May 10, 2011

பயர்பாக்ஸ் உலவியின் வேகத்தைக் குறைக்கும் 9 நீட்சிகளின் பட்டியல்


firefox+addonsபயர்பாக்ஸ் உலவி இணைய உலகில் பலரால் விரும்பப்படுகிறது. இதன் சிறப்பான தோற்றம், வேகம், எளிமை, அதிக அளவிலான நீட்சிகள், எந்தவொரு இணைப்பையும் கையாளும் தன்மை போன்றவை சிறப்பம்சங்கள். ஆனாலும் பயர்பாக்ஸ் கணிணியில் முதன் முதலாக திறக்கப்படும் போது கொஞ்சம் வேகம் குறைவாகத் தான் இருக்கும். இதற்குக் காரணம் ஆட் ஆன்கள் (Firefox Add ons) அல்லது நீட்சிகளை அதிகமாகப் பயன்படுத்துவது தான். நீட்சிகள் என்பவை வலை உலவியில் இணையம் பயன்படுத்தும் போது மேம்பட்ட சில வேலைகளைச் செய்ய உதவுகின்றன.

நீட்சிகளை அதிகமாகப் பயன்படுத்தும் போது பயர்பாக்சின் வேகத்தை (Slow Performance) மட்டுப்படுத்துகிறது. ஒரு சிலர் எதற்கென்றே தெரியாமல் பல நீட்சிகளை வைத்திருப்பார்கள். மேலும் சில நீட்சிகள் பயர்பாக்சில் இணையத்தையே பயன்படுத்த முடியாமல் போகுமளவுக்குச் செய்து விடுகின்றன. இதனால் வலைத்தளங்கள் வேகமாக லோடு ஆகாமல் மெதுவாக சுற்றிக் கொண்டே இருக்கும்.

பயர்பாக்ஸ் நிறுவனம் பயர்பாக்சின் வேகத்தையும் திறனையும் குறைக்கும் 9 நீட்சிகளின் பட்டியலைக் கொடுத்துள்ளது.

1. Firebug
2. SimiliarWeb
3. FoxLingo
4. FoxyTunes
5. Personas Plus
6. FoxClocks
7. video Download Helper
8. FastestFox
9. Feedly

Slow+performing+firefox+addons
இந்த நீட்சிகளை உங்கள் பயர்பாக்ஸ் உலவியில் பயன்படுத்தி வந்தாலோ அல்லது நிறுவியிருந்தாலோ அதனை Disable செய்து விடுங்கள். இதற்கு Firefox Menu -> Tools -> Addons சென்றால் உங்கள் உலவியில் இருக்கும் நீட்சிகளின் பட்டியல் தெரியும். இவை தேவையில்லை என்றால் சுத்தமாக Delete கொடுத்து அழித்து விடவும்.

விண்டோஸ், மேக், பெடோரா உள்ளிட்ட இயங்குதளம் வாரியாக வேகத்தைக் குறைக்கும் நீட்சிகளின் பட்டியலை பயர்பாக்சின் இணையதளத்தில் அறியலாம்.
https://addons.mozilla.org/en-US/firefox/performance/

2 comments:

  1. blogger_logo_round_35

    நண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
    திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!

    ReplyDelete
  2. woman-sweeper

    தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
    இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

    http://tamilthirati.corank.com

    ReplyDelete