Aug 6, 2011

ஆனந்த விகடன் வரவேற்பறையில் பொன்மலர் பக்கம் – நன்றி நண்பர்களே!


தமிழின் முண்ணணி வார இதழான ஆனந்த விகடனில் வாரம் ஒரு பயனுள்ள வலைப்பதிவை வரவேற்பறை பகுதியில் அறிமுகப் படுத்துவார்கள். ஒவ்வொரு முறையும் விகடனைப் படிக்கும் போது என்னுடைய வலைப்பதிவு வந்துள்ளதா என ஆர்வம் மேலோங்கி அந்தப் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். சின்ன வயதிலிருந்தே ரசித்துப் படிக்கும் புத்தகங்களில் விகடனும் ஒன்று. ஏனெனில் விகடனின் அங்கீகாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. ஆச்சரியமாக இந்த வார 10.08.2011 விகடன் இதழில் என்னுடைய வலைப்பதிவைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனந்த விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இலவசமாக எளிமையாக வலைப்பதிவை பிளாக்கரில் உருவாக்கலாம் என்று கேள்விப்பட்டு சோதனைக்கு மட்டுமே பிளாக்கரில் இணைந்திருந்தேன். ஏனெனில் என்ன எழுதுவதென்றே தெரியாமல் இருந்த பின்னர் சிலரின் தமிழ் வலைப்பதிவுகளைப் படித்த பின்னர் நமக்குத் தெரிந்த சில தொழில்நுட்ப விசயங்களை பகிரலாம் எனப் பகிர்ந்து வந்துள்ளேன்.


எதையும் எதிர்பார்க்காமல் வருமானமின்றியும் நேரத்தைச் செலவு செய்யும் வலைப்பதிவு எழுதுவது குறித்து சில நேரம் மனசுக்குள் சஞ்சலங்கள் தோன்றியிருக்கின்றன. இருந்தாலும் தொழில்நுட்பம் அறியாத பலருக்கும் நாம் எழுதுவது சிறிதளவேனும் பயன்படும் என்ற எண்ணத்திலேயே அடுத்த பதிவெழுதச் செல்வேன். வாசகர்களின் கருத்துகள் சில பதிவுகளுக்கு வராமல் இருந்தாலும் கவலைப்படாமல் என்னுள் இருக்கும் தமிழ் ஆர்வம் காரணமாக தொடர்ந்து எழுதி வந்துள்ளேன். மின்னஞ்சலில் வரும் சந்தேகங்களுக்கும் என்னால் முடிந்தளவுக்கு பதில் சொல்லியிருக்கிறேன்.

வலைப்பதிவுகளில் தீவிரமாகவும் திறமையாகவும் பல நண்பர்கள் தொழில்நுட்பம் பற்றி எழுதி வருகிறார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் நான் பெரியதாக எழுதி சாதித்து விடவில்லை என்றே மனதுக்குள் தோன்றுகிறது.

இருப்பினும் 500 க்கு மேற்பட்ட பின் தொடரும் நண்பர்கள், 1500 க்கு மேற்பட்ட மின்னஞ்சல் வாசகர்கள், 187 பதிவுகள், 3 லட்சம் பக்கங்கள் என குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் தற்போது விகடனின் பாராட்டும் என்னை மேலும் உத்வேகத்துடன் எழுத காரணமாக இருக்கின்றன.
மேலும் எனது பதிவுகளுக்கு கருத்துத் தெரிவிக்கும் முகம் தெரியா நண்பர்கள், எனது பதிவுகளுக்கு ஓட்டுப் போடும் அன்பு உள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்.

