Mar 30, 2011

பயர்பாக்ஸ் வலை உலவியின் வேகத்தை அதிகரிக்க சில வழிமுறைகள்


பயர்பாக்ஸ் (Firefox) வலை உலவி தான் உலகிலேயே அதிகம் பேர் பயன்படுத்தும் உலவியாக இருக்கிறது. இதற்கு காரணம் எளிமையான வடிவமைப்பும் வேகமும் அதிகமான ஆட் ஆன் தொகுப்புகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. பொதுவாக பயர்பாக்ஸ் முதல் முறையாக திறக்கப்படும் பொழுது மெதுவாக இயங்கும். சிலருக்கு எப்போதும் மெதுவாக இயங்கலாம். சில வழிமுறைகளின் மூலம் ஏற்கனவே இயங்கிய வேகத்தை விட சற்று அதிகப்படுத்தலாம்.

1.பார்த்த பக்கங்களின் வரலாறை நீக்குதல் (Erase History)

நீங்கள் வலை உலவியில் உலவிய பக்கங்களைப் பற்றிய வரலாறும் ஒவ்வொரு இணையதளங்களாலும் ஏற்படுத்தப் படுகிற குக்கிகளும் அதிகமாக சேர்ந்து விடுவது பயர்பாக்சின் வேகத்தைக் குறைக்கலாம். அதனால் அடிக்கடி Clear History கொடுத்து வரலாறை நீக்கி விடுங்கள். Tools->Options சென்று இதனைச் செய்யலாம்.

2.புக்மார்க்குகளை குறைத்தல் (Reduce Bookmarks)

ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த இணையதளங்களை புக்மார்க் செய்து வைப்பர். இது பின்னாளில் எளிதாக அந்த இணையதளத்தை அணுக உதவியாக இருக்கும். ஆனால் அதிகமான எண்ணிக்கையில் புக்மார்க்குகள் சேர்ந்து விடுவது பயர்பாக்ஸ் ஆரம்பிக்கும் வேகத்தைக் குறைக்கிறது. எனவே முக்கிய இணையதளங்களை மட்டும் வைத்துக் கொள்வது நலமானது.

3.ஆட் ஆன் தொகுப்புகள்

பயர்பாக்சின் சிறப்பே அதன் ஆட் ஆன் தொகுப்புகள் தான். ஆட் ஆன் தொகுப்புகள் உலவிக்கு மேம்பட்ட சிறப்பைக் கொடுக்கிறது. பல வேலைகளுக்குப் பயன்படும் ஆட் ஆன் தொகுப்புகளும் அளவான எண்ணிக்கையில் வைத்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்தாத ஆட் ஆன் தொகுப்புகளை நீக்கி விட வேண்டும்.

4.Places Database இல் உள்ள தகவல்களை நீக்குதல்

உங்கள் வலை உலவியில் நீங்கள் பயன்படுத்தும் புக்மார்க்குகள், பக்கங்களின் வரலாறு, குக்கிகள் எல்லாமே பயர்பாக்சின் Places என்ற தரவுத்தளத்தில் சேமிக்கப்படும். இவற்றை அவ்வப்போது நீக்குவதும் வேகத்தை அதிகப்படுத்தும். இந்த தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை நீக்க ஒரு சிறப்பான ஆட் ஆன் உள்ளது. Vacuum Places என்ற இந்த ஆட் ஆன் பயர்பாக்ஸ் ஆரம்பிக்கும் ஒவ்வொரு 30 வது தடவைக்கும் தானாகவே Places தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை அழித்துவிடும்.

தொடர்புடைய பதிவு:
பயர்பாக்ஸ் புக்மார்க்ஸ் மற்றும் அமைப்புகளை சேமிக்க/மீட்க MozBackup

0 comments.:

Post a Comment