
எக்சலில் நாம் தகவல்களை பல வரிசைகளில் உள்ளிடுவொம். வழக்கம் போல முதல் வரிசையில் அவற்றிற்கான தலைப்புகளை (Column Headings) வைத்திருப்போம்.நிறைய தகவல்கள் வரிசையாக இருக்கும் போது நாம் கீழே நகர்த்தி (Scrolling ) பின்னால் வருவதைப் பார்ப்போம். கீழே செல்லச்செல்ல முதல் வரிசையில் இருக்கும் தலைப்புகள் தெரியாமல் போய்விடும். உதாரணமாக மதிப்பெண் பட்டியலை எடுத்துக்கொண்டால் வரிசையாக மதிப்பெண்கள் இருக்கும். எந்த மதிப்பெண் எந்த பாடத்தில் எடுத்திருக்கிறார்கள்...