்படங்கள், எதாவது விளக்குகள் அல்லது ஒளி பிரகாசமாக மின்னுகின்றவாறு இருந்தால் அந்த...
Read More

Dec 15, 2013

Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று இலவச மென்பொருள்கள்

9 Comments
winamp-alternate-players
கணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரியாமல் இருக்காது. 1997 ஆம் வருடத்தில் வெளியான இந்த மென்பொருள் பாட்டு கேட்பதற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெர்ஷன் கூட வெளியிட்டிருந்தார்கள். இதன் நிறுவனமான AOL வரும் டிசம்பர் 20 ந்தேதியோடு Winamp சேவையை நிறுத்தப் போகிறது. இனிமேல் இதற்கு எந்த வித Updates மற்றும் Support கிடைக்கப் போவதில்லை; ஆனால் தரவிறக்கி தொடர்ந்து பயன்படுத்தலாம்....
Read More

Nov 28, 2013

ப்ரவுசர் டேப்கள், கோப்புகளை இணையத்தில் Sync செய்து பயன்படுத்த CupCloud

2 Comments
sync-browser-tabs-files-with-cupcloud-1
இணையத்தில் முக்கியமான செயலில் இருக்கும் போதும் அல்லது கணிணியில் எதாவது ஒரு கோப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போதும் வேறு அவசர அழைப்புகளோ அல்லது சந்திப்புகளோ திடிரென வந்து விடும். தேடிக் கொண்டிருக்கும் விசயத்தை பாதியில் போட்டு விட்டு போகவும் முடியாது. திரும்ப வருவதற்கு நேரமானால் என்ன செய்வது? செல்லும் இடத்தில் நாம் செய்த வேலையை விட்ட இடத்திலிருந்து தொடரும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா? இதற்கு கண்டிப்பாக Cloud Computing...
Read More

Nov 18, 2013

ஜிமெயிலில் புதிய வசதிகள் - Save to Drive மற்றும் Quick Actions

6 Comments
preview-save-files-to-google-drive-1
கூகிளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஜிமெயிலை விரைவாகவும் எளிமையாகவும் பயன்படுத்த இந்த வசதிகளான Preview Attachments, Save to Drive, Quick Action Buttons போன்றவை உதவும். 1. Preview Attachments: இனி மின்னஞ்சலில் Attachment ஆக இணைக்கப்பட்டு வரும் படங்கள், வீடியொ, கோப்புகள், PDF ஃபைல்கள் போன்றவற்றை டவுன்லோடு செய்யாமலே முன்னோட்டத்தை( Preview) பார்க்கலாம். அதற்கு கோப்புகளின் மேல் கிளிக் செய்தால்...
Read More

Nov 8, 2013

YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?

2 Comments
கூகிள் தனது கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் (Google+ Comments) வசதியை YouTube தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் போன்று இணையத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த கூகிள்+ கருத்துரை வசதி முதலில் ப்ளாக்கர் தளத்தில் பயன்படுமாறு கொண்டு வரப்பட்டது. கூகிள் தனது சமூகவலைத்தளமான கூகிள் ப்ளஸை மற்ற சேவைகளான தேடல், ப்ளாக்கர், யூடியுப் போன்றவற்றில் இணைப்பதன் மூலம் பயனர்களை அதிகரித்து வருகிறது...
Read More

Oct 31, 2013

கூகிள் ப்ளஸ் புரோபைல்க்கு எளிமையான Custom URL முகவரி பெற

4 Comments
கூகிள் ப்ளஸ் இணையதளத்தில் நேற்று சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று Google+ Custom URL. இதன் மூலம் உங்கள் கூகிள்+ புரொபைல் அல்லது பக்கத்திற்கு எளிமையான சிறிய URL முகவரியைப் பெற முடியும். முன்பு இந்த முகவரியில் நீண்டதாக எண்கள் அமைந்திருக்கும். அதனால் அதனை நினைவில் கொள்வதும் பகிர்வதற்கும் கடினமான ஒன்றாக இருந்தது. இந்த வசதி இதற்கு முன்னரே பிரபலங்கள், கூகிள் பணியாளர்கள் ஆகியோருக்கு தரப்பட்டிருந்தது. தற்போது எல்லோருக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது...
Read More

Oct 30, 2013

ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பீட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்

7 Comments
இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட வசதிகளைக் கொண்டும் தனிப்பட்ட இயங்குதளத்திலும் (Operating System) வெளிவருகின்றன...
Read More

