Feb 27, 2011

எக்சல் டிப்ஸ்: சில வரிசைகள் மட்டும் நகராமல் தோன்ற Freeze panes

3 Comments

எக்சலில் நாம் தகவல்களை பல வரிசைகளில் உள்ளிடுவொம். வழக்கம் போல முதல் வரிசையில் அவற்றிற்கான தலைப்புகளை (Column Headings) வைத்திருப்போம்.நிறைய தகவல்கள் வரிசையாக இருக்கும் போது நாம் கீழே நகர்த்தி (Scrolling ) பின்னால் வருவதைப் பார்ப்போம். கீழே செல்லச்செல்ல முதல் வரிசையில் இருக்கும் தலைப்புகள் தெரியாமல் போய்விடும். உதாரணமாக மதிப்பெண் பட்டியலை எடுத்துக்கொண்டால் வரிசையாக மதிப்பெண்கள் இருக்கும். எந்த மதிப்பெண் எந்த பாடத்தில் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியாது. திரும்பவும் அந்த நெடுவரிசையில் மவுசை வைத்து மேலெ சென்று அதன் தலைப்பைப் பார்த்து விட்டு வருவோம்.
Read More

Feb 26, 2011

கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite


MalwareBytes StartupLiteநாம் கணிணியை இயக்கும் போது இயங்குதளம் ஆரம்பித்தவுடன் கூடவே சில மென்பொருள்களும் தானாக தனது செயல்பாட்டைத் துவங்கும். உதாரணமாக நமது கணிணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் இருந்தால் விண்டோஸ் ஆரம்பித்ததும் இதன் செயல்பாடும் தொடங்கும். இது போல புளுடூத் சேவை, Google talk இன்னும் சில மென்பொருள்களும் தானாகவே செயல்பாடுகளைத் தொடங்கிவிடும். இந்த மாதிரி மென்பொருள்களை Startup Programs என்று சொல்வார்கள்.
Read More

Feb 24, 2011

பழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்


இரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை? பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches) பட்டு நமது தகவல்கள் காணாமல் போய்விடும்.
Read More

BSNL 2G, 3G டேட்டா கார்டுகளுக்கு இனி அன்லிமிடெட் இல்லை!

2 Comments

BSNL 2G and 3G new data tariffsபுதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3G இண்டர்நெட் சேவையில் BSNL நிறுவனம் தான் அளவில்லா இணையப்பயன்பாட்டை வழங்கிக்கொண்டிருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டிருந்த பலர் படம், பாட்டு, விளையாட்டு என தரவிறக்கி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இப்பொழுது சோகமான செய்தியாக தனது இண்டர்நெட் சேவையில் அளவில்லாப் பயன்பாட்டை நிறுத்தியிருக்கிறது. 2G மற்றும் 3G அலைக்கற்றை வரிசையில் பயன்பாட்டில் இருந்த அனைத்து பிளான்களும் தற்போது அளவுப்பயன்பாடாக மாற்றப்பட்டுள்ளது.
Read More

Feb 22, 2011

Accord அறிமுகப்படுத்திய APad டேப்ளட் பிசியின் சிறப்பம்சங்கள்.

4 Comments

கணிணி உலகில் தற்போது டேப்ளட் பிசி (Tablet pc) எனப்படும் மினி கம்ப்யூட்டர்கள் பிரபலமாக சந்தையில் உலவிக்கொண்டிருக்கின்றன. இவை ஸ்மார்ட் போன்களுக்கும் கணிணிக்கும் இடைநிலையில் உள்ளதாகவும் இரண்டிலும் உள்ள வசதிகளை கொண்டதாகவும் உள்ளன. இவற்றின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் கையடக்கக் கருவிகள் ஆகும் ( Portable devices ). பிரபல நிறுவனங்களான Dell, Hp போன்றவை சுமார் 16000 விலையில் தங்களது மினி கம்ப்யூட்டர்களை அல்லது நெட்புக்குகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் தனது டேப்ளட் பிசியாக ஐபேட் கருவியை சென்ற வருடத்தில் அறிமுகப்படுத்தியது.
Read More