பாம்புகள் என்றால் படையும் நடுங்கும். ஆனால் கணிணியில் பாம்புகளைப் பயன்படுத்தி பல விளையாட்டுகளும் இருக்கின்றன. AxySnake விளையாட்டில் பாம்பை நகர்த்திச் சென்று ஆப்பிள்களைச் சாப்பிட வேண்டும். ஆப்பிளைச் சாப்பிட சாப்பிட பாம்பின் எடையும் நீளமும் அதிகரித்துக் கொண்டே வரும்.பாம்பின் தலைப்பகுதி அதன் உடலின் வேறு எங்கும் பட்டுவிட்டால் பாம்பின் நீளம் குறைந்து விடும். குறிப்பிட்ட நேரத்தில் ஆப்பிள்களைச் சாப்பிட்டு விட்டு அடுத்த லெவலுக்கான வழியில் சென்று விட வேண்டும். இல்லாவிட்டால் அங்கங்கே ஒளிந்திருக்கும் பூதங்கள் பாம்பைக் கொன்று விடும்.
Mar 31, 2011
விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு
பாம்புகள் என்றால் படையும் நடுங்கும். ஆனால் கணிணியில் பாம்புகளைப் பயன்படுத்தி பல விளையாட்டுகளும் இருக்கின்றன. AxySnake விளையாட்டில் பாம்பை நகர்த்திச் சென்று ஆப்பிள்களைச் சாப்பிட வேண்டும். ஆப்பிளைச் சாப்பிட சாப்பிட பாம்பின் எடையும் நீளமும் அதிகரித்துக் கொண்டே வரும்.பாம்பின் தலைப்பகுதி அதன் உடலின் வேறு எங்கும் பட்டுவிட்டால் பாம்பின் நீளம் குறைந்து விடும். குறிப்பிட்ட நேரத்தில் ஆப்பிள்களைச் சாப்பிட்டு விட்டு அடுத்த லெவலுக்கான வழியில் சென்று விட வேண்டும். இல்லாவிட்டால் அங்கங்கே ஒளிந்திருக்கும் பூதங்கள் பாம்பைக் கொன்று விடும்.
கணிணியில் டிரைவர்களை அப்டேட் செய்ய இலவச மென்பொருள் Device Doctor
கணிப்பொறியின் இயங்குதளம் மற்ற வன்பொருள்களான விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளுவதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். பொதுவான கருவிகளுக்கான டிரைவர்கள் இயங்குதளத்திலேயே கிடைக்கப்பெறும். புதியதாக ஏதேனும் கருவியை நிறுவினால் வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களால் வழங்கப்படும். கணிணியில் இவை கட்டாயம் இருந்தால் தான் வன்பொருட்கள் முறையாக வேலை செய்யும்.
Mar 30, 2011
பயர்பாக்ஸ் வலை உலவியின் வேகத்தை அதிகரிக்க சில வழிமுறைகள்
பயர்பாக்ஸ் (Firefox) வலை உலவி தான் உலகிலேயே அதிகம் பேர் பயன்படுத்தும் உலவியாக இருக்கிறது. இதற்கு காரணம் எளிமையான வடிவமைப்பும் வேகமும் அதிகமான ஆட் ஆன் தொகுப்புகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. பொதுவாக பயர்பாக்ஸ் முதல் முறையாக திறக்கப்படும் பொழுது மெதுவாக இயங்கும். சிலருக்கு எப்போதும் மெதுவாக இயங்கலாம். சில வழிமுறைகளின் மூலம் ஏற்கனவே இயங்கிய வேகத்தை விட சற்று அதிகப்படுத்தலாம்.
Mar 29, 2011
நீங்கள் தேடும் தகவல்களை எல்லாம் சேகரிக்கும் கூகிள் - தடுப்பது எப்படி?
4 Comments
கூகிள் இணையதளம் தான் அதிகளவில் தகவல்களைத் தேடுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. உங்கள் கணிணியிலிருந்து கூகிளில் தேடும் போது ஒவ்வொரு தேடலைப் பற்றிய விவரங்களும் கூகிள் நிறுவனத்தால் சேமிக்கப்படுகின்றன. இந்த விவரங்கள் உங்கள் கணிணியில் குக்கிகள் (Cookies) எனப்படும் சிறிய கோப்புகளில் பதிந்து வைக்கப்படுகின்றன. குக்கிகள் வலை உலவியில் ஒவ்வொரு இணையதளத்தில் நாம் செய்யும் வேலைகளைப் பொறுத்து சில விவரங்களைச் சேமிப்பதற்காக ஏற்படுத்தப்படும் கோப்புகளாகும்.
Mar 26, 2011
CDMA வகை மொபைல் எண்ணை மாற்றாமல் GSM வகை போன்களுக்கு மாறுவது எப்படி?
2 Comments
மொபைல் போன் தொழில்நுட்பத்தில் GSM மற்றும் CDMA வகைகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. CDMA வகையிலான போன்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் சிம் கார்டைத் தான் பயன்படுத்த முடியும். Reliance மற்றும் Tata Indicom நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. GSM வகையிலான போன்களில் எந்த நிறுவனத்தின் சிம் கார்டையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். நமது நாட்டில் ஒரே மொபைல் எண்ணை வைத்துக் கொண்டு எந்த நிறுவனத்தின் சேவைக்கும் மாறிக் கொள்ளும் வசதி (Mobile Number Portablity) அறிமுகப்படுத்தப் பட்டவுடன் பலர் தங்களது பிடித்தமான நிறுவன சேவைக்கு மாறியுள்ளனர்.