//நன்றி என்ற வார்த்தை தலைப்பில் இருப்பதால் இண்ட்லி இந்தப் பதிவைத் தானாகவே வாழ்த்துகள் பகுதியில் சேர்த்து விட்டது. உங்கள் பதிவின் தலைப்பில் நன்றி / பிறந்த நாள் வாழ்த்துகள் / 100 வது பதிவு / 200 வது பதிவு, போன்ற சொற்கள் அடங்கியிருந்தால் அவை தானாக இண்ட்லியின் விளம்பரங்கள் & வாழ்த்துகள் பகுதிக்கு சென்று விடும். நல்ல கருத்துடைய பதிவாக இருந்தாலும் இந்த சொற்களைத் தவிர்த்தால் மட்டுமே குறிப்பிட்ட பிரிவில் இணைக்க முடியும்.

91 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரி .....இதைப்போல் மேலும் பல பெருமையடைய வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் பொன்மலர் இன்னும் நிறைய வெற்றிகளை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  3. எளிய நடையில் அனைவருக்கும் புரிகின்ற வகையில் கணினி தொழிற்நுட்பம் குறித்து தொடர்ந்து பதிவெழுதி பல உள்ளங்களில் மனதாரப் பாராட்டினைப் பெற்ற தங்களுக்கு விகடனின் அங்கீகாரம் மேலும் ஒரு பூங்கொத்தினை வழங்கியுள்ளது. நான் தொடர்ந்து உங்கள் பதிவுகள் வாசித்தாலும் நேரமின்மையாலும், சில நேரங்களில் சோம்பல் காரணமாகவும் பின்னூட்டம் இட மறப்பது உண்டு. என்னைப் போலவே பல வாசகர்களும். ஆதலால், எப்பொழுதும் புதுபுது செய்திகளுடன் பதிவுலகில் உலா வாருங்கள்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள். விகடனின்
    அங்கீகாரம் என்பது பெருமைக்குறிய
    விஷயம். தகுதி இருந்ததால்
    தானே கிடைச்சிருக்கு.

    ReplyDelete
  5. Hey!! congrats!

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி

    வாழ்த்துக்கள் பொன்மலர்.

    ReplyDelete
  7. நன்றி கூடல் பாலா
    நன்றி வடிவேலன் சார்.
    வருக நெல்லி.மூர்த்தி. தங்கள் கருத்துக்கு நன்றி.
    லட்சுமி அம்மா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. //சாய்தாசன் சார், நன்றி.

    //நண்பர் குணசீலனுக்கு நன்றி.

    //நன்றி சிவா

    ReplyDelete
  9. வாழ்த்துகள் சகோதரி..!! :)

    ReplyDelete
  10. //நன்றி சேலம் தேவா

    ReplyDelete
  11. இது போல பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்.
    உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கின்றன.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  13. தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
  14. வணக்கம் உங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ள ஒன்று. உபயோகமாக எழுது நினைக்கும் உங்களுக்கு என்றும் கடவுள் ஆசி வழங்க வாழ்த்துக்கள்.

    www.ammavirku.blogspot.com

    ReplyDelete
  15. மீண்டும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்.

    ஆனந்த விகடனை பார்த்தப் பின்பு தான் உங்கள் தளத்தில் என்னை இணைத்துக்கொண்டேன்.

    ReplyDelete
  17. //நன்றி மாய உலகம்,
    //ரத்னவேல் சார் வாழ்த்துக்கு நன்றி
    //தமிழ்வெங்கட் நன்றி
    //ராசை நேத்திரன் கருத்துக்கு நன்றி
    //கருர் கிருக்கன் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  18. மேனகா அக்கா உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  19. //பலே பிரபு – உங்களுக்கு நன்றி
    நீங்கள் சொல்லித்தான் விகடனில் பதிவு வந்தது தெரியும். பின் தான் போய் விகடன் இதழ் வாங்கினேன். உங்கள் வாழ்த்துக்கு மறுபடியும் நன்றி.

    ReplyDelete
  20. உங்கள் பேஸ்புக் பேஜ் லைக் செய்யும் போது ஆகவில்லை என்ன பிரச்சினை?

    //URL or Page could not be liked because it's been blocked.//

    இப்படி வருகிறது.

