May 31, 2011
கணிணியை வேகப்படுத்த பாதுகாக்க Advanced System Care 4
5 CommentsMay 30, 2011
பயர்பாக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் நீட்சி FxChrome
6 Comments
இணைய உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பயன்படுத்தப்படும் உலாவியாக பயர்பாக்ஸ் இருந்து வருகிறது. ஆனால் கூகிள் வெளியிட்ட குரோம் உலவி தற்போது இதற்கு சவாலாக வந்து கொண்டிருக்கிறது. இதன் வளர்ச்சியும் அபரிதமாக உள்ளது. பயர்பாக்ஸ் ரசிகர்களையும் மெல்ல மெல்ல இழுத்து பயர்பாக்சின் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. குரோமின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் எளிமையான வடிவமைப்பும் அதன் வேகமும் தான். ஒரே கணிணியில் எத்தனை உலாவிகளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது வேறு விசயம்.
May 29, 2011
ஜிமெயில் கணக்கைப் பாதுகாப்பாக பயன்படுத்த 7 வழிமுறைகள்.
8 Comments
மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் பலரும் அதன் பாதுகாப்பு விசயங்களில் கவனமாக இருப்பதில்லை. ஒன்றுக்கு இரண்டாக இமெயில் இல்லாதவர்கள் எவரும் உலகில் இல்லை. நமது மின்னஞ்சல்களில் தான் முக்கியமான விவரங்கள் எல்லாம் வைத்திருப்போம். பல தளங்களில் Registration செய்த தகவல்கள், சமுக வலைத்தள விவரங்கள் மேலும் பல முக்கியமான மின்னஞ்சல்களும் வைத்திருப்போம். திடிரென்று உங்கள் ஜிமெயில் கணக்கை எவராவது சில சமயம் நண்பர்கள் கூட களவாடலாம் (hacking gmail). சரியான கடவுச்சொல் தானே வைத்திருக்கிறோம் என்று நினைத்து விட்டு விட்டால் களவாடப்பட்ட பின் புலம்ப வேண்டியது தான்.
May 28, 2011
யூனிக்ஸ் இயங்குதளம் போன்ற கூகிள் தேடல் தளம் Goosh
கூகிளின் தேடல் தளம் தான் உலகிலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இணையத்தில் நுழைந்ததும் கூகிளில் தான் முழிப்பார்கள். எந்த விசயமானாலும் அள்ளித்தரும் கூகிளை யார் தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால் கூகிளின் தேடல் தளத்தையே வித்தியாசமான முறையில் ஒருவர் அமைத்திருக்கிறார். கூகிளின் தேடல் நிரல்களைக் கொண்டு புதிய முறையில் உருவாக்கிய அவரின் பெயர் ஸ்டீபன். யூனிக்ஸில் கூகிள் தேடலைப் பயன்படுத்தினால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு தளத்தை உருவாக்கியிருக்கிறார். 
May 27, 2011
பிளாக்கர் வலைப்பூவை மொபைலில் பார்ப்பதற்கு ஏற்றபடி செய்வது எப்படி?
6 Comments
இணையத்தை விட மொபைல்களின் வளர்ச்சி அதிகமான எண்ணிக்கையில் போய்க் கொண்டிருக்கிறது. ஒரே கிளிக்கில் இணையம், சமூக வலைத்தளங்கள் என மொபைலிலேயே எல்லாவற்றையும் செய்து கொள்ளுமாறு ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்படுகின்றன. பேருந்தில் எங்கேயாவது செல்லும் போது நானும் பல வலைப்பூக்களைப் படிப்பதுண்டு. நமது வலைப்பக்கமானது இணைய உலவிகளில் படிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனால் நமது வலைப்பூவை மொபைலில் பார்க்கும் போது தெளிவான இட அமைப்புடன் தெரிவதில்லை.
May 26, 2011
இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்த BitDefender ஆண்டிவைரஸ் நீட்சிகள்
9 Comments
இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த தளத்திலிருந்து வைரஸ் வரும் என்று பயந்து கொண்டே இருப்பார்கள். உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியாது, இந்த தளத்தில் நுழைந்தால் வைரஸ் வரவேற்கும் என்று. என்னுடைய கணிணியிலும் ஒருமுறை எதோ வெப்சைட்டில் நுழையப்போய் பல வைரஸ்கள் ஊடுருவியதில் சிக்கலாகிப் போய்விட்டது. இதனைத் தடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருக்க வேண்டும். அதுவும் இண்டர்நெட் பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சாதாரண ஆண்டிவைரஸ் பேக்குகள் கணிணியிலுள்ள வைரஸ், மால்வேர்களை இவைகளை மட்டுமே சாப்பிடும்.