Oct 14, 2013

விளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்

5 Comments
google-shared-endorsements-1
கூகிள் சமீபத்தில் தனது சேவை விதிமுறைகளில் மூன்று புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கூகிள் விளம்பரத்தில் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துதல், வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்பாடு தவிர்த்தல், கூகிள் கணக்கின் கடவுச்சொல்லைப் பாதுகாத்தல் போன்றவற்றை விதிமுறைகளில் சேர்த்துள்ளது. கடைசி இரண்டும் நமக்கான அறிவுரை மட்டுமே, ஆனால் முதலாவது நமது ப்ரைவசிக்கு வேட்டு வைக்கும் ஒன்றாக வந்துள்ளது. கூகிளின் சேவைகளான Search, Maps, Places, Google Play, Adsense,...
Read More

Oct 5, 2013

ப்ளாக்கர் பதிவில் சமூக வலைத்தளங்களில் பகிரும் Status களை இணைக்க

6 Comments
இணையத்தில் முண்ணணி சமூக வலைத்தளங்களான Facebook, Twitter, Google Plus போன்றவற்றில் பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இப்படி பகிரப்படும் செய்திகளை (Status) ப்ளாக்கர் பதிவுகளில் Screenshot எடுக்காமல் நேரடியாக இணைத்து காட்ட முடியும். ப்ளாக் வாசகர்களும் நமது பதிவிலிருந்தே குறிப்பிட்ட Status க்கு Like, Comment, Share, Retweet, +1 போன்ற வேலைகளை செய்ய முடியும்...
Read More

Sep 24, 2013

ட்விட்டரில் குறிப்பிட்ட நேரத்தில் தானாக அழியும் Tweet களை உருவாக்க

5 Comments
twitter-spirit-expiry
தற்போதைய சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமான ஒன்றான ட்விட்டர் (Twitter) பல சேவைகளுக்குப் பயன்படுகிறது. 140 எழுத்துகள் எல்லையுடன் செய்திகளை பல நண்பர்களுக்கு அனுப்பவும் வலைப்பதிவர்கள் தங்களது பதிவுகளை ட்விட்டரில் போட்டு Blog Traffic அதிகரிக்கவும் செய்யலாம். மேலும் ட்விட்டரில் அவசர செய்திகள், உதவிகள், விளம்பரங்கள் போன்றவையும் அதிகளவில் பகிரப்படுகின்றன...
Read More

Sep 10, 2013

ப்ளாக்கர் பதிவுகளை தானாக கூகிள் ப்ளஸ் இல் பகிர

6 Comments
share-blogger-posts-to-google-plus-automatically-2
பதிவுகளை பல வாசகர்களிடம் கொண்டு சேர Twitter, Facebook, Google Plus போன்ற சமூக வலைத்தளங்கள் உதவி செய்கின்றன. ப்ளாக்கரில் பதிவெழுதி விட்டு இவற்றில் ஒவ்வொன்றாக கிளிக் செய்து பகிர்வதற்கு சிறிது நேரமாகலாம். இதனால் தானாக பதிவுகள் சமூக தளங்களில் பகிரப்பட்டு விடுமாறு வசதியைத் தரும் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கூகிள் ப்ளசில் மட்டும் தானாக பகிருமாறு செய்ய முடியாது. இப்போது இதனை கூகிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது. முதலில் நீங்கள் ப்ளாக்கர்...
Read More

Jul 26, 2013

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள்

13 Comments
கூகிள் தனது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத்தை அப்டேட் செய்து புதிய பதிப்பாக 4.3 வெளியிட்டிருக்கிறது. இதனை Chrome & Android க்கான தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டார். மேலும் இது மட்டுமின்றி புதிய Nexus 7 டேப்ளட் மற்றும் Chromecast என்ற புதிய கருவி போன்றவற்றையும் அறிவித்தார். சரி ஆண்ட்ராய்ட் 4.3 பதிப்பில் என்னென்ன வசதிகள் என்று பார்ப்போம்...
Read More

