Mar 26, 2011

பயர்பாக்ஸ் புக்மார்க்ஸ் மற்றும் அமைப்புகளை சேமிக்க/மீட்க MozBackup


வலை உலவிகளில் பயர்பாக்ஸ் பெரும்பாலாக பயன்படுத்த்ப் பட்டு வருகிறது. பயர்பாக்ஸ் பயன்படுத்தும் நாம் அவ்வப்போது பிடித்த இணையதளங்களை புக்மார்க் செய்து வைப்போம். கணிணியில் விண்டோஸ் வேலை செய்யாமல் போய் மறுபடியும் நிறுவும் போது நாம் பயர்பாக்சில் சேமித்த புக்மார்க்ஸ் மற்றும் சில அமைப்புகளும் இருக்காது. இந்த மாதிரி நேரங்களில் உலவியின் அமைப்புகளைச் சேமித்து வைத்து அதன் மூலம் திரும்பப் பெற்றால் நலமாக இருக்கும்.

இதற்கென இருக்கும் மென்பொருள் தான் MozBackup. இதன் மூலம் பயர்பாக்சில் நீங்கள் பயன்படுத்திய
1.புக்மார்க்ஸ் (Bookmarks)
2.சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் (Saved passwords)
3.குக்கிகள் (Cookies)
4.உலாவிய வரலாறு ( Browsing history)

போன்ற அமைப்புகளை எளிதாக பேக்கப் செய்யலாம் அல்லது சேமிக்க முடியும்.


இந்த மென்பொருள் மூலம் திரும்பவும் பயர்பாக்சினை நிறுவும் போது உங்களின் பழைய அமைப்புகளை பெற முடியும். (Restore Settings) . மேலும் பயர்பாக்சிலிருந்து வேறு ஏதேனும் வலை உலவிக்கு கூட இந்த அமைப்புகளை மாற்றிக்கொள்ள முடியும் (Transfer Firefox profile)


இன்னொரு சிறப்பான விசயம் இந்த மென்பொருள் பயர்பாக்ஸ்க்கு மட்டுமில்லை. Mozilla நிறுவனத்தின் மற்ற மென்பொருள்களான Thunderbird, SeaMonkey, Songbird, Netscape போன்றவற்றின் அமைப்புகளையும் கூட சேமிக்கவும் அமைப்புகளை மீட்கவும் பயன்படுத்தலாம்.

இதில் பேக்கப் செய்த விவரங்களை ஒரு கோப்பாகவும் சேமிக்க முடியும். அந்த கோப்பிற்கு கடவுச்சொல்லிட்டு பாதுகாப்பாக வைக்கலாம்.

குறிப்பு :

பயர்பாக்சின் புதிய பதிப்பு 4 நிறுவுபவர்கள் பழைய பதிப்பை நீக்கிவிட்டு புதிய பதிப்பை நிறுவ வேண்டும். அல்லது அப்டேட் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பயர்பாக்சின் அமைப்புகளை சேமித்து வைத்துக் கொண்டால் இந்த மென்பொருளின் மூலம் புதிய பதிப்பில் திரும்ப ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.

தரவிறக்கச்சுட்டி : Download MozBackup

0 comments.:

Post a Comment