May 25, 2011
உங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய
9 Comments
வலைப்பதிவை நடத்துவதே போதாத வேலையென இருக்கும் போது நாம் கஷ்டப்பட்டு எழுதும் பதிவுகளை மற்றவர்கள் சுலபமாக அதை காப்பி செய்து தங்களின் வலைப்பூவில் போட்டு பேர் வாங்கிக் கொள்கின்றனர்.மேலும் எரிச்சலூட்டும் விதமாக காப்பியடித்த பதிவுகளையும் திரட்டிகளிலும் இணைத்து விடுவார்கள். சில புண்ணியவான்கள் என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியதாக நினைத்து அதற்கு பதிவு நன்று பகிர்வுக்கு நன்றி என்று கருத்துரையும் இடுவார்கள். இந்த மாதிரி மட்டமான எண்ணமுடைய சிலருக்கிடையில் சில தளங்களும் காப்பி செய்கின்றன. காப்பி செய்வதைத் தடுக்க எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் இவர்கள் நிறுத்துவதாக இல்லை.
May 24, 2011
விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு
12 Comments
விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடைமுகத்தையும் மேம்பட்ட வசதிகளையும் விரும்புவார்கள். சிறப்பம்சங்கள் பல கொண்டுள்ள இந்த இயங்குதளத்தில் பயன்படுத்தாத வசதிகள் நிறையவே உள்ளன. Windows 7 God Mode என்று மைக்ரோசாப்டால் சொல்லப்படும் இந்த உத்தி ஆச்சரியமான ஒன்றாகும். வழக்கமான பயனர்கள் செய்யத் தெரியாத காரியங்களை இதன் மூலம் செய்ய முடியும்.
May 23, 2011
ஆன்லைனில் இலவசமாக கடைகளுக்கு இன்வாய்ஸ் பில்களை விரைவாக உருவாக்க
3 Comments
பொருள் விவரப்பட்டியல் எனப்படும் இன்வாய்ஸ் பில்களை கடைகளில், நிறுவனங்களில் எதேனும் பொருள்களை வாங்கும் போது கொடுப்பார்கள். நமது கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் இன்வாய்ஸ் பில் கொடுக்க எதாவது மென்பொருள்களை (Customized Softwares) போட்டிருக்க வேண்டும். சிலர் MS-Excel மென்பொருளில் கை வலிக்க அடித்து அதை அழகுபடுத்தி அச்சிட்டுக் கொடுப்பார்கள். சிலர் டேலி மென்பொருளை நாடுவார்கள். உடனே அவசரமாக பில் தேவைப்படுகிறது என்ன செய்வீர்கள்? 
May 22, 2011
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம்
8 Comments
அன்றாட வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவைப் படுகின்றன. வேலைக்கு விண்ணப்பம் செய்தல், கல்லூரியில், ID Card போன்ற பல நிலைகளில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் அவசியமான ஒன்றாகும். நம்மிடம் டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் நல்ல புகைப்படங்கள் இருக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு எப்படி அதை பாஸ்போர்ட் அளவுக்கு மாற்றுவது எனத்தெரியாது. அவசரத்தின் போது பலரும் போட்டோ ஸ்டுடியோவுக்கே ஒடுவார்கள்.
May 19, 2011
ஒளிப்படங்களின் தரம் மாறாமல் அளவைக் குறைக்க இலவச மென்பொருள்
7 Comments
கேமராவில் அல்லது இணையத்திலிருந்து ஒளிப்படங்களை எடுக்கும் போது சில படங்களின் அளவு அதிகமாக இருக்கும். 1600x1200 போன்ற அளவுள்ள ஒளிப்படங்கள் கோப்பளவிலும் 1 Mb அல்லது 2 Mb என்று அதிகமாக இருக்கும். அதை நாம் யாருக்காவது பகிரும் போது அல்லது இணையத்தில் பதிவேற்றும் போது அல்லது பிளாக்கரில் பயன்படுத்தும் போது அது அப்லோடு ஆக அதிக நேரங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஒளிப்படத்தின் அளவைக் குறைப்பது இணையத்திலோ அல்லது மின்னஞ்சல் அனுப்பும் போது உபயோகமாக இருக்கும். கணிணியிலும் ஹார்ட் டிஸ்கின் இடம் மிச்சமாகும்.
