
கணிணியில் குறிப்பிட்ட கால பயன்பாட்டுக்குப் பிறகு டிவைஸ் டிரைவர்களை (Device drivers) அப்டேட் செய்ய வேண்டும். ஏன் என்றால் மென்பொருள்களுக்கு அப்டேட் இருப்பது போல வன்பொருள்களையும் அப்டேட் செய்வது கணிணியின் திறனையும் கருவிகளின் உறுதிப்பாட்டையும் அதிகரிக்கின்றன. சிலரின் கணிணியில் என்னென்ன நிறுவப்பட்டுள்ளது, எவை சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. சில கணிணிகளின் குறிப்பிட்ட வன்பொருள்களுக்கு டிரைவரே இருக்காது. இதனால் டிரைவர் கோப்புகளைத் தேடி இணையதளங்களில் தேடி அலைய வேண்டியதில்லை.

இதற்கென இருக்கும் ஒரு இலவச மென்பொருள் Device Doctor. இந்த மென்பொருள் பெரும்பாலான கருவிகளையும் அவற்றின் நிறுவனங்களையும் ஆதரிக்கிறது. இதன் தரவுத்தளத்தில் 3000 GB க்கும் மேற்பட்ட டிரைவர்கள் உள்ளன. இதன் Cache சேகரிப்பு முறையால் வேகமாக டிரைவர்கள் மற்றும் அப்டேட்களை தரவிறக்க முடியும். கணிணியில் அப்டேட் செய்யப்பட வேண்டிய டிரைவர்களை விரைவாக சோதித்து பட்டியலிடுகிறது. பெயர் தெரியாத டிரைவர்களையும் பெயரைக் கண்டறிந்து காட்டுகிறது.

இந்த மென்பொருள் விண்டோசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.
தரவிறக்கச்சுட்டி: Download Device Doctor
தொடர்புடைய பதிவுகள் :
1.கணினி டிவைஸ் டிரைவர்களை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்
2.கணினியில் கோப்பு வகைகளை கையாள இலவச மென்பொருள் FileTypesMan
3.கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite
Tweet | |||
0 comments.:
Post a Comment