Jun 1, 2010

போல்டரிலிருந்து நேரடியாக ISO இமேஜ்களை உருவாக்க இலவச மென்பொருள்

cd1சீடியில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களை படமாக சேமித்து வைக்கும் வடிவத்திற்கு iso என்று பெயர்.நம்மிடம் உள்ள முக்கியமான பெரிய கோப்புகளை iso ஆக மாற்றி வைத்துக்கொள்வதால் நம் தகவல் பாதுகாக்கப்படுகிறது. பல பேர் iso என்றால் புரியாமல் விழிப்பர்.


International standards organization நிறுவனத்தால் சீடியில் உள்ளவற்றை படமாக சேமிக்க குறிப்பிடப்பட்ட கருத்தாகும். அதை எப்படி எடுப்பது என்பதிலும் குழப்பங்கள் ஏற்படும்.இந்த சிக்கல்கள் இல்லாமல் எளிய முறையில் ஒரு போல்டரில் உள்ள கோப்புகளை iso ஆக மாற்ற Folder2iso என்ற மென்பொருள் உதவுகிறது. இதில் போல்டரை மட்டும் தேர்வு செய்தால் போதும்.

isoimage

அதில் உள்ள அனைத்து துணை போல்டர்கள், கோப்புகள் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. பின்னர் இதை நீங்கள் சீடியாகவும் மாற்றலாம்.இந்த iso கோப்பினை பார்க்க winrar மென்பொருளையும் பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை நீங்கள் நிறுவ வேண்டிய அவசியமில்லை. மிக குறைந்த அளவே என்பதால் பென் டிரைவிலும் வைத்து இயக்கலாம்.
தரவிறக்கச்சுட்டி :Download Folder2Iso

3 comments:

  1. blogger_logo_round_35

    ரொம்ப நாள் முன்னாடி இதை யூஸ் பண்ணிகிட்டு இருந்தேங்க.

    ஆனா.. இப்ப ImgBurn சாஃப்ட்வேரே இப்ப.. இதையும் செய்துடுது.

    ReplyDelete
  2. 40768654_2299775236716239_6505113035084922880_n

    அரிய தகவல்..
    அறியத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. blogger_logo_round_35

    வணக்கம் ,
    எனது இணைய இணைப்பு Limited Broadband ஆகும்.
    சில இணையப்பக்கங்களில் உள்ள Online Radio, Video கள் தன்னியக்கமாக இயங்குவதால் அதிகளவு MB செலவாகிறது.
    இவற்றை நிறுத்த நான் ஒவ்வொருதடவையும் Stop Button இனை அழுத்தவேண்டி உள்ளது.
    Stop Button இனை அழுத்தாமல் நிரந்தரமாகவே Online Radio கள் Play ஆவதை நிறுத்த முடியுமா.
    E-Mail: vai279@yahoo.com

    ReplyDelete