
வலைப்பதிவு வைத்திருப்போருக்கு பிளாக்கர் தளம் பல்வேறு வசதிகளைக் கொடுத்துக் கொண்டே யிருக்கிறது. Mobile posting, Email posting, Stats போன்றவைகள் வலைப்பதிவை நடத்தும் எழுத்தாளர்களுக்கு உதவி புரியும் சேவைகளாக கொண்டு வரப்பட்டன. பிளாக்கர் தற்போது கொஞ்சம் முன்னோக்கிச் சென்று வலைப்பதிவைப் படிப்பவர்களின் கண்ணோட்டத்திலிருந்து உருவாக்கியிருக்கும் இந்த வசதி Dynamic Views என்று அழைக்கப் படுகிறத...