வலைப்பதிவு வைத்திருப்போருக்கு பிளாக்கர் தளம் பல்வேறு வசதிகளைக் கொடுத்துக் கொண்டே யிருக்கிறது. Mobile posting, Email posting, Stats போன்றவைகள் வலைப்பதிவை நடத்தும் எழுத்தாளர்களுக்கு உதவி புரியும் சேவைகளாக கொண்டு வரப்பட்டன. பிளாக்கர் தற்போது கொஞ்சம் முன்னோக்கிச் சென்று வலைப்பதிவைப் படிப்பவர்களின் கண்ணோட்டத்திலிருந்து உருவாக்கியிருக்கும் இந்த வசதி Dynamic Views என்று அழைக்கப் படுகிறது.
நமது வலைப்பதிவை படிக்கும் வாசகர்களுக்கு வித்தியாசமான மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிவங்களில் தளத்தைப் பார்க்கும் வசதி தான் Dynamic Views ஆகும். வலைத்தள புதிய உத்திகளான HTML5, AJAX, CSS3 போன்றவற்றால் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பதிவுகள் விரைவாக லோடு ஆகின்றன. பிளாக்கரில் தற்போது 5 விதமான வலைப்பதிவை பார்க்கும் டிசைன்கள் தரப்பட்டுள்ளன.
1. Flipcard
இந்த முறையில் நமது பதிவுகள் எல்லாமே சிறுசிறு கார்டுகளில் அமைந்த படங்களாக காட்டப்படுகின்றன. இதில் பதிவின் தலைப்பும் எத்தனை கருத்துரைகள் (comments) எத்தனை என்பதும் காட்டப்படும். அந்த பதிவைப் படிக்க அந்த கார்டில் கிளிக் செய்தால் போதும். மவுசை நகர்த்திக் கொண்டே வந்தால் பழைய எல்லா பதிவுகளும் வந்துவிடும். முன்னால் உள்ள பதிவைப் பார்க்க J பட்டனையும் அடுத்த பதிவிற்கு K பட்டனையும் முன்பிருந்தபடி எல்லா பதிவுகளையும் பார்க்க Escape பட்டனையும் அழுத்தலாம்.
மேலும் இடதுபுறத்தில் தேதி, எழுத்தாளர் ( Multi-Author blogs ), பதிவின் வகைகள்
போன்றவைகளைக் கிளிக் செய்தும் பதிவுகளை வகைப்படுத்தலாம்.
2. Mosaic view
இதில் பதிவுகள் எல்லாம் மொசைக் வடிவிலான படங்களாக காட்டப்படுகின்றன. ஒவ்வொரு பதிவின் மீது மவுசை நகர்த்தும் போது அவை பெரிய படங்களாகவும் பதிவின் தலைப்பும் தோன்றும். அதை கிளிக் செய்தால் அந்த மொசைக் படம் உள்ள பதிவின் பரப்பளவை மட்டும் அதிகரித்து பதிவை மற்ற மொசைக் படங்களுக்கு இடையில் வித்தியாசமாக காட்டுகிறது.
3. Sidebar view
இந்த முறையில் பதிவின் தலைப்புகளும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் இடது புறத்தில் எழுதிய தேதிப்படி வரிசையாக மெனுவாக காட்டப்படுகிறது. எதாவது ஒரு பதிவைக் கிளிக் செய்தால் கட்டுரை வலது புறப் பகுதியில் காட்டப்படுகிறது.
4. Snapshot view
இந்த முறையில் நமது பதிவுகளில் ஒளிப்படங்கள் உள்ள பதிவுகளை மட்டும் எடுத்து போலராய்டு படங்களைப் போல தலைப்போடு காட்டுகின்றது. மவுசை அதன் மீது கொண்டு சென்றால் பதிவின் சுருக்கத்தைக் காட்டுகின்றது. அதன் மீது கிளிக் செய்து முழு பதிவையும் படிக்கலாம்.
5. Time Slide view
இதில் பதிவுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. முதல் பகுதியில் பதிவின் படமும் தலைப்பும் சுருக்கமும் காட்டப்படுகிறது. நடுப்பகுதியில் தலைப்பும் சுருக்கமும் காட்டப்படுகிறது. மூன்றாம் பகுதியில் பதிவின் தலைப்புகள் மட்டும் பட்டியலிடப் படுகின்றன. பதிவுகளைத் தேடவும் வசதியுள்ளது. குறிச்சொற்கள் கொடுத்து தேடிய பின்னர் பொருந்தும் பதிவுகள் Highlight செய்து காண்பிக்கப்படும்.
எப்படி செயல்படுத்துவது மற்றும் எந்த வலைப்பதிவுகளில் செயல்படும் ?