May 17, 2011
மைக்ரோசாப்டை காலி செய்யுமா கூகிளின் புதிய குரோம் லேப்டாப்
7 Comments
கணிணி மற்றும் மென்பொருள்கள் சந்தையின் முதல்வரான மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ்க்கு இது போதாத காலம் போல. கூகிள் நிறுவனத்தால் இணைய வர்த்தகம் மைக்ரோசாப்டுக்கு பெருமளவில் குறைந்து விட்ட நிலையில் மென்பொருள்கள் சந்தையிலும் அடிவிழப் போகிறது. கூகிளின் புதிய இயங்குதளமான குரோம் (Chrome OS Notebooks) இப்போது லேப்டாப்களில் பொதிந்து விற்பனைக்கு தயாராகிவிட்டன.
மொபைல் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்க உதவும் இணையதளங்கள்
8 CommentsMay 16, 2011
கணிணியின் Font களை ஒரே நேரத்தில் முன்னோட்டம் பார்க்க உதவும் இணையதளம்.
7 Comments
நமக்குப் பிடித்த ஏராளமான எழுத்துருக்களை (Fonts) கணிணியில் நிறுவி வைத்திருப்போம். போட்டோ ஸ்டுடியோ, DTP கடைகளில் உள்ளவர்களும் அதிகமான எண்ணிக்கையில் கணிணியில் எழுத்துருக்களை வைத்திருப்பார்கள். வேர்ட் தொகுப்பில் எதாவது கோப்பொன்றை தட்டச்சிட்டு வருகையில் விருப்பமான எழுத்துருக்களை சிரமப்பட்டு தேட வேண்டியதாக இருக்கும். எந்த டிசைனில் இருக்கும் எழுத்துரு நமக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை அறிய ஒவ்வொரு எழுத்துருவாக தேர்வு செய்து பார்க்க வேண்டும்.
கணிணியை பேக்கப் செய்ய / மீட்க அவசியமான மென்பொருள் Easeus Backup
5 Comments
கணிணியைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிரமப் பட வேண்டியிருக்கிறது. திடிரென்று வைரஸ் தாக்குதலின் காரணமாக கணிணியில் உள்ள கோப்புகளை இழக்க வேண்டியிருக்கும். கணிணி கிராஷ் ஆகி பூட்டிங் ஆக மறுக்கும். மறுபடியும் விண்டோஸ் நிறுவ வேண்டியிருக்கும். சில கணிணிகளில் ஹார்ட் டிஸ்க்  செயல் இழந்து மொத்தமாக எல்லா கோப்புகளையும் தொலைக்க வேண்டி வரும். நம்மில் எத்தனை பேர் கணிணியை பேக்கப் செய்து வைக்கிறோம்? 20 சதவீதம் பேர் தான் பேக்கப் என்ற வேலையைச் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
May 15, 2011
விளையாட்டுகளுக்கு ஏற்ப கணிணியின் திறனை மேம்படுத்த Game Booster
2 Comments
கணிணியின் திறன் நன்றாக இருப்பின் கணிணியில் விளையாட்டுகளை விளையாடுவது சிறப்பானதாகும். இல்லையென்றால் கணிணி சில நேரங்களில் தொக்கி நிற்கும். மேலும் விளையாட்டுகளை கணிணியில் பயன்படுத்த கணிணியின் வன்பொருள்களின் டிரைவர்கள் சரியாக அப்டேட் செய்யப் பட்டிருக்க வேண்டும். நமக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயல்பாடுகளால் விளையாட்டுக்குத் தேவையான நினைவகம் கிடைக்காமல் போகலாம். முக்கியமாக கணிணியின் டிஸ்பிளெ மற்றும் சவுண்ட் டிரைவர்கள் (Display and Sound Drivers) சரியாக அப்டேட் செய்திருக்க வேண்டும்.
May 14, 2011
பிளாக்கர் வலைப்பதிவில் லேபிள்களை சுருக்க விரிக்க எளிமையாக்க
10 Comments
பிளாக்கர் வலைப்பதிவுகளில் எழுதும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் நாம் லேபிள்கள் (Labels) எனப்படும் வகைகள் கொடுப்போம். வகைகள் கொடுப்பதால் படிப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட வகையில் மற்ற பதிவுகளை எளிதாகப் பார்ப்பதற்கும் தேடுவதற்கும் உதவுகின்றன. இந்த வகைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் வலைப்பதிவின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இவைகளை சுருக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் மட்டும் அதை கிளிக் செய்தால் அது விரிந்து எல்லாவற்றையும் பார்க்க முடியும். படிப்பவர்களுக்கும் எளிதாக இருக்கும். வலைப்பதிவின் இட நெருக்கடியும் குறையும்.