    ReplyDelete
  21. ஆமாம் பிரபு. என் பேஸ்புக் பக்கத்தில் எனது பதிவுகளையும் அப்டேட் செய்ய முடியவில்லை. ஏனெனில் எனது தள முகவரி the url blocked as spam என்றே சொல்கிறது. இதுவரை எனது பதிவுகள் எதுவும் பேஸ்புக்கிலும் பேஸ்புக் பக்கத்திலும் இணைக்க முடியவில்லை. ஸ்பேம் இல்லை என்று பல முறை தெரிவித்தும் இதனை அவர்கள் சரிசெய்வதாக இல்லை. தற்போது பேஸ்புக் பேஜ் ஒன்றுக்கும் உதவாமலே இருக்கிறது. மேலும் எனது பதிவுகளின் லின்க்கை யார் இணைத்தாலும் இப்படித் தான் வருகிறது. வேறு எதேனும் வழி இருக்கிறதா?

    ReplyDelete
  22. இந்தச் சின்ன வயதிலேயே உன்னுடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பிறருக்கு உபயோகமாகத் தகவல்கள் தரவேண்டும் என்ற நல்ல எண்ணம் ஆகியவற்றுக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் இதைக் கருதுகிறேன்.. வலையுலகின் அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகள் !!

    ReplyDelete
  23. வேறு யாரேனும் உங்கள் பதிவுக்கு ஸ்பாம் request கொடுத்து இருந்தால் இதுபோல உண்டாகும். ஆனால் அங்கே லைக் செய்ய முடிகிறது. நானும் அதை ஸ்பாம் இல்லையென அனுப்பி உள்ளேன். பொருந்திறுந்து பார்ப்போம். இல்லை வேறு வழி சொல்கிறேன்.

    ReplyDelete
  24. நன்றி பலே பிரபு தங்கள் உதவிக்கு.

    ReplyDelete
  25. @சுபத்ரா

    //Hey.. Congrats diii.. Umma :))))

    //இந்தச் சின்ன வயதிலேயே உன்னுடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பிறருக்கு உபயோகமாகத் தகவல்கள் தரவேண்டும் என்ற நல்ல எண்ணம் ஆகியவற்றுக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் இதைக் கருதுகிறேன்.. //

    சுபத்ரா உன் அன்புக்கும் பாசத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தங்கம்!

    ReplyDelete
  26. மகிழ்ச்சியான செய்தி ...
    வாழும் காலத்திலேயே கௌரவிக்கப் படும் .......
    தமிழ் படைப்பாளிகள்....

    நலம் வாழ என் எந்நாளும் என் வாழ்த்துக்கள்....
    வாழ்த்துக்கள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  27. மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் சகோதரி..

    ReplyDelete
  28. விகடனில் இடம்பெற்றமைக்கும், மேலும் பல சாதனைகள் படிக்கவும் வாழ்த்துக்கள் சகோதரி!

    தங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய முடிகிறது. பிரச்சனை தங்கள் தள முகவரியில் தான். Google Short url முறையில் சோதித்து பார்த்தேன். ஆனாலும் வேலை செய்யவில்லை.

    நானும் அதை ஸ்பாம் இல்லையென அனுப்பி உள்ளேன். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள். மொபைல் பயன்பாடு சம்பந்தமாக நிறைய எதிர்பார்க்கிறேன். மிக னல்ல முயற்சி.

    ReplyDelete
  30. //பாஸ்கர் பிரசாத் தங்கள் வாழ்த்துக்கு நன்றி
    //சிவபாலன் உங்கள் கருத்துக்கு நன்றி.
    //அப்துல் பசித் வாழ்த்துக்கு நன்றி. பேஸ்புக் பேஜ் உதவிக்கும் நன்றி.
    //மதி வாழ்த்துக்கு நன்றி.
    //நட்புடன் ஜமால் உங்கள் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  31. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
    உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் பொன்மலர்!