இந்த மேம்பட்ட பார்வையிடும் முறைகள் பொதுவான வலைப்பதிவுகளுக்கு மட்டுமே ( Public blogs). அதாவது username, password கொடுத்து உள்ளே நுழையும்படி இருக்கும் தளங்களுக்கு செயல்படாது.
முதலில் பிளாக்கரில் Dynamic views க்கான அமைப்புகள் எனேபிள் செய்யப்பட வேண்டும். இதைச் செய்ய Blogger settings-> Formatting இல் Enable Dynamic views என்றுஅமைத்துக் கொள்ளவும்.
உங்கள் தளத்திற்கான Site Feeds எனேபிள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்ய Blogger Settings->Site feed இல் சென்று Full அல்லது Jumpbreak இல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
Dynamic views எப்படிப் பயன்படுத்துவது?
உங்கள் வலைப்பதிவின் முகவரிக்குப் பின்னால் /view என்பதைத் தட்டச்சிட்டால் போதும். கீழே கிளிக் செய்து சோதித்துப் பார்க்கவும்.
(எ.கா) http://ponmalars.blogspot.com/view
Dynamic views பக்கம் தோன்றியவுடன் வலது மேல்புறத்தில் பட்டி ஒன்று கொடுக்கப் பட்டுள்ளது. இந்த ஐந்தில் உங்களுக்குப் பிடித்த டிசைனைத் தேர்வு செய்து சலிப்படையாமல் படிக்கலாம்.
வலைப்பதிவைப் படிப்பவர்களுக்கு Internet Explorer 8+, Firefox 3.5+, chrome, safari போன்றவற்றின் புதிய பதிப்புகளாக இருக்க வேண்டும்.
குறைகள் :
இந்த வசதியில் வலைப்பதிவின் அத்தனை அம்சங்களும் கொடுக்கப்பட வில்லை. உதாரணமாக விளம்பரங்கள் எதுவும் காட்டப்படாது. இதனால் வலைப்பதிவரின் விளம்பர வருமானம் பாதிக்கப்படும். ஆனால் பிளாக்கர் விரைவில் இந்த வசதிகளையும் கொண்டு வரும் எனக் கூறியுள்ளது.
பிளாக்கர் எந்த முறையில் உங்கள் தளம் தோன்ற வேண்டும் என்று அமைக்கும் Default view முறையையும் கொண்டுவரப் போகிறது. இது மட்டுமின்றி பிளாக்கரில் மேலும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
Tweet | |||
நல்ல பகிர்வு
ReplyDeleteநட்புடன்,
கோவை சக்தி
I have blog. Really super and wonderful...
ReplyDeleteRegards
http://hari11888.blogspot.com
Really wonderful looks. I preferred mosaic.
ReplyDeleteThanks for sharing.
1.எனது ப்ளாக்கில் social network subscribe me பட்டனை வைக்க விரும்புகிறேன்.அதற்கு
ReplyDeletehttp://widgetsforfree.blogspot.com
ப்ளாக்கின் சைடுபாரில் உள்ள twitter,facebook..........முதலிய பட்டன்களை அதே அளவில் அதைப்போலவே வைக்க விரும்புகிறேன்.அதில் உள்ளதை விட மேலும் சில தளங்களை இணைத்து ஒரே விஜ்ஜெட் டாக வைக்க விரும்புகிறேன்.எனக்கு தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரியாததால் இதற்கான html கோட்டிங்கை யும் எங்கெல்லாம் எனது url ஐ உள்ளீடு செய்யவேண்டும் என்று கூறமுடியுமா?எனக்கு தனியாக கூறினாலும் சரி,இதையே ஒரு பதிவாக போட்டாலும் சரி.தயவு செய்து உதவவும்.
நான் வைக்கவிரும்பும் பட்டன்கள்:
1.Follow us on twitter
2.Follow us on google buzz
3.subscribe via RSS Feed
4.subscribe via Email
5.subscribe us on YOUTUBE
6.Subscribe us on facebook
ஆகிய 6 தளங்களின் லோகோவுடன் கூடிய பட்டன்களை(http://widgetsforfree.blogspot.com)தளத்தின் சைட் பாரில் உள்ள அதே அளவில் அதேபோல் லோகோவில் ஒரே விஜ்ஜெட்டாக அமைக்க உதவும் html கோடிங்கை அளிக்க உதவுமாறு தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
பதிலை tvetsi@gmail.com க்கு தெரிவிக்கவும்
வணக்கம் பொன்மலர் ...நான் எக்ஸ்செல் வொர்க் சீட் ய் பிரிண்ட் எடுக்கும்போது தலைப்பு பிரிண்ட் ஆகவில்லை .. தலைப்புடன் பிரிண்ட் வர என்ன செய்ய வேண்டும் ... நன்றி
ReplyDelete