யூடியுப் வீடியோக்களை எளிதாக mp3, mp4, flv, HD வகைகளில் தரவிறக்க பயர்பாக்ஸ் நீட்சி
5 Comments
யூடியுப் இணையதளத்தில் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட படங்கள் உள்ளன. படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறதோ இல்லையோ இதில் முன்கூட்டியே வெளியிடப்படும். இதில் படங்களைப் பார்ப்பவர்கள் பிடித்திருந்தால் தரவிறக்க வேண்டும் என நினைப்பார்கள். சிலர் மென்பொருள்களின் மூலமும் சில இணையதளங்களின் மூலமாகவும் படங்களைத் தரவிறக்கம் செய்வார்கள். இதில் படங்கள் FLV என்ற வடிவத்தில் இருக்கும். இதனால் படங்களைத் தரவிறக்கி மறுபடியும் நமக்குப் பிடித்த வடிவத்திற்கு மாற்றுவோம்.
May 10, 2011
பிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைப்பது எப்படி?
கடந்த 2010 ஆம் வருடத்தில் மிக பிரபலமான இணையதளங்களில் டுவிட்டரும் ஒன்றாகும். டுவிட்டரில் 140 எழுத்துகளில் செய்திகளை பகிர்ந்து கொண்டு உலகெங்கும் உள்ள நண்பர்களுக்கு பரப்ப முடியும். பிளாக்கரில் வலைத்தளம் வைத்திருப்பவர்கள் தங்களது பதிவுகளை ஒருமுறையாவது பதிவின் இணைப்பை டுவிட்டரில் பகிர்வது அவசியம். இது எதற்காக என்றால் டுவிட்டரில் நம்மை பின் தொடரும் நண்பர்களுக்காக பகிர்வோம். நமது வலைப்பதிவை படிக்கும் வாசகர்கள் அவர்களின் நண்பர்களுக்கு தெரிந்தவர்களுக்கு என்று நமது பதிவைப் பற்றி உடனடியாக பகிர்ந்து கொள்ள Twitter Share பட்டன்கள் பயன்படுகின்றன. இதன் மூலம் நமது பதிவு நிறைய பேரைச் சென்றடையும் வாய்ப்புள்ளது.
பயர்பாக்ஸ் உலவியின் வேகத்தைக் குறைக்கும் 9 நீட்சிகளின் பட்டியல்
2 Comments
பயர்பாக்ஸ் உலவி இணைய உலகில் பலரால் விரும்பப்படுகிறது. இதன் சிறப்பான தோற்றம், வேகம், எளிமை, அதிக அளவிலான நீட்சிகள், எந்தவொரு இணைப்பையும் கையாளும் தன்மை போன்றவை சிறப்பம்சங்கள். ஆனாலும் பயர்பாக்ஸ் கணிணியில் முதன் முதலாக திறக்கப்படும் போது கொஞ்சம் வேகம் குறைவாகத் தான் இருக்கும். இதற்குக் காரணம் ஆட் ஆன்கள் (Firefox Add ons) அல்லது நீட்சிகளை அதிகமாகப் பயன்படுத்துவது தான். நீட்சிகள் என்பவை வலை உலவியில் இணையம் பயன்படுத்தும் போது மேம்பட்ட சில வேலைகளைச் செய்ய உதவுகின்றன. 
May 9, 2011
BSNL 3G இண்டர்நெட்டை மொபைலில் பயன்படுத்துவது எப்படி?
16 Comments
தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையை அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி விட்டன என்றாலும் அனைத்து நகரங்களிலும் முழுமையாக இன்னும் வரவில்லை. இந்த சேவையில் முந்திக் கொண்ட BSNL நிறுவனம் நகரங்கள், மாவட்டங்கள், முக்கிய ஊர்களில் நன்றாக சேவையை வழங்குகிறது. 3G சேவையை பயன்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று 3G வசதியுடைய மொபைல்கள். இரண்டாவது 3G டேட்டா கார்டுகள் என அழைக்கப்படும் யூஎஸ்பி மோடம்கள் (Data cards / Usb Modems ) 
BSNL 2G லிருந்து 3G க்கும் 3G லிருந்து 2G க்கும் மாறுவது எப்படி?

