Mar 24, 2011

ஒளிப்படங்கள், ஆபீஸ், வீடியோக்கள் எல்லாம் பார்க்க ஒரே மென்பொருள் Universal Viewer


universal+viewer+filesகணினியில் ஒவ்வொரு வகையான வேலைகளுக்கும் ஒவ்வொரு மென்பொருளை பயன்படுத்துவோம். புகைப்படங்களைப் பார்க்க ஏதேனும் Image viewer மென்பொருள் , text கோப்புகளை பார்க்க Notepad, வீடியோ படம் பார்க்க ஏதேனும் Movie player , ஆபீஸ் கோப்புகளைப் பார்க்க MS Office , Pdf கோப்புகளைப் பார்க்க ஏதேனும் Pdf Viewer மென்பொருள் என்று தனித்தனியாக மென்பொருள்களைப் பயன்படுத்துவோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மென்பொருளா? இவை எல்லாவற்றையும் ஒரே மென்பொருளில் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இதற்கென்று இருக்கும் ஒரு மேம்பட்ட மென்பொருள் தான் Universal Viewer. இதன் மூலம் எல்லா வகையான மல்டிமீடியா மற்றும் ஆவணங்களை ஒரே மென்பொருளில் பார்த்துக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் பெரும்பாலான கோப்பு வகைகளை பார்க்கும் படி ஆதரிக்கிறது.

universal+viewer+home
இதன் மூலம் பார்க்கக்கூடிய கோப்புகளும் வகைகளும்.

1. Text Files - txt, binary, hex, unicode, Rtf, Utf-8

2. Image files - bmp, jpg, tiff, png, gif and etc

3. Internet files - html, xml, pdf

4. Multimedia files - avi, mpg, mp3, wmv and etc

5. MS Office files - doc, docx, xls, ppt

இத்தனை வகையான கோப்புகளையும் ஒரே மென்பொருளில் பார்ப்பதனால் நேரமும் மிச்சமாகும். வேறு மென்பொருள்களை தேடி அலையவும் தேவையில்லை. இந்த மென்பொருளை Right click மெனுவில் வரும்படி வைத்துக் கொண்டால் பலவகையான கோப்புகளை எளிதாக விரைவாக திறந்து படிக்கலாம். பயன்படுத்த எளிமையான இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது.

தரவிறக்கச்சுட்டி : Download Universal Viewer

2 comments:

  1. blogger_logo_round_35

    Really super software... This software will helpful at critical situation....

    By
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  2. kmphoto

    Nalla Vishayam Sonneerkal...Thanks For You

    ReplyDelete