Jul 13, 2013

சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்கள்

5 Comments
கூகிளின் RSS சேவையான Google Reader கடந்த ஜூலை 1 ந்தேதி நிறுத்தப்பட்டு விட்டது. ரீடர் மூலமாக பிடித்த தளங்களைப் படித்து வந்தவர்களுக்கு மாற்று தளங்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கே சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்களைக் குறிப்பிடுகிறேன். இவை அனைத்திலும் உங்களுடைய பழைய Google Reader Data வை புதிய தளத்தில் Import செய்து அப்படியே பயன்படுத்தும் வசதி இருக்கிறது. அதனால் உங்களுக்குப் பிடித்தமான தளங்களை மறுபடியும் சேர்க்கத் தேவையில்லை. கடந்த பதிவில் கூகிள் ரீடர் தகவல்களை எப்படி டவுன்லோடு செய்வது என்று பார்த்தோம். நீங்கள் டவுன்லோடு...
Read More

Jul 8, 2013

கூகிள் ரீடர் தகவல்களை டவுன்லோடு செய்ய [கடைசி தேதி ஜூலை 15, 2013]

5 Comments
கூகிளின் பிரபலமான RSS சேவையான Google Reader இந்த ஜூலை 1 ந்தேதியிலிருந்து நிறுத்தப்பட்டதை அறிவீர்கள். ஆனலைனில் நமக்குப் பிடித்தமான தளங்களின் செய்திகளை உடனுக்குடன் படிக்க உதவியாக இருந்து வந்தது கூகிள் ரீடர். இதை நிறுத்தப் போவதாக அறிவித்தவுடன் பலர் அதிர்ச்சியே அடைந்தனர்...
Read More

Jun 7, 2013

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி?

8 Comments
இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும்....
Read More

Apr 19, 2013

ப்ளாக்கரில் புதிய வசதி – கூகிள்+ கமெண்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி?

7 Comments
ப்ளாக்கர் வலைப்பதிவுகளில் கூகிள்+ ப்ரோபைல் மூலமாக கருத்துரைகள் (Comments ) சேர்ப்பதற்கான வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கனவே ப்ளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சேவைகளை இணைத்து வருவதைப் பற்றி சொல்லியிருக்கிறேன். Google+1 Button, Google+ Profile, Google+ Badge மற்றும் Google+ Followers Widget போன்ற சேவைகள் ப்ளாக்கினை மேலும் மெருகேற்றவும் சமூக வலைத்தளமான கூகிள்+ மூலமாக வாசகர்களை அதிகரிக்கவும் பயன்படுகின்றன. இப்போது ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் போன்று வந்துள்ள சேவை தான் Google+ Comments ஆகும்...
Read More

Apr 13, 2013

இறப்புக்குப் பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தகவல்களை மாற்ற – Inactive Account Manager

19 Comments
மின்னஞ்சல் பயன்படுத்தி வருபவர்கள் திடிரென இறந்து விட்டால் அவர்களின் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் என்ன செய்வது எனத் தீர்மானிக்கும் வசதியை கூகிள் கொண்டு வந்திருக்கிறது. Google Inactive Account Manager என்ற இந்த வசதியின் மூலம் குறிப்பிட்ட காலம் நமது கணக்கைத் தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் இருந்தால் நமது கணக்கை என்ன செய்ய வேண்டும் என அமைக்கலாம்...
Read More

Mar 29, 2013

இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்

2 Comments
google-android-india
கூகிளின் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் (Android OS) அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முன்னர் நோக்கியா, ப்ளாக்பெர்ரி போன்றவை தான் வெளிச்சத்தில் இருந்தன. இப்போது ஆண்ட்ராய்டு மட்டுமில்லாமல் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் மொபைல்களும் பிரபலமாக உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மொபைல் சார்ந்த வணிகம் உச்சத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் இதனைக் கண்டு கொள்ளாத கூகிள் நிறுவனம் தற்போது...
Read More

Mar 18, 2013

இந்திய அரசின் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் போட்டி - ஒரு லட்சம் பரிசு

7 Comments
android-logo-1
மத்திய அரசு மக்களுக்கு உதவும் வகையிலான, ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான அப்ளிகேசன்களை (Android Application) உருவாக்கும் போட்டி ஒன்றினை  நடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நடத்தப்படும் Mobile Application Contest என்ற இந்த போட்டிக்கு இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் ஆண்ட்ராய்டு மென்பொருள்களை உருவாக்கி அனுப்பலாம்....
Read More

