Mar 12, 2011

விண்டோஸ் 7 ரெக்கவரி டிஸ்க் – பூட் ஆகாத கணிணியை மீட்க


கணிணி பயன்படுத்தும் பலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை விண்டோஸ் சில நேரங்களில் ஆன் செய்தவுடன் பூட் ஆகாமல் செயல் இழப்பது தான். Windows cannot start, File missing or corrupt - எதாவது ஒரு கோப்பு காணவில்லை அல்லது அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டு படுத்துக் கொள்ளும். விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் சி டிரைவில் நம்முடைய முக்கியமான கோப்புகள் எதாவது இருந்தால் அவ்வளவு தான். எப்படி மீட்பது என்ற தலைவலி வந்துவிடும். வைரஸ் தாக்குதல்கள் அல்லது கணிணியின் முக்கியமான கோப்புகளை தெரியாமல் அழித்து விடும் போது இந்த மாதிரி பிழைச்செய்தியை கொடுக்கும். விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் எனின் இந்த மாதிரி தொலைந்த/ அழிந்த கோப்புகளை கண்டுபிடித்து மீட்பது கொஞ்சம் சிரமமான வேலை.

ஆனால் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துவோருக்கு இந்த வேலையை NeoSmart நிறுவனத்தின் Windows 7 Recovery disk மென்பொருள் மூலம் எளிமையாக்கலாம். இதன் மூலம் கீழ்க்கண்ட வேலைகளைச் செய்ய முடியும்.

1. Access system recovery option,
2. automated system repair,
3. complete PC backup,
4. command line prompt and
5. fixes common issues

இந்த டிஸ்க் மூலம் நீங்கள் பூட் ஆகாத கணிணியில் போட்டு Startup Repair என்று கொடுத்தால் போதும். சில நிமிடங்களில் விண்டொஸ் இயங்குதளத்தில் என்னென்ன கோப்புகள் இல்லையோ அல்லது பாதிக்கப்பட்ட கோப்புகளை சரிசெய்து உங்கள் கணிணியை பழைய நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிடும். மறுபடியும் இயங்குதளத்தை நிறுவும் கடினமான வேலையே இல்லை.

மேலும் கணிணியில் உள்ள கோப்புகளை பேக்கப் செய்வது, குறிப்பிட்ட ரீஸ்டோர் பாயிண்டிலிருந்து (System Restore point) கணிணியை மீட்பது, பொதுவாக ஏற்படும் பிழைகளை நிவர்த்தி செய்வது போன்ற அவசியமான வசதிகளைத் தந்துள்ளது. மேலும் Command prompt மூலம் நீங்களே சரிசெய்யும் வசதியும் உள்ளது.


பூட் ஆகாத கணிணியில் இந்த டிஸ்கைப் போட்டதும் F8 பட்டனை அழுத்தினால் போதும். இதன் வசதிகள் எல்லாம் மெனுவாக காட்டப்படும். கணிப்பொறி வல்லுநரை கூப்பிட வேண்டிய அவசியமின்றி நீங்களே சுலபமாக செய்து விட முடியும்.

இதனைத் தரவிறக்கினால் iso வகையிலான கோப்பாக கிடைக்கும். இதை அப்படியே சிடி/டிவிடியில் எதாவது ஒரு CD Burner மென்பொருள் கொண்டு எழுதிக் கொள்ளுங்கள். (Cd Writing) . ஐஎஸ்ஒ கோப்புகளை சிடியில் எழுதுவதற்கு ImgBurn மென்பொருள் கொண்டு பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

இந்த டிஸ்க் எந்த நிறுவனத்தின் கணிணிகளிலும் விண்டோஸ் 7 (Home, Professional, Ultimate) இன் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.

தரவிறக்கச்சுட்டி :
Download via Torrent 32 Bit | 64 Bit (143 Mb only)

தொடர்புடைய பதிவுகள் :
1.சிடியின் .bin வடிவத்திலிருந்து ஐஎஸ்ஓ வடிவமாக மாற்ற மென்பொருள்.
2.போல்டரிலிருந்து நேரடியாக ISO இமேஜ்களை உருவாக்க இலவச மென்பொருள்

8 comments:

  1. ME THE FIRST..

    USE FULL..

    NEW INFO...

    ReplyDelete
  2. மிகவும் உபயோகமான தகவல்கள். நன்றி. சிலதினங்களுக்கு முன்னர் என்னுடைய Winows 7 திறக்கக இயலாம பழுதாகியது. நான் முன்னரே Windows 7 system recovery disc எடுத்து வைத்து அதனை பயன் படுத்த இயல வில்லை. பின்னர் தொழில் நுட்ப நண்பர் மூலமாகவே சரி செய்ய முடிந்தது.
    இந்த iso வகை கோப்புகளை எப்படி சிடிக்களில் பிழை இல்லாமல் எழுதி , பின்னர் எப்படி பயன் படுத்துவது என்று சற்று விளக்கமாக எழுத வேண்டுகிறேன். இந்த முறையில் Windows 7 இல் உள்ளஅனைத்து வகை பிரிவுகளுக்கும் பொருந்துமா? என்னிடம் உள்ளது Windows 7 - Ultimate வகை.
    தயவு செய்து விளக்குங்கள் நன்றி.

    ReplyDelete
  3. //[Download Windows 7 Recovery Disc ISO 32 Bit | 64 Bit] - 143 Mb only//

    it is not working....

    ReplyDelete
  4. Thanks for commenting siva and kakku.

    This Cd image will works in all windows 7 os versions. no problem.

    i will explain how to write image files soon.

    ReplyDelete
  5. Please download via torrent only

    ReplyDelete
  6. நல்ல மென்பொருளை பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  7. Wonderful Blog

    I am a computer service engineer, very much delighted with your posts.

    my wife also belongs to karur.

    wishes to u

    pls visit my blog too!

    Vijay

    ReplyDelete
  8. உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_3381.html

    ReplyDelete