    நுட்பம் தொடர்பாக தமிழில் பலர் எழுதி வந்தாலும், தனித்தன்மை கொண்ட உங்கள் பதிவுகள் வாசகர்களுக்கு பயனுள்ளவை.

    தொடரட்டும் உங்கள் சேவை!

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் பொன்மலர் :-)

    ReplyDelete
  34. மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  35. பொன்மலர் உங்களைப்போலவே பலர் இது பற்றி புகார் தெரிவித்து இருக்கிறார்கள். இங்கே https://www.facebook.com/topic.php?uid=2309869772&topic=19014#topic_top சென்று பாருங்கள்.

    https://www.facebook.com/help/contact.php?show_form=block_appeal இங்கே ஏற்க்கனவே நீங்கள் புகார் கொடுத்து இருப்பீர்கள். திரும்ப முயற்சிப்பதை தவிர வேறு எதுவும் வழி இருப்பதாக தெரியவில்லை. facebook கண்டுகொள்வது போல தெரியவில்லை.

    ப்ளாக்ஸ்பாட் ல் இருந்து நீங்கள் டொமைன் க்கு மாறினால் இந்த பிரச்சனை சரி ஆகலாம் என்று நினைக்கிறேன் (முகவரி மாறுவதால்).. உறுதியாக தெரியவில்லை ஒரு யோசனை தான்.

    ReplyDelete
  36. //நன்றி மாணவன்,
    //அபூ ஸாலிஹா தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
    //நன்றி கோபிநாத்,

    ReplyDelete
  37. //கிரி சார் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
    ஆமாம் சார் இந்த பேஸ்புக்கில் பல தடவை கொடுத்தும் சரியாக வில்லை. புதிய டொமைன் மாறினால் ஏற்றுக்கொள்ளும் என்பது சரியாக இருக்கலாம்.

    ReplyDelete
  38. மேலும் பல அங்கீகாரங்களையும், வாழ்த்துக்களையும் பெற்றுய்ய எனது அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. விகடன் வரவேற்பறை பக்கத்தில் வந்தது ஒரு தொடக்கம்தான். அதே விகடனில் சிறப்பு பேட்டி தருமளவு வளரவேண்டுமென விரும்பி வாழ்த்துகிறோம். வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  40. இரா. திருநீலகண்டன் QatarAugust 7, 2011 at 7:22 PM

    வணக்கம் பொன்மலர். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் தகவல்களை தரும் பொன்மலர் பக்கம் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் சகோதரி விகடன் வரவேர்ப்பறை மட்டும் அல்ல என்னைப் போன்ற பலரின் வரவேர்ப்பறையிலும் உங்கள் இணையத்தளம் உள்ளது.

    ReplyDelete
  43. மேலும் வளர வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  44. மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  45. அன்பின் தோழி, உங்கள் வலைப்பூவை தவறாது தொடர்ந்து வருகிறேன். சேவை தொடரட்டும் ! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. வருக அருட்சிவஞான சித்தர் உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

    ReplyDelete
  47. நன்றி ந.ர.செ.ராஜ்குமார். நான் பேட்டி கொடுக்குமளவுக்கு பிரபலமில்லை நண்பரே.

    ReplyDelete
  48. தாமஸ் ருபன் சார் வாழ்த்துக்கு நன்றிகள்.

    நண்பர் குமரேசன் தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

    ராஜசூரியன் நன்றி நண்பரே.

    ReplyDelete
  49. அக்கினிக்குஞ்சு நன்றி நண்பரே. உங்களின் கருத்து மனதிற்கு
    இனிமையாக இருக்கிறது.

    ReplyDelete
  50. ரிசான் செரிப் தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  51. My Best wishes for u to achieve more and more in the future for the benefit of our society.