Mar 13, 2013

ப்ளாக்கர் டெம்ப்ளேட்டில் CSS நிரல்களைச் சேர்க்க எளிய வழி

10 Comments
நமது ப்ளாக் வலைப்பூவை வடிவமைக்க,மெருகேற்ற டெம்ப்ளேட்டில் (Blogger Template) நிரல்களை மாற்றுவதும் சேர்ப்பதும் கடினமான வேலையாகவே இருக்கும். ப்ளாக்க்ர் டெம்ப்ளேட்டில் வலை வடிவாக்க நிரல் மொழிகளான HTML, CSS, JavaScript போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. வெறும் HTML மட்டும் பிளாக்கர் தளத்திற்கான அழகைக் கொடுத்து விடாது. CSS எனப்படும் Cascading Style Sheet தான் ப்ளாக்கின் வடிவமைப்பைச் சிறப்பாக மாற்றுகின்றன...
Read More

Mar 9, 2013

கூகிள்+ தளத்தில் Large Cover Photos மற்றும் சில புதிய வசதிகள்

8 Comments
கூகிள் இரண்டு நாட்களுக்கு முன்னர் எந்தவொரு ப்ளாக் (Blog post) அறிவிப்புமின்றி தனது கூகிள் பிளஸ் (Google Plus) தளத்தில் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கடுத்த நாள் தான் பேஸ்புக் தனது News Feed இல் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதிலிருந்தே சமூக வலைத்தளங்களுக்குள் நடக்கும் போட்டியை அறிந்து கொள்ளலாம். சரி கூகிள் ப்ளஸில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்று பார்ப்போம்...
Read More

Jan 26, 2013

ப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி?

12 Comments
how-to-add-internal-links-in-blogger-posts-3
நம்முடைய பதிவிலிருந்து வேறு பதிவு அல்லது மற்றவர்களின் பதிவுக்கு நேரடியாக சுட்டி (Link ) ஒன்றின் மூலம் இணைப்பு கொடுப்பது Linking எனப்படும். இதன் மூலம் இன்னொரு பதிவிற்கு நேரடியாகவும் சுலபமாகவும் செல்ல முடியும். நமது பதிவுகளில் கூட எழுதும் பதிவிற்கு எதேனும் தொடர்புடைய பதிவுகள் இருப்பின், அதனை Link ஆக குறிப்பிட்டிருப்போம்...
Read More

Jan 23, 2013

பிளாக்கருக்கான கூகிள்+ Followers Gadget - புதிய வசதிகள், சேர்ப்பது எப்படி?

9 Comments
add-google-followers-widget-to-blog-2
பிளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சமுக வலைத்தளத்தின் சில வசதிகளை கூகிள் இணைத்து வருவது பற்றி அறிந்திருப்பீர்கள். பதிவுகளை நாமும் வாசகர்களும்  Google Plus இல் பகிரும் வசதி, Google plus Badge மூலம் பின்தொடரும் வசதி போன்றவற்றையும் பார்த்திருக்கிறோம். இதனால் நமது தளத்திற்கு கணிசமான பார்வையாளர்களைப் பெற முடியும். இவற்றைத் தொடர்ந்து கூகிள் சில மாதங்களுக்கு முன் பிளாக்கருக்கான Google+ Follower Gadget ஐக் கொண்டு வந்தது. இது பேஸ்புக் Like...
Read More

Jan 22, 2013

ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி?

18 Comments
how-to-sign-in-multiple-google-accounts-3
இணையத்தில் கூகுளின் GMail மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருவீர்கள். ஒரு ஜிமெயில் கணக்கை வைத்து கூகுளின் மற்ற சேவைகளான bloggerBlogger, Google Plus, YouTube போன்றவற்றிலும் நுழைந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருக்கலாம். சொந்த வேலைகளுக்கு, அலுவலகப் பணிக்கு என்று தனித்தனியாக வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்தும் இணைய உலவியில் ஒரு ஜிமெயில் கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு மாற முதல் கணக்கை Sign...
Read More

Jan 15, 2013

கூகிளின் பிறந்தநாள் பரிசு - Birthday Doodles

18 Comments
google-birthday-doodles-3
இன்று காலையில் எப்போதும் போல கூகிள் இணையதளத்திற்குச் சென்றால் அதன் Doodle வித்தியாசமாக இருந்தது. Google Doodle என்பது அதன் முகப்புப் பக்கத்தில் அந்த நாளில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளையோ / முக்கிய நபர்களைப் பற்றிய விசேசங்கள் எதேனும் இருப்பின் அவர்களைக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்புப்படத்தினை கூகிளின் லோகோவுடன் இணைத்து வெளியிடப்படுவதாகும்....
Read More