BSNL நிறுவனத்தின் 3G இணைய சேவையை பயன்படுத்த புதிய சிம் 180 ருபாய்க்கு வழங்கப்படுகிறது. இதில் 120 ருபாய்க்கு அழைப்புக்கான பேலன்ஸ் மற்றும் 200 Mb டேட்டா அளவுக்கு இணையப் பயன்பாடும் தரப்படுகிறது.
BSNL 2G -> BSNL 3G
உங்களிடம் ஏற்கனவே BSNL 2G சிம் இருப்பின் அதிலிருந்து அப்படியே 3G சேவைக்கு மாறிக் கொள்ள முடியும். முதலில் உங்கள் மொபைல் போனில் 50 ருபாய் பேலன்ஸ் இருக்க வேண்டியது முக்கியம்.
பிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைப்பது எப்படி?
6 Comments
பேஸ்புக் இணையதளம் சமுக வலைத்தளங்களில் பிரபலமான இணையதளமாகும். இதில் நாள்தோறும் உலா வருவோரின் எண்ணிக்கை மிக அதிகம். நமது வலைப்பூவின் பதிவுகளை பேஸ்புக்கில் இணைப்பதால் நமது நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் என்று பெரிய கூட்டமே படிக்க வாய்ப்புள்ளது. நமது பதிவைப் படிக்கும் பலரும் தங்களது பேஸ்புக் இடத்தில் நமது பதிவுகளின் இணைப்பை பகிருவதால் இணைய வரத்தும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பேஸ்புக் புதியதாக Facebook Like என்று ஒரு பட்டனை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒரே கிளிக்கில் பதிவுகளை அவர்களது Facebook Profile இல் பகிர்ந்து கொள்ள முடியும்.
May 6, 2011
பிளாக்கர் பதிவுகளில் Google Buzz பட்டனை இணைப்பது எப்படி?
5 Comments
இணையத்தில் நமது எண்ணங்கள், ஒளிப்படங்கள், வீடியோ போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உதவும் சமூக வலைத்தளங்களைப் போல ஒரு சேவை தான் கூகிளின் பஸ் (Google Buzz). பலரின் வலைத்தளத்தில் பதிவின் எதாவது ஒரு இடத்தில் கூகிள் பஸ் பட்டனைப் பார்த்திருக்கலாம். இதன் மூலம் படிக்கும் வாசகர்கள் பட்டனைக் கிளிக் செய்து அவர்களின் கூகிள் பஸ் பக்கத்தில் நமது பதிவைப் பற்றி பகிர்ந்து கொள்ள முடியும். இந்த சேவையை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பலர் பயன்படுத்தி வருவதனால் நமது வலைப்பூவின் இணைய வரத்தை (Web Traffic) அதிகரிக்க முடியும். 
May 5, 2011
பயர்பாக்ஸ் உலவியின் டேப்களை வண்ணமயமாக்க FabTabs
3 Comments
இணைய உலவிகளில் தற்போது டேப் (Tabs) பயன்பாடு அவசியமான ஒன்றாகி விட்டது. முன்பெல்லாம் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer) உலவியில் இணையம் பயன்படுத்தும் போது வேறு பக்கத்தை பார்க்க அல்லது மற்ற எதாவது இணைப்புகளை (Links) புதிய விண்டோவில் தான் பார்க்க முடியும். ஒவ்வொரு முறையும் புதிய விண்டோ திறக்கும் அனுபவம் எரிச்சலானது. திரும்பவும் எந்த விண்டோவிற்கு செல்வது என்ற குழப்பமும் அதிகம். இப்போது ஒரே நேரத்தில் வலை உலவியின் மென்பொருளுக்குள்ளே பல பக்கங்களைத் திறப்பது தான் Tabs எனப்படுகிறது.
May 2, 2011
விண்டோஸ் 7 இயங்குதளத்தை விண்டோஸ் 8 ஆக மாற்ற Transformation Pack
7 Comments
விண்டோஸ் 7 இயங்குதளம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம், வேகமான லோடிங், கண்ணைக் கவரும் பயன்பாடுகள் என இதன் வசதிகள் அதிகம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பாக விண்டோஸ் 8 ஐ அறிவித்துள்ளது. அடுத்த வருடத்தில் இந்த பதிப்பு வெளியிடப்படும் என்றுசொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே விண்டோஸ் 8 இயங்குதளத்தின் வசதிகள் எவ்வாறு இருக்கும் என்பதனை Transformation Pack ஆக உருவாக்கி விட்டார்கள்.