    ReplyDelete
  52. வாழ்த்துகள் சகோதரி:)

    ReplyDelete
  53. வாழ்த்துக்கள் அக்கா
    விகடனின் பாராட்டு என்பது
    உண்மையில் ரெம்ப பெரிய பாராட்டு,
    இந்த பாராட்டில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை
    இந்த பாராட்டுக்கு நீங்கள் முழு தகுதியாவர்தான்
    என்பது என் அசைக்க முடியாத எண்ணம்

    ReplyDelete
  54. வாழ்த்துகள் பொன்மலர் அவர்களே! உங்களது சாதனைக்கு இது முதல் அங்கீகாரம். தொடரட்டும் உங்கள் தமிழ்த்தொண்டு.

    நன்றியுடன்,
    நானே!

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள் சகோ...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  56. வாழ்த்துகள் பொன்மலர்...ரொம்ப சந்தோசம் பா...

    இன்னும் நிறைய பதிவுகள் எழுது சிறப்பு பெற வாழ்த்துகள்..

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. May god bless you more & more,
    to give good health and energy,
    to share your precious pearls to this
    PONMALAR-BLOGSPOT, TO HAIL YOUR NAME AND FAME FOR EVER LOSTING GREEN.

    ReplyDelete
  59. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  60. //Vasu Thanks
    //நன்றி நீச்சல்காரன்
    //வாழ்த்துக்கு நன்றி கற்றது தமிழ் துஷ்யந்தன்

    ReplyDelete
  61. //Amazing Only
    தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார். உங்களைப் பார்த்து தான்
    நான் எழுத வந்தேன். பாராட்டுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  62. //வேலன் சார் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  63. //கீதா ஆச்சல் அக்கா தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  64. //நன்றி தோழி பிரஷா,
    //நன்றி சமுத்ரா,
    //நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
    //நன்றி மின்னி

    ReplyDelete
  65. வாழ்த்துக்கள் சகோதரி பொன்மலர் !! தங்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் விகடனின் வரவேற்பறையில் இடம்பெற்றது..!!

    தங்களின் வலைப்பூ இடம்பெற்றதில் எமது வலைப்பூவே அங்கீகாரம் பெற்றுவிட்ட மகிழ்ச்சி எனக்கு..!

    மேலும் மேலும் வளர, இந்த தங்கம்பழனியின் வாழ்த்துக்களும், வணக்கங்களும்..!!

    ReplyDelete
  66. வாழ்த்துக்கள், விகடன் ல வந்தா அது தமிழ் நாடு பூரா விளம்பரம் செஞ்ச மாதிரி , 8 லட்சம் பேர் படிப்பாங்க.. !!!!!!!!

    ReplyDelete
  67. பொன்மலர் இன்னும் நிறைய வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  68. வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்
    மேன் மேலும் எல்லா பத்திரிக்கைகளிலும் வர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  69. மென்மேலும் வளர வாழ்துகள்

    ReplyDelete
  70. வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  71. நன்றி தங்கம்பழனி,
    நன்றி சிபி செந்தில் சார்,
    நன்றி பாலா,
    நன்றி ஜலீலா கமல் அக்கா,
    நன்றி ஆனந்த்,
    நன்றி பாசமுள்ள துருவி

    ReplyDelete
  72. சந்தோசம் வாழ்த்துக்கள் என்றும் தொடரும் ....
    THANK'S
    V.THILLAI NATHAN

    ReplyDelete
  73. வாழ்த்துக்கள் பொன்மலர்.

    ReplyDelete
  74. மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் சகோதரி.

    ReplyDelete
  75. உண்மை உழைப்பு என்றும் பலன் தராமல் விடாது.

    ReplyDelete
  76. HAPPY TO HEAR THAT UR BLOG REGOGNISED BY ANANDA VIKATAN.GREAT .

    ReplyDelete
  77. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  78. Good work..keep the rapo on your self...

    ReplyDelete
  79. வாழ்த்துக்கள் பொன்மலர்.

    ReplyDelete
  80. my hearty belated congratulations Madam ....best wishes and good luck

    ReplyDelete
  81. சமிபத்தில்தான் தங்களின் வலைப்பூ தளம் பற்றி விகடனில் கண்டேன்,மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் !

    ReplyDelete