இணையத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) மட்டுமே பணத்தை அள்ளித்தருகிறது. அதனால் ஆட்சென்ஸில் கணக்கு பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. முதலிலிலேயே சொல்லி விடுகிறேன். தமிழில் எழுதி ஆட்சென்ஸ் கணக்கு பெற முடியாது. அதனால் ஆங்கிலத்துக்கு மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் இன்ட்லி, தமிழ்மணம் போன்ற தளங்களுக்கு எப்படிக்கொடுத்தார்கள் எனக்கேட்கிறிர்களா? இந்த தளங்களுக்கு தினசரி டிராபிக் அதிகமாக இருக்கும். ஆட்சென்ஸ் வாங்குவது தான் சிரமமாக இருக்கும். பின்னர் அதன் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு எளிதாக பயன்படுத்தலாம்.
Jan 11, 2011
ஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்வு, Domain Name பெறுதல்
13 Comments
இணையத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) மட்டுமே பணத்தை அள்ளித்தருகிறது. அதனால் ஆட்சென்ஸில் கணக்கு பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. முதலிலிலேயே சொல்லி விடுகிறேன். தமிழில் எழுதி ஆட்சென்ஸ் கணக்கு பெற முடியாது. அதனால் ஆங்கிலத்துக்கு மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் இன்ட்லி, தமிழ்மணம் போன்ற தளங்களுக்கு எப்படிக்கொடுத்தார்கள் எனக்கேட்கிறிர்களா? இந்த தளங்களுக்கு தினசரி டிராபிக் அதிகமாக இருக்கும். ஆட்சென்ஸ் வாங்குவது தான் சிரமமாக இருக்கும். பின்னர் அதன் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு எளிதாக பயன்படுத்தலாம்.
பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த குறுக்குவிசைகள் (Keyboard shortcuts)
நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் சமூக வலைத்தளங்களில் (Social Networking sites) பேஸ்புக் தான் முதலிடத்தில் உள்ளது. பல சமுக வலைத் தளங்களை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலும் முதலிடத்தில் இருந்த ஆர்குட் (Orkut) தளத்தையும் பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிலர் காலையிலிருந்து இரவு வரை பேஸ்புக்கிலேயே தான் அரட்டையடிப்பதும் பொழுதுபோக்குவதுமாய் இருக்கின்றனர். பேஸ்புக்கை வேகமாகவும் சுலபமாகவும் பயன்படுத்த விசைப்பலகையின் குறுக்குவிசைகளைப் (Keyboard shortcuts) பயன்படுத்தலாம்.
Jan 10, 2011
தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின் கட்டண விபரங்களும்
17 Comments
ஆரம்பகாலங்களில் இணையம் பயன்படுத்திய போது இது ஒரு பொறுமையை இழக்க வைக்கும் சோதனைக்குரிய விசயமாக இருந்தது. பின்னர் பிராண்ட்பேண்ட் இணைய சேவை வந்தபோது கொஞ்சம் நலமாக இருந்தது.இருந்தாலும் தொழில்நுட்ப உலகில் இதையும் மீறிய அதிவேக இண்டர்நெட் சாத்தியப்பட்ட நிலையில் பல நாடுகளில் 3G சேவை எறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஆனால் நமது நாடு 2G சேவையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. அதோ இதோ என்று இழுத்து இப்போது தான் 3G சேவையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.
Jan 8, 2011
கூகுளின் புதிய வசதி : Gmail Priority Inbox (மின்னஞ்சல்களின் முக்கியத்துவம்)
2 Comments
கூகிள் இன்றொரு புதிய வசதியை ஜிமெயில் இல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவை gmail priority inbox எனப்படுகிறது. நமக்கு தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வருகின்றன. இன்பாக்ஸில் நிறைந்து விடும் அத்தனை மின்னஞ்சல்களையும் நம்மால் படிக்க இயலாமல் சோர்ந்து போய்விடுவோம். குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்வதும் இதற்கு ஒரு தீர்வாகலாம்.இந்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சலை முக்கியமானது அல்லது முக்கியமற்றது எனக்குறித்து வைக்கலாம். முக்கியமானவற்றை மட்டும் முன்னிறுத்தி priority inbox காட்டுவதால் நமது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
Jan 5, 2011
Divx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் இலவசமாக
7 Comments
Divx என்றால் என்ன?
Divx என்பது Digital video Express என்பதன் சுருக்கமாகும். இது Divx inc நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ வகைகளுள் ஒன்றாகும் (Video format). இதன் மூலம் நம்மால் பெரிய அளவிலான வீடியோ கோப்புகளை சிறிய அளவில் சுருக்கி வைத்துக்கொள்ள முடியும். முக்கிய விசயம் என்னவென்றால் இதனால் வீடியோவின் தரம் குறைந்து விடாது என்பது தான்.