தற்போது இணையத்தில் FLV வகையிலான வீடியோக்கள் தான் அதிகமாக பகிரப்படுகின்றன. FLV என்பது Flash Video file எனப்படும். இவை பெரிய அளவிலான கோப்புகளை சிறிய அளவில் வீடியோவின் தரம் அதிகம் குறையாமல் தருகிறது. YouTube போன்ற பல இணையதளங்கள் இவ்வகையில் அமைந்த படங்களையே வெளியிடுகின்றன. தரவிறக்கம் செய்வதற்கும் எளிதாக இருக்கும். அதே போல YouTube தளத்தில் படங்களை ஏற்றுவது எனினும் இவ்வகையே இருக்க வேண்டும்.
நம்மிடம் இருக்கும் கோப்பை FLV வகைக்கு மாற்றுவதற்கும் அதிலிருந்து பல வீடியோ வகைகளுக்கு மாற்றுவதற்கும் நிறைய மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. பிரபலமான iSkysoft நிறுவனத்தின் மென்பொருள் தான் iSkySoft Flv Converter. இது இலவச மென்பொருள் அல்ல என்றாலும் மென்பொருளை பிரபலப்படுத்த இப்போது இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் ஒரு பிரதிக்கான மதிப்பு 25 டாலர் ஆகும்.
இந்த மென்பொருளின் மூலம் FLV கோப்புகளை எளிதாக AVI, RM, MOV, mp4, RMVB, MPG, ASF, MPEG, WMV போன்ற வீடியோ வகைகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
Youtube இல் நீங்கள் தரவிறக்கிய கோப்புகளை மொபைல் அல்லது தொலைக்காட்சியில் பார்க்கும் வகைக்கு மாற்றிக்கொள்ளலாம். இதைப் போல உங்களிடம் இருக்கும் படங்களை இணையதளங்களில் ஏற்றுவதற்கு FLV வகைக்கு மாற்றலாம்.
இந்த மென்பொருள் விண்டோசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.
தரவிறக்கச்சுட்டி :
http://www.iskysoft.com/flv-converter-windows.html
தொடர்புடைய பதிவுகள் :
1.Divx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் இலவசமாக
2.Mp3 பாடல்களை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள்
3.வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்
4.பழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்
Tweet | |||
பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றிங்க :)
ReplyDeleteபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
ReplyDeletehttp://nimzath.blogspot.com/2011/03/blog-post.html
நன்றி ...அருமையான மென்பொருள் ...நான் ஒரு தகவல் தர விரும்புகிறேன் ....கிழே உள்ள இணையபக்கத்தில் அணைத்து மென்பொருளும் license கியுடன் கிடைக்கும் ..
ReplyDeletewww.phazeddl.com
இங்கேயுள்ள search bar இருக்கும் இடத்தில நமக்கு தேவைபடுகின்ற மென்பொருளின் பெயரை type செய்தால் அது குகிள் மாதிரி அந்த மென்பொருளை தேடிக்கண்டுபிடித்து முடிவுகள் கொடுக்கும் ....முயற்சி செய்து பாருங